டொயோட்டா பிரையஸ் காருக்கு சக்தி தரும் சோலார் பேனல்
பேனசோனிக் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய சோலார் பேனல்கள் டொயோட்டா பிரையஸ் பிரைம் கார் பேட்டரிகளுக்கு சக்தி ஊட்டும் வகையில் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
மரபு சாரா எரிசக்தி துறையின் தேவை அனைத்து துறைகளிலும் வருங்காலத்தில் இன்றியமையாததாக இருக்கப்போகிறது. ஆட்டொமொபைல் துறையிலும் தற்போது அவற்றின் தேவை வளர்ந்தே வருகிறது. அதை கருத்தில் கொண்டு டொயோட்டா நிறுவனத்தின் பிரையஸ் பிரைம் கார்களில் எரிசக்தி தேவைக்கு சோலார் பேனல்களை நிறுவியுள்ளனர். இவை ஆஃப்ஷனாலக கிடைக்கின்றன.

சோலார் பேனல்கள் பொதுவாகவே விலை மதிப்புமிக்கவையாக உள்ளன. கொடுக்கும் விலைக்கு கிடைக்கும் நன்மையின் அளவைப் பொருத்து வெகு சிலரே அதனை தேர்ந்தெடுக்கின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு இணக்கமான சூரிய சக்தி மின் ஆற்றலை தரும் சோலார் பேனல்களை கார்களில் உபயோகப்படுத்தும் ஆராய்ச்சியினை மேற்கொண்டு புதிய சோலார் பேனல் ஒன்றினை பேனசோனிக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது கார்களின் மேற்கூரையில் பொருத்தப்படும் வகையிலானது.

ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்துடன் தொழிற்கூட்டு வைத்துள்ள பேனசோனிக், டொயோட்டா பிரையஸ் பிரைம் கார்களுக்காக உருவாக்கியுள்ள புதிய சோலார் மேற்கூரை பேனல் அதிகபட்சமாக 180 வாட்ஸ் ஆற்றலை தயாரிக்கும் திறன் கொண்டது.

ஹைபிரிட் காரான டொயோட்டா பிரையஸ் பிரைம் காரின் மேற்கூரையில் நிறுவப்பட்டுள்ள சோலார் பேனல், ஒரு நாள் முழுவதும் சூரிய ஒளியில் நிறுத்தப்பட்டிருந்தால் பிளக்-இன்- ஹைபிரிட் சிஸ்டத்திற்கு 5.95 கிமீ ஓடக்கூடிய சக்தியை அளிக்கும் என டொயோட்டா நிறுவனம் கூறுகிறது.

காரின் ஏரோடைனமிக்ஸை இந்த சோலார் பேனல்கள் மாற்றாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா பிரையஸ் பிரைம் காரானது 4 சிலிண்டர்கள் கொண்ட 1.8 லிட்டர் விவிடி இஞ்சின் உள்ளது, இதனுடன் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 120 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.
ஃபோர்சே அறிமுகப்படுத்திய புதிய 911 ஆர்எஸ்ஆர் லீமன்ஸ் காரின் படங்கள்:


Click it and Unblock the Notifications








