போப் ஃபிரான்சிஸிற்கு மின்சார கார் வழங்கப்பட்டதன் பின்னணி; காரணத்தை வெளியிட்டது ஓபெல் நிறுவனம்..!!

மின்சார கார் பயன்பாட்டை வலியுறுத்தி போப் ஃபிரான்சிஸிற்கு வெள்ளை நிற ஓபெல் ஏம்பெரா-இ எஸ்.யூ.வி கார் பரிசாக வழங்கப்பட்டது.

By Azhagar

கத்தோலிக்க திருச்சபையின் மதகுருவான போப் ஆண்டவர் ஃபிரான்சிஸிற்கு பிரபல ஐரோப்பிய கார் தயாரிப்பு நிறுவனமான ஓபெல் , மின்சார மின்சார பயன்பாடு கொண்ட, எஸ்.யூ.வி காரை பரிசாக வழங்கி உள்ளது.

மின்சார காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!

ஜெனரல் மோட்டார்ஸின் ஐரோப்பிய இணைப்பு நிறுவனமான ஓபெல் , கடந்த 6ம் தேதி போப் ஃபிரான்சிஸிற்கு மின்சாரத்தால் இயங்கும் ஓபெல் ஏம்பெரா-இ எஸ்.யூ.வி காரை பரிசாக வழங்கியுள்ளது.

மின்சார காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!

போப் ஆண்டவர் ஃபிரான்சிஸிற்கு வழங்கப்பட்ட ஓபெல் ஏம்பெரா-இ எஸ்.யூ.வி கார் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் திறன் கொண்டது.

மேலும், இந்த கார், ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்காவில் வெளியிட்ட செவர்லே போல்ட் காரின் வடிவமைப்பை கொண்டு உருவானது.

மின்சார காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!

வாடிகன் சிட்டியில் நடைபெற்ற நிலைத்தன்மை பற்றிய மாநாட்டின் போது, ஓபெல் நிறுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கார்ல் தாமஸ் நியூமென், ஏம்பெரா-இ எஸ்.யூ.வி காரை போப்பிற்கு வழங்கி உள்ளார்.

மின்சார காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!

போப் ஃபிரான்சிஸிற்கு வழங்கப்பட்டு இருக்கும் ஏம்பெரா-இ எஸ்.யூ.வி காரை, ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், சுமார் 520 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டது.

மின்சார காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!

போப் பயன்படுத்தும் வாகனங்கள் மிகப்பெரிய மதிப்புடையதாக கருதப்படுகின்றன.

அதனால், அவரது வாகனங்கள் குறித்து எந்த செய்தி வெளியானாலும், உடனே அது வைரலாகி விடும்.

மின்சார காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!

இதுப்பற்றிய செய்தி வெளியான உடன், போப்பின் ஆதரவாளர்கள் பலர் காரின் செயல்பாட்டு திறன் மற்றும் அதனுடைய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டு இணையத்தில் டிரண்டாக்கி விட்டனர்.

மின்சார காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!

ஓபெல் நிறுவனம் ஏம்பெரா-இ எஸ்.யூ.வி காரை போப்பிற்கு வழங்குவதில் மிகப்பெரிய பின்னணியும் உள்ளது. உலகளவில் மின்சார கார் பயன்பாடு முக்கியத்துவம் பெற்று வருகிறது.

மின்சார காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!

இதை உலக மக்கள் உணர்ந்து கொள்ளும் நோக்கில் மின்சாரத்தால் இயங்கும் காரை போப் ஃபிரான்சிஸிற்கு வழங்கி ஓபெல் கார் தயாரிப்பு நிறுவனம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மின்சார காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!

மின்சார கார் உற்பத்தியின் அவசியத்தை புரிந்துக்கொண்ட போப் ஃபிரான்சிஸும் ஓபெலின் இந்த பரிசை ஏற்றுக்கொண்டார். காரணம், போப் பொதுவாக பரிசுகளை ஏற்கக்கூடியவர் அல்ல.

மின்சார காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!

மேலும், போப் பயன்படுத்தும் வாகனங்கள் பழுதானல் அவை அதிக தொகைக்கு விற்கப்படுகின்றன. சமீபத்தில் இவ்வாறு விற்கப்பட்ட வாகனம் ஒரு ஃபியட் நிறுவனத்தின் கார்.

மின்சார காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!

ஃபிலடெல்ஃபியா பயணத்தின் போது இந்த ஃபியட் காரை போப் அங்கு தனது போக்குவரத்திற்காக பயன்படுத்தினார்.

அவர் வாடிகன் வந்த பிறகு, ஏலத்தில் சுமார் 82,000 அமெரிக்க டாலருக்கு ஃபியட் கார் விற்பனை ஆனது.

மின்சார காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!

இந்த தொகை முழுவதும் ஃபிலடெல்பியாவில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கீழ் உள்ள அனைத்து தேவாலயங்களின் மேம்பாட்டு நிதிக்காக கொடுக்கப்பட்டது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
General Motors' European affiliate Opel has presented Pope Francis with an Ampera-e electric vehicle. Click for Detials...
Story first published: Tuesday, June 13, 2017, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X