தீபாவளி சீசனுக்கு இந்த 5 ஹேட்ச்பேக் மாடல் கார்களில் உங்களின் தேர்வு என்ன..??

Written By:

விழாக்கால பொருளாக வாடிக்கையாளர்கள் பலர், புதிய கார் வாங்கும் ஆர்வத்தில் இருக்கலாம். அவர்களுக்கான தேவைகளுடன் இந்த பக்கம் எழுதப்பட்டுள்ளது.

விழாக்கால சீசனுக்கான 5 பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள்..!!

இந்தியாவில் அதிகரித்து வரும் வாகன நெரிசலுக்கு ஹேட்ச்பேக் மாடல் கார்கள் தற்போதைய சூழலுக்கு ஏற்றது.

இயக்கம் தொடங்கி, பார்க் செய்வது வரை ஹேட்ச்பேக் மாடல் என்றால் கொஞ்சம் சுலபம். அதுவே இதில் ஒரு பெரிய லாபமும் கூட.

விழாக்கால சீசனுக்கான 5 பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள்..!!

தீபாவளியை முன்னிட்டு தங்களது வீடுகளில் புதிய உறுப்பினராக காரை இணைத்துக்கொள்ளும் முனைபில் உள்ளவர்களுக்காக...

இந்த விழாக்கால நேரத்தில் சிறந்த ஹேட்ச்பேக் கார் மாடல்கள் என்னென்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

ரெனால்ட் கிவிட்

ரெனால்ட் கிவிட்

தலைப்பை பார்த்தவுடன் பலரும் இந்த கார் நிச்சயம் பட்டியலில் இருக்கும் என முன்பே எண்ணியிருக்கலாம். ஆம் இந்தியாவின் தலைசிறந்த ஒரு ஹேட்ச்பேக் மாடலாக வலம் வருவது ரெனால்ட் கிவிட் தான்.

என்ட்ரி லெவலில் இன்ஃபோடெயின்மெண்ட் , இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றை டிஜிட்டலில் தரும் ஒரே மாடல் ரெனால்ட் கிவிட் தான்.

விழாக்கால சீசனுக்கான 5 பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள்..!!

1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல்களில் வேரியண்டுகளுக்கு ஏற்றவாறு மேனுவல் அல்லது ஏ.எம்.டி கியர்பாக்ஸ் தேவை அடங்கி இருக்கிறது.

'கேம் சேஞ்சர்' மாடல் என்று குறிப்பிடப்படும் கிவிட் மாடலில் ரெனால்ட் நிறுவனம் விழாக்காலத்தை முன்னிட்டு புதிய 'கிளைம்பர் எடிசன்' காரை

வெளியிட்டுள்ளது.

விழாக்கால சீசனுக்கான 5 பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள்..!!

மிகவும் அழகியல் தோற்றம் கொண்ட இந்த காரில் மேட்டாலிக் பூச்சு தேர்வு, பொலிவான பிம்பம் தரும் ஓ.ஆர்.வி.எம், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் போன்ற அம்சங்ள் உள்ளன.

Recommended Video
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மாருதி சுசுகி இக்னிஸ்

மாருதி சுசுகி இக்னிஸ்

ப்ரீமியம் தர கார்கள் வெளியிடப்படும் நெக்ஸா ஷோரூமில் மாருதியின் இக்னிஸ் அறிமுகமானது.

விலை சற்று அதிகம், இது ப்ரீமியம் தரமா என்ற சந்தேகங்களுடன் ஒருவாரு போட்டியை தொடக்க நிலையில் சமாளித்தது இக்னிஸ்.

விழாக்கால சீசனுக்கான 5 பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள்..!!

ஆனால் தொடர்ந்து உருவான வரவேற்பு மற்றும் பாராட்டுதலால் மாருதி சுசுகி இக்னிஸ் காருக்கு கஸ்டமைஸ் வடிவம் தரும் தேவை வரை மாருதி சுசுகி சென்றது.

யூ-வடிவம் கொண்ட எல்.இ.டி டி.ஆர்.எல், டச்ஸ்கீரின் அமைப்பு, ஆப்பிள் கார்பிளே, ஆண்டார்ய்டு ஆட்டோ, அதிக இடவசதி கொண்ட கேபின், மிரர் லிங் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.

விழாக்கால சீசனுக்கான 5 பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள்..!!

பெட்ரோல் மற்றும் டீசல் தேவைகள் என இரண்டிலும் விற்பனைக்கு வரும் இந்த காருக்கு தனிப்பட்ட தேவைகளுடன் கூடிய அமைப்பு, நிறம் மாற்றம் போன்ற கஸ்டமைஸ் தேர்வுகளும் உள்ளன

மாருதி சுசுகி பலேனோ

மாருதி சுசுகி பலேனோ

இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்களில் நல்ல விற்பனை திறன் பெற்ற மாடல்களுள் ஒன்று பலேனோ கார். 1 லிட்டர் பூஸ்டர் ஜெட் எஞ்சினை கொண்ட இந்த கார்

செயல்திறன் தளத்தில் நற்பெயரை பெற்றுள்ளது.

விழாக்கால சீசனுக்கான 5 பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள்..!!

ஹூண்டாய் ஐ20, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்ட இந்த கார் 1.2 லிட்டர் கே-சிரீஸ் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் என இருவேறு தேர்வுகளுடன் விற்பனையில் உள்ளது.

விழாக்கால சீசனுக்கான 5 பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள்..!!

பலேனோ காரில் புதிய ஆர் எஸ் வேரியண்டை சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டது. 1 லிட்டர் திறன் கொண்டு மூன்று சிலிண்டரை பெற்ற இந்த காரில் டார்போசார்ஜிடு பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சினை பெற்றுள்ளது.

விழாக்கால சீசனுக்கான 5 பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள்..!!

ஸ்போர்டி ஹேட்ச்பேக் மாடலான இந்த கார் ரூ.10 லட்சம் விலை மதிப்பில் உள்ளது. 101 பிஎச்பி பவரை வழங்க வல்ல இந்த கார் இந்த விழாக்காலத்தில் சிறந்த தேர்வாக உங்களுக்கு அமையும்.

ஹூண்டாய் ஐ10 கிராண்டு

ஹூண்டாய் ஐ10 கிராண்டு

2013ல் வெளியான இந்த கார், நடுத்தர அளவுக்கொண்ட ஹேட்ச்பேக் காரில் சிறந்த விற்பனை திறனை பெற்ற மாடலாக உள்ளது.

பெரியளவிலான இடவசதி, புதிய க்ரில், ரீவைஸிடு பம்பர், ஆப்பிள் கார்பிலே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கொண்ட 7-இஞ்ச் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் உள்ளன.

விழாக்கால சீசனுக்கான 5 பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள்..!!

இதனுடைய 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட காரை, ஹூண்டாய் சமீபத்தில் வெளியிட்டது. இது மிகவும் செயல்திறன் மிக்கதாக அந்நிறுவனம் தயாரித்துள்ளது.

விழாக்கால சீசனுக்கான 5 பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள்..!!

இந்தியாவில் பெரியளவிலான விற்பனை திறனை பெற்றுள்ள இந்த கார், மிகவும் ஸ்மார்ட்டான செயல்திறனுடன் உள்ளது.

மிட்-சைஸிடு ஹேட்ச்பேக் மாடலில் வெற்றிநடைப்போட்டு வரும் இந்த கார், தொடர்ந்து இந்த விழாக்கால விற்பனையிலும் வெற்றி அடையும்.

 மினி கூப்பர்

மினி கூப்பர்

சாதரண ஹேட்ச்பேக் மாடல் கார் உங்களுக்கான தேர்வாக இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது மினி கூப்பர் மாடல்.

அல்டிமேட் ஹேட்ச்பேக் மாடலான இந்த கார் 2-டோர் மற்றும் 5-டோர் தேர்வுகளிலும், பெட்ரோல் மற்றும் டீசல் தேவைகளிலும் வெளிவருகிறது.

விழாக்கால சீசனுக்கான 5 பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள்..!!

கூடுதலாக இந்த மாடலில் ஜான் கூப்பர் வோர்க்ஸ் எடிசன் மாடல் வெளியானது இது 200 பிஎச்பி பவரை தரும் திறன் பெற்றது.

முன்பக்க சக்கரத்தால் இயங்கும் திறன் பெற்ற இந்த காரில் டாகில் ஸ்விட்சஸ், சர்குளர் டிஸ்பிளே போன்ற அம்சங்களும் அடங்கியுள்ளன.

விழாக்கால சீசனுக்கான 5 பிரபலமான ஹேட்ச்பேக் கார்கள்..!!

புதிய செக்மெண்டுகள் மற்றும் சப்-செக்மெண்டுகள் கொண்ட பலவாறான ஹேட்ச்பேக் மாடல் கார்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளன.

இதில் தங்களுக்கான மாடலை சிறந்த முறையில் தேர்வு செய்து வீட்டிற்கு கொண்டு வந்து, உங்களது புதிய ஹேட்ச்பேக் மாடல் காருடன் தீபாவளியை இன்பமாக கொண்டாடுங்கள்.

English summary
Read in Tamil: List of Popular Hatchbacks To Buy This Diwali. Click for Details...
Story first published: Thursday, September 7, 2017, 12:53 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos