பி.எஸ். 4 விதிமுறைகளின் எதிரொலி: வாகன விலை அதிரிப்பு

அதிரடியான விலை குறைப்பு நடவடிக்கையால் தற்போது பி.எஸ்.3 எஞ்சின் பொருத்தப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Azhagar

புதிய பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, வாகனங்களின் விலை 6 முதல் 10 சதவிதம் வரை உயருகிறது. இதனால் 50 டன் வரையில் வணிக ரீதியான வாகனங்களின் விலை உயர்த்தப்படும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

6 முதல் 10 சதவீதம் வரை வாகனங்களின் விலை அதிகரிப்பு

பி.எஸ். 3க்கான தடையை நீக்கக்கோரிய வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் மனுவில் ,

  • 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள்
  • 16,000 கார்கள்
  • 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும்
  • 96,000 வர்த்தக வாகனங்கள்
  • என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.

    6 முதல் 10 சதவீதம் வரை வாகனங்களின் விலை அதிகரிப்பு

    இந்தியாவில் சாதரணமாக ஒரு மாதத்தில் 60, 000 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பி.எஸ்.3 எஞ்சினுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இந்தியளவில் இரண்டு நாட்களில் சுமார் 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    6 முதல் 10 சதவீதம் வரை வாகனங்களின் விலை அதிகரிப்பு

    பி.எஸ். 3 மீதான தடை உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில் பெரும்பாலான முன்னணி வாகன தயாரிப்பாளர்கள் ரூ. 5,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ. 30000 வரை சலுகைகளை வழங்கினர்.

    6 முதல் 10 சதவீதம் வரை வாகனங்களின் விலை அதிகரிப்பு

    ஒரு சில டீலர்கள் ஒரு மாடல் பைக் வாங்கினால், நவி மினி பைக் போன்ற கியர் இல்லாத வண்டிகள் இலவசம் என்று கூட அறிவித்தனர். இதன்காரணமாக கடந்த மார்ச் 30 மற்றும் 31ம் தேதிகளில் வாகன விற்பனை இந்தியாவில் அமோகமாக நடைபெற்றது.

    6 முதல் 10 சதவீதம் வரை வாகனங்களின் விலை அதிகரிப்பு

    மஹிந்திராவின் பெரும்பாலான தயாரிப்புகளுக்கு பிரச்சனை இல்லை என்று நினைத்திருந்த நிலையில், அந்நிறுவனத்தின் வெற்றிக்கரமான படைப்பாக இருக்கக்கூடிய போலரோ, ஸ்கார்பியோ மற்றும் தார் ஆகிய எஸ்.யூ.வி கார்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளன.

    6 முதல் 10 சதவீதம் வரை வாகனங்களின் விலை அதிகரிப்பு

    மாடல்களுக்கு தகுந்தவாறு பி.எஸ். 3 எஞ்சின் பொருத்தப்பட்ட மஹிந்திராவின் பொலரோ எஸ்.யூ.வி கார் , அதிரடியான விலைக் குறைப்பு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    இன்னும் சில இடங்களில் இந்த காருக்கு தொடர்ந்து போட்டோபோட்டி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிலர் முறைகேடுகளில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    6 முதல் 10 சதவீதம் வரை வாகனங்களின் விலை அதிகரிப்பு

    ஏற்கனவே ஒருவருக்கு விற்கப்பட்ட பொலரோ காரை மற்றவரிடம் ஆசைக்காட்டி, பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விடக்கூடிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆகையால் பொலரோ காரை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வண்டியின் அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள்.

    பொலரோ என்று மட்டுமில்லாமல், அனைத்து மோட்டார் வாகனங்களையும் விசாரித்து வாங்குவது தான் இந்த நேரத்தில் கைக்கொடுக்கும்.

    6 முதல் 10 சதவீதம் வரை வாகனங்களின் விலை அதிகரிப்பு

    பி.எஸ். 3 பொருதப்பட்ட வாகனங்கள் இந்தியளவில் ஏறக்குறையை அனைத்தும் விற்பனைசெய்யப்பட்டு விட்டதாக உறுதியான தகவல்கள் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துக்கொண்டுள்ளன. பண்டிகை காலங்களில் வரக்கூடிய சலுகைகளை விட கடந்த 2 நாட்களில் எதிர்பாராத சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டன.

    6 முதல் 10 சதவீதம் வரை வாகனங்களின் விலை அதிகரிப்பு

    மார்ச் மாதத்தின் இறுதி நாட்களில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை வரலாற்றிலேயே அதிரடியான சலுகைகள் அறிவித்து, வணிக வாகன விற்பனையில் புதிய சாதனை பதிவாகியுள்ளது.

    பி.எஸ். 3 எஞ்சினுக்கான தடையை உச்சநீதி மன்றம் உறுதிசெய்த பிறகு, வாகன தயாரிப்பில் உள்ள பெருநிறுவனங்களின் விற்பனை விவரம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
on order to clear its BS III vehicle stock, vehicle production companies have announced huge discounts and made little bit profit
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X