தீபாவளிக்காக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை போலீசாரின் பலே திட்டம்..!!
தீபாவளிக்காக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை போலீசாரின் பலே திட்டம்..!!
தீபாவளி பண்டிகைக்காக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அந்நகர காவல்துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

வரும் புதன்கிழமை தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. அதற்காக சென்னையில் இருந்து பலர் தங்களது ஊர்களுக்காக செல்ல ஆய்த்தமாகி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பேருந்துகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதை தடுக்க 6 இடங்களில் பேருந்துகளை நிறுத்தி, சென்னை நகருக்குள் அனுப்ப சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது.
Recommended Video


கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகளை, மலர் வணிக வளாகத்தில் உள்ள மைதானங்களில் நிறுத்திவைத்து அங்கிருந்து போக்குவரத்துக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.

வெளியூர் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு சந்தையில் உள்ள ‘இ' சாலையில் நிறுத்தத்திலிருந்து, 'பி' சாலை வழியாக சென்று பூந்தமல்லி நெடுஞ்சாலை மூலம் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அனுப்பப்படும்.

குறிப்பாக வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் வடபழனி 100 அடி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மார்கங்களில் இருந்து சென்னை வரும் வாகனங்கள், 15,16,17 மற்றும் 23-ம் தேதிகளில் மதியம் 2 மணி முதல் இரவு 2 மணி வரை செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஜி.என்.டி சாலை, மாதவரம், திருவள்ளூர் சாலை, மதுரவாயல் சுங்கச்சாவடி, ஜி.எஸ்.டி சாலை, வண்டலூர் பாலம் வழியாக இயக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழாக்காலங்களில் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் இருப்பது இயல்பானது தான். தென்மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் வாகன ஓட்டுநர்கள் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகள் வழியாக செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் வழியாக செல்ல அறிவித்தப்பட்டுள்ளார்கள்.

சென்னையில் தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள இந்த போக்குவரத்து திட்டம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








