நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது- விபரம்!
நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.

எஸ்யூவி மார்க்கெட்டில் பல புதிய மாடல்கள் வருகை தந்த வண்ணம் உள்ளன. இந்த மார்க்கெட்டில் இருக்கும் வர்த்தக வளத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக, அனைத்து நிறுவனங்களும் தங்களது கையில் இருக்கும் மாடல்களை தொடர்ந்து களமிறக்க தீவிரம் கவனம் செலுத்தி வருகின்றன.

அந்த வரிசையில், தற்போது நிஸான் நிறுவனம் தனது புதிய கிக்ஸ் எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. நிஸான் நிறுவனத்தின் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவுக்கான நிர்வாக கமிட்டியின் தலைவர் பேமேன் கார்கர் Autocar தளத்திடம் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது, நிஸான் நிறுவனம் அடுத்து இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கும் புதிய கார் மாடலே, இந்த புதிய கிக்ஸ் எஸ்யூவி என்பதும் தெரிய வந்துள்ளது. அடுத்த ஆண்டு இந்த புதிய கிக்ஸ் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதையும் கார்கர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Recommended Video


புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மாடலானது, ரெனோ நிறுவனத்தின் எம்0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரெனோ டஸ்ட்டர் மற்றும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் கேப்டூர் ஆகிய எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்ட அதே அடிப்படை கட்டமைப்பில்தான் புதிய கிக்ஸ் எஸ்யூவியும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

அதேநேரத்தில், தரத்தில் டஸ்ட்டர், கேப்டூர் எஸ்யூவி மாடல்களைவிட நிஸான் கிக்ஸ் ஒருபடி மேலே இருக்கும் என்பதால், விலையிலும் அதன் தாக்கம் இருக்கலாம். தரமான சிறந்த தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த புதிய மாடலை நிஸான் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
Trending On DriveSpark Tamil:

நவீன யுக கார்களுக்கு உரிய அனைத்து டிசைன் அம்சங்களையும் இந்த புதிய எஸ்யூவி மாடல் பெற்றிருக்கிறது. மேலும், ரெனோ கார்களின் டிசைன் தாத்பரியங்கள் கொண்ட நிஸான் பேட்ஜ் பொருத்தப்பட்ட மாடலாகவும் ஆட்டோமொபைல் துறையினர் வர்ணிக்கின்றனர்.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 7 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். புளுடூத், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட தொடர்பு வசதிகளை அளிக்கும். இந்த புதிய எஸ்யூவியில் மின்னணு திரையும், அனலாக் மீட்டர் கொண்ட இன்ஸ்ட்ரூமெனட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டியூவல் டோன் அப்ஹோல்ஸ்ட்ரி இதன் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கும்.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரை அளிக்கும். அதேபோன்று, டஸ்ட்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் அளிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியானது ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்டூர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ரூ.15 லட்சத்தையொட்டிய விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
Trending On DriveSpark Tamil:


Click it and Unblock the Notifications








