முதல்முறையாக டீசலை டோர் டெலிவிரி பெறும் வசதி பெங்களூரில் அறிமுகம்!

Written By:

உணவுப் பொருட்கள், மளிகை சாமான்களை டோர் டெலிவிரி பெறுவது போலவே டீசலையும் டோர் டெலிவிரி பெறும் சேவை பெங்களூரில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

முதல்முறையாக டீசலை டோர் டெலிவிரி பெறும் வசதி பெங்களூரில் அறிமுகம்!

Mypetrolpump என்ற பெயரில் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஏஎன்பி ஃப்யூவல்ஸ் நிறுவனத்தின் அங்கமாக இந்த சேவை துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவை பெட்ரோல் நிலையங்களில் க்யூ கட்டி நிற்கும் பிரச்னைக்கு சிறந்த மாற்று வழியாக அமைந்துள்ளது.

முதல்முறையாக டீசலை டோர் டெலிவிரி பெறும் வசதி பெங்களூரில் அறிமுகம்!

www.mypetrolpump.com என்ற இணையதளத்தின் மூலமாக டீசலை ஆர்டர் செய்ய முடியும். சந்தை விலையிலேயே டீசலை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. குறைந்தபட்ச டெலிவிரி சார்ஜ் ரூ.99 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

முதல்முறையாக டீசலை டோர் டெலிவிரி பெறும் வசதி பெங்களூரில் அறிமுகம்!

100 லிட்டர் வரை ஆர்டர் செய்தால் ரூ.99 டெலிவிரி சார்ஜாக செலுத்த வேண்டும். அதேசமயம், 100 லிட்டருக்கு மேல் என்றால், ஒவ்வொரு லிட்டருக்கும் ரூ.1 வீதம் டெலிவிரி சார்ஜ் செலுத்த வேண்டும். அதாவது, சந்தையில் டீசல் விலையுடன் ரூ.1 மட்டும் கூடுதலாக செலுத்தினால் போதுமானது.

முதல்முறையாக டீசலை டோர் டெலிவிரி பெறும் வசதி பெங்களூரில் அறிமுகம்!

எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட பெட்ரோல் டீலர்களிடமிருந்து, மைபெட்ரோல்பம்ப் நிறுவனம் சப்ளையை பெற்று விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பெட்ரோலிய துறை விதிமுறைகளை பின்பற்றி இந்த சேவையை மைபெட்ரோல்பம்ப் நிறுவனம் வழங்குகிறது.

முதல்முறையாக டீசலை டோர் டெலிவிரி பெறும் வசதி பெங்களூரில் அறிமுகம்!

பெங்களூரில் எச்எஸ்ஆர் லே அவுட், கோரமங்களா, பெல்லந்தூர், பிடிஎம் மற்றும் பொம்மனஹள்ளி ஆகிய இடங்களில் தற்போது இந்த சேவை கிடைக்கிறது. படிப்படியாக பெங்களூர் முழுவதும் இந்த சேவையை வழங்குவதற்கு மைபெட்ரோல்பம்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதல்முறையாக டீசலை டோர் டெலிவிரி பெறும் வசதி பெங்களூரில் அறிமுகம்!

அத்துடன், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த டோர் டெலிவிரி சேவையை பெற முடியும். விரைவில் 24 மணிநேரமும் இந்த சேவையை வழங்க மைபெட்ரோல்பம்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதல்முறையாக டீசலை டோர் டெலிவிரி பெறும் வசதி பெங்களூரில் அறிமுகம்!

பரபரப்பு மிகுந்த காலை, மாலை வேளைகளில் பெட்ரோல் நிலையங்களில் க்யூ கட்டி நிற்பவர்களுக்கு இந்த சேவை சிறந்ததாக இருக்கும். மேலும், குறித்த நேரத்தில் டோர் டெலிவிரி செய்யப்படும் என்றும் இந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இதன்மூலமாக, நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் பெட்ரோல் நிலையங்களில் வந்து நெருக்கடி ஏற்படுத்துவதை தவிர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
You can order fuel online in Bangalore by visiting www.mypetrolpump.com. The Government of India recognises the startup company.
Story first published: Saturday, June 24, 2017, 11:15 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark