பி.எஸ். 4 எஞ்சின் கார்களில் வாடிக்கையாளர்களின் தேர்வு? விவரம்

Written By:

பி.எஸ். 3 எஞ்சினுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததை அடுத்து, பெரும்பாலான கார் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே தங்களது புதிய தயாரிப்புகளை பி.எஸ்.4 எஞ்சினைக் கொண்டு உருவாக்கி விட்டனர்.

தற்போது மார்கெட்டில் பி.எஸ்.4 எஞ்சினில் இயங்கும் பிரபலமான கார்களை குறித்த பட்டியலை பார்க்கலாம்.

ரெனால்ட் கிவிட்

ரெனால்ட் கிவிட்

ஹேட்ச்பேக் வடிவமைப்பை கொண்ட கார்களில் ரெனால்ட் நிறுவனத்தின் கிவிட் மாடல் வெளியானபோது தனித்துவமான அடையாளமாகி போனது. காரின் வடிவமைப்பு, செயல்பாடு, புதிய தொழில்நுட்பம் என அனைத்தும் கூர்ந்து நோக்கப்பட்டது.

1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த காரில், 5-ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

டாடா டியாகோ

டாடா டியாகோ

இந்தியாவில் வலம் வரும் ஹேட்ச்பேக் மாடல்களுக்கு போட்டியாக டாடா அறிமுகப்படுத்திய கார் தான் டாடா டியாகோ. டாடா தயாரிப்புகளுக்கு இருந்த குறைவான வரவேற்பை சந்தையில் மீட்டுதந்த காராகவும் நாம் டியோகோ மாடலை குறிப்பிடலாம்.

பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் சிறந்த கார்கள் பற்றிய தகவல்கள்

தேர்ந்த வடிவமைப்பு, ஒலிக்கும் இசையை மிரட்டும் வகையில் கேட்கக்கூடிய இசை அமைப்பு, துல்லியமான வழிகாட்டுதலை காட்டும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் என கொடுக்கும் பணத்திற்கு மதிப்பான தொழில்நுட்பங்கள் டியோகோ காரில் இருக்கின்றன.

பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் சிறந்த கார்கள் பற்றிய தகவல்கள்

டியோகோ கார் 1.2 லிட்டர் திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் கொண்ட டீசல் எஞ்சின் என இரண்டு மாடல்களிலுமே வெளிவந்துள்ளது. மேலும் இரண்டு மாடல்களிலும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மாருதி சூசிகி டிசைர்

மாருதி சூசிகி டிசைர்

செடான் வகை கார்களில் இந்தியாவில் நல்ல விற்பனையில் இருந்து வரும் மாடல் மாருதி நிறுவனத்தின் சூசிகி டிசைர். தாரளமான இடம், அதிக எரிவாயுவை நிரம்பக்கூடிய டேங்க் என தனிப்பட்ட தேவைகளுக்கு டிசைர் ஒரு சிறந்த கார்.

பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் சிறந்த கார்கள் பற்றிய தகவல்கள்

வசதிகள் திருப்திகரமாக இருந்தாலும், தோற்றம் காருக்கு எதிர்மறையான ஒன்றாக அமைந்துவிட்டது. ஆனால் தொடர்ந்து அதிகரித்த வரவேற்பு காரணமாக இந்தியாவின் அதிக பிரபலமான கார்களுக்கான பட்டியலில் மாருதி சூசிகி டிசைர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் சிறந்த கார்கள் பற்றிய தகவல்கள்

சூசிகி டிசைர் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களிலுமே வெளிருகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட சூசிகி டிசைரில் 5- ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் தொழில்நுட்பம் என வசதிக்கு ஏற்றவாறு கிடைக்கிறது.

1.3 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாருதி சூசிகி டிசைர் காரில் 5- ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தொழில்நுட்பம் உள்ளது.

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி

ப்ரீமியம் வசதிகள் கொண்ட கார்களில் பார்க்க ஸ்டைலாகவும், தோற்றத்தில் நேர்த்தியும் கொண்ட கார் என்றால் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது ஹோண்டா சிட்டி. காலத்திற்கு ஏற்றவாறு மாறி வந்தாலும், ஹோண்டா சிட்டி தனது தயாரிப்பில் ஒரு ராயலட்டியை கொண்டே வருகிறது.

பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் சிறந்த கார்கள் பற்றிய தகவல்கள்

இந்தியாவில் ஹோண்டா சிட்டி பிரபலமாக இருப்பதற்கு அதனுள் இருக்கும் டிஜிட்டல் கட்டுபாடு அமைப்புகளும் ஒரு காரணம் என்ற கருத்து பரவலாக உள்ளது.

பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் சிறந்த கார்கள் பற்றிய தகவல்கள்

ஹோண்டா சிட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வருகிறது. ஹோண்டாவின் தயாரிப்புகளில் மட்டுமே இருக்கும் i-VTEC எஞ்சின் இந்த இரண்டு எரிவாயுகளிலும் இயங்க தயாரிக்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் எஞ்சின் மாடலில் 5-ஸ்பீடு மெனுவல் கியர்பாக்ஸும் மற்றும் டீசல் தயாரிப்பில் 6- ஸ்பீடு கியர் பாக்ஸும் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி சூசிகி சியாஸ்

மாருதி சூசிகி சியாஸ்

மாருதி நிறுவனத்தின் ப்ரீமியம் ரக கார்களை தயாரிக்க அந்நிறுவனம் உருவாக்கி வைத்திருக்கும் அமைப்பு தான் நெக்ஸா அவுட்லெட்ஸ். இதன்மூலம் மாருதி சியாஸ் மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது.

பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் சிறந்த கார்கள் பற்றிய தகவல்கள்

பெட்ரோல், டீசல் மாடல்களில் வெளிவரும் சியாஸ் காரில், டீசல் மாடலில் ஹைப்ரிட் டெக்னாலஜி உள்ளது. பெட்ரோலில் இயங்கும் சியாஸ் மாடல்களில் 5- ஸ்பீடு கியர் பாக்ஸ் அல்லது 4-ஸ்பிடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மேலும் டீசல் மாடல் 5-ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் திறனில் மட்டும் உள்ளது.

பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் சிறந்த கார்கள் பற்றிய தகவல்கள்

மாருதி நிறுவனம், சியாஸ் மாடலை தொடர்ந்து 1.3 லிட்டர் டீசல் எஞ்சினில் இயங்கும் பெர்ஸா மாடல் காரும் பி.எஸ்.4 எஞ்சினில் தயாரிக்கிறது. இந்த காரில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

ஃபோர்டு ஈகோ ஸ்போர்டு

ஃபோர்டு ஈகோ ஸ்போர்டு

மலிவான எஸ்.யூ.வி ரக கார்களை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தியது ஃபோர்டு நிறுவனம் தான். ஈகோ ஸ்போர்ட் என்ற பெயரில் வெளியான இந்த காரில் ஆபத்துக்காலதில் உதவும் 6 காற்றுப் பைகள், தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளது.

பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் சிறந்த கார்கள் பற்றிய தகவல்கள்

பெட்ரோல், டீசல் எஞ்சினில் வெளிவரும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார் பெட்ரோலில் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் என இரண்டு திறன்களில் தயாரிக்கப்படுகிறது. டீசல் மாடலில் ஹோண்டா ஈகோஸ்போர்டு 1.5 லிட்டர் எஞ்சின் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

ரெனால்ட் டஸ்டர்

ரெனால்ட் டஸ்டர்

சிறந்த டிரைவிங் மற்றும் தேர்ந்த சவாரியியும் தருவதால் ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் எஸ்.யூ.வி காருக்கு இந்திய சாலைகளில் வரவேற்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.

பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் சிறந்த கார்கள் பற்றிய தகவல்கள்

பெட்ரோல், டீசல் மாடல்களில் வெளிவரும் ரெனால்ட் டஸ்டர் காரின், டீசல் மாடல் அதிக திறன் கொண்டதாக உள்ளது. 1.5 டீசல் எஞ்சினில் இயங்கும் இந்த மாடல் 108 பி.எச்.பி பவரை தரும்.

ஹூண்டாய் கிரெட்டா

ஹூண்டாய் கிரெட்டா

ரெனால்டை போலவே ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரும் எஸ்.யூ.வி மாடலில் அதிக விற்பனை திறனை இந்திய மார்கெட்டில் கொண்டுள்ளது.

பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் சிறந்த கார்கள் பற்றிய தகவல்கள்

வடிவமைப்பிற்காக பலரையும் கவர்ந்து வரும் கிரெட்டா கார் அழகியல் கொண்ட காராகவும் ஆட்டோமொபைல் உலகில் பார்க்கப்படுகிறது. டீசல் மற்றும் பெட்ரோலில் வெளிவரும் கிரெட்டா எஸ்.யூ.வி காரில் பெட்ரோல் மாடலுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

பி.எஸ். 4 எஞ்சினில் இயங்கும் சிறந்த கார்கள் பற்றிய தகவல்கள்

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு பி.எஸ் 3 எஞ்சினுக்கு இந்திய அரசு தடை வித்தித்துள்ளது. பொறுப்புள்ள குடிமகனாக நாம் இருக்கும்பட்சத்தில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களை நாம் பயன்படுத்த முயல்வோம்.

English summary
Here are some of the most popular passenger cars you can buy which will not be affected by the upcoming emission regulations.
Please Wait while comments are loading...

Latest Photos