இன்னும் 8 ஆண்டுகளில் அழிந்துபோகும் பெட்ரோல், டீசல் வாகனங்கள்; புத்துணர்ச்சி பெறும் மின்சார ஆற்றல்..!

2030ம் ஆண்டிற்குள் உலகளவில் வாகனங்கள் மின்சார ஆற்றல் கொண்டு இயங்கும் என ஸ்டார்ண்ட்ஃபோர்டு பல்கலைகழகத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

By Azhagar

தொழில்நுட்ப மாற்றங்களில் புதிய கட்டமைப்புகள் அறிமுகமாகும் போது, அதை சார்ந்த பழைய வழிமுறைகள் ஏதாவது வழக்கொழிந்து போகும்.

இந்த வரிசையில் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாடு உலகளவில் மறைந்து விடும் என, அதுவும் இன்னும் 8 ஆண்டுகளில் நடக்கும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அழிவு காலம் தொடங்கியது!

அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார வல்லுநர் டோனி செபா, உலகளவில் நடைபெற்று வரும் மரபு சார்ந்த எரிபொருள் 2030ம் ஆண்டிற்குள் முற்றிலுமாக முடிந்துவிடும் என்கிறார்.

மேலும், பெட்ரோலுக்கு மாற்றாக வாகனங்களுக்கு மின்சாரம் ஆற்றலாக அமையும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அழிவு காலம் தொடங்கியது!

ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சமீபத்தில் இதுப்பற்றிய ஆய்வு கட்டுரை சமர்பிக்கப்பட்டது. அதில் கிடைத்த சில முடிவுகளை வைத்தே டோனி இவ்வாறு கூறுகிறார்.

மரபு சார்ந்த எரிபொருட்களில் முதலீடு செய்யப்படுவதை விட மின்சார துறை சார்ந்த செயல்பாடுகளில் இனி முதலீடு செய்தால் அது லாபமாக அமையும் என்பது டோனியின் கருத்தாக உள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அழிவு காலம் தொடங்கியது!

'ரீதிங்கிங் டிரான்ஸ்போர்ட்டேஷன் 2020-2030' என்ற பெயரில் ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைகழகம் உலகளவில் நடத்திய ஆய்வில்,

எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி மற்றும் விற்பனை திறன் ஆகியவற்றை சார்ந்து நடக்கவுள்ள சில மாற்றங்கள் பற்றியும் தெரியவந்துள்ளன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அழிவு காலம் தொடங்கியது!
  • மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, பல வாடிக்கையாளர்கள் அதில் தானியங்கி வாகன தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுக்கலாம்.
  • பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை பராமரிப்பதை விட மின்சார வாகனங்களின் பராமரிப்பு 10 மடங்கு குறைவாகும்.
  • இதனால் எரிசக்திக்கு ஆகக்கூடிய செலவு என்று எதுவுமில்லை என்பது கூடுதல் சிறப்பு
  • ஆயுட்காலம் குறித்த தேர்வுகளில்
    • மின்சார வாகனங்கள்- 16,10,240கி.மீ (குறைந்தபட்சம்)
    • மரபு சார்ந்த எரிபொருட்கள் கொண்ட வாகனங்கள்- 3,22,000கி.மீ (குறைந்தபட்சம்)

    போன்ற தரவுகள், இந்த ஆய்வின் மூலம் மின்சார வாகன உற்பத்தியை பலப்படுத்தும் விதத்தில் கிடைத்துள்ளன.

    பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அழிவு காலம் தொடங்கியது!

    இனி வரும் காலங்களில் பெட்ரோல் நிலையங்கள், உதிரிபாகங்கள் போன்ற தேவைகள் விலகுவதை நாம் கண்கூடாக பார்க்கலாம் என்கிறது ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைகழகத்தின் ஆய்வு.

    ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலத்தை புரிந்துக்கொண்டுள்ள பல முன்னணி கார் நிறுவனங்கள், தங்களிடமுள்ள தயாரிப்புகளை விரைவில் விற்க பெரும் திட்டங்களை தயாரித்து வருவதாக பொருளாதார நிபுணர் டோனி செபா கூறுகிறார்.

    பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அழிவு காலம் தொடங்கியது!

    புவிவெப்பமயமாதலை தடுக்க மின்சார வாகன சந்தையை பல நாடுகள் நிச்சயமாக ஊக்குவிக்கும். அதனால் மின்சாரம் நிச்சயம் வாகனங்களுக்கு ஆற்றலாக மாறும்.

    வாகனங்களிலிருந்து வெளியாகும் CO2 மற்றும் NOx போன்ற நச்சு வாயூக்களை தடுக்க, சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் எஞ்சினகளுக்கு தான் இந்தியா உட்பட பல உலக நாடுகள் அனுமதி தருகின்றன.

    பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அழிவு காலம் தொடங்கியது!

    மின்சார வாகன பயன்பாட்டிற்கு உலகளவில் அடித்தளம் அமைத்த நாடு நார்வே தான். அங்கு மின்சாரத்தால் இயங்கும் கார்களுக்கு மட்டுமே அனுமதி என்பது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.

    இருந்தாலும், பொது போக்குவரத்து ஊர்திகள் பல இன்னும் பெட்ரோலில் தான் இயங்கி வருகின்றன.

    பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அழிவு காலம் தொடங்கியது!

    இருந்தாலும், கனரக வாகனங்களுக்கும் மின்சாரத்தை ஆற்றலாக மாற்றும் முயற்சியில் நார்வே அரசு தீவிரமாக வேலை செய்து வருகிறது.

    ஆனால் நார்வேவிற்கு முற்றிலும் மாற்றாக இஸ்ரேல் நாட்டில், மின்சார வாகன பயன்பாடு என்பது கனரக வாகனங்களில் மூலம் தான் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அழிவு காலம் தொடங்கியது!

    சீனா, தென் கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்று பல நாடுகளும் மின்சார அற்றலுக்கு மாற ஆய்த்தமாகி வருகின்றன.

    இந்த வரிசையில் இந்தியாவிலும் 2030ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களும் மின்சார ஆற்றல் கொண்டு இயக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அழிவு காலம் தொடங்கியது!

    அதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய அரசு துவங்கிவிட்டது. மின்சார ஆற்றலை ஆட்டோமொபைல் துறையில் செயல்படுத்த பெரும்பாலும் நார்வே நாட்டை இந்தியா பின்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் மின்சார வாகன கால் டாக்ஸி சேவை வரும் 26ம் தேதி நாக்பூரில் அறிமுகப்படுத்துப்படுகிறது.

    இதில் கிடைக்கும் வரவேற்பை வைத்து இந்திய அரசு தேசியளவில் மின்சார வாகன பயன்பாட்டை உருவாக்க திட்டங்கள் அமைக்கலாம் என தெரிகிறது.

Most Read Articles
English summary
Petrol And Diesel Cars Will Vanish In 8 Years. Global oil business will end as soon as 2030 says study. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X