ரூ.60 லட்சம் மதிப்புடைய ஆடம்பர காரில் நிலத்தை உழுத இந்திய விவசாயி: ஆச்சர்யத்தில் ஆட்டோமொபைல் உலகம்!

Written By:

நிலத்தை உழும் பணிகளை செய்ய மனிதன் ஏர், களப்பை போன்ற சாதனங்களை முதலில் உருவாக்கினான்.

பிறகு தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டு ஏர், களப்பைகள் தூக்கி வீசப்பட்டு டிராக்டர் நிலத்தை உழும் பணிகளை செய்தன.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

பிறகு தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டு ஏர், களப்பைகள் தூக்கி வீசப்பட்டு டிராக்டர் நிலத்தை உழும் பணிகளை செய்தன.

தற்போது டிராக்டர்களுக்கான காலமும் முடிந்துபோய், இனி விவசாய நிலங்களில் உழும் பணிகளுக்காக பெரிய எஸ்.யூ.வி கார்களை விவசாயிகள் பயன்படுத்துவார்கள் போல.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

இது ஏதோ கற்பனை என்று நினைத்துவிடாதீர்கள், எஸ்.யூ.வி-க்கள் விவசாயத்திற்காக பயன்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என, பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் உணர்த்தியுள்ளார்.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

எஸ்.யூ.வி கார்களை வாங்கவேண்டும் என்று பலருக்கும் இருந்த கனவுகளில் முதன்மையான மாடலாக இருந்தது மிட்சுபிஷி மான்டிரோ எஸ்.யூ.வி.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

ஐரோப்பிய நாடுகளில் மிட்சுபிஷி ஷோகன் என்ற பெயரிலும், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் மிட்சுபிஷி மான்டிரோ அல்லது பஜேரோ என்ற பெயரிலும் இந்த மாடல் கார் விற்பனையில் இருக்கிறது.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

1980 முதல் தற்போது வரை நான்கு தலைமுறைகளை கடந்து ஆட்டோமொபைல் உலகில் கில்லியாக இருக்கும் மிட்சுபிஷி மான்டிரோ கார் இந்தியாவில்சென்னை திருவள்ளூர் மாவட்டத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

தமிழகம் உட்பட இந்தியாவின் சில முக்கிய பகுதிகளில் 2014ம் ஆண்டு வரை மான்டிரோ அல்லது பஜோரோ எஸ்.யூ.வி கார் விற்பனை உச்சத்தில் இருந்தது என்பது குறிபிடத்தக்கது.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

தோற்றத்தாலும், சொகுசான சில வசதிகளாலும் முதன்மையாக இந்த கார் இருந்தாலும், தற்போது தனிநபர் வாகனத்திற்கான விற்பனையில் மிட்சுபிஷி மான்டிரோ இந்தியாவில் பின்தங்கி தான் உள்ளது.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

பெரிய வரலாற்றையே தன்னுள் வைத்திருக்கும் இந்த காருக்கு இப்படி இரு நிலை ஏற்படும் என்று மிட்சுபிஷி நிறுவனமே எதிர்பார்த்திருக்காது.

சுமார் ரூ.60 லட்சம் மதிப்பு கொண்ட இந்த காரை பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாய நிலங்களில் டிராக்டர் செய்யும் பணிகளுக்காக பயன்படுத்தி வருகிறார்.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

விவாசய நிலங்களில் இறங்கி சேற்றில் சக்கரத்தை ஓட்டி, மண்ணை சமன்படுத்தவும், நாத்து நடுவுவதற்கு முன்பு செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் மிட்சுபிஷி மான்டிரோ எஸ்.யூ.வி கார் செய்தது.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

இதை அந்த விவசாயின் நண்பர் ஒருவர் விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, அது தற்போது வைரலாகியுள்ளது.

மேலும், அந்த விவசாயிடம் டொயோட்டா லேண்ட் க்ரூஸர், ஃபார்ச்சூனர் போன்ற கார்களும் உள்ளதாம்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மிட்சுபிஷி மான்டிரோ காரை எடுத்துக்கொண்டு விவசாய களத்தில் உழவு செய்ய வைத்துவிட்டார்.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

தற்போது வட மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருவதால், டிராக்டர்களை பயன்படுத்தி உழுவதற்கு அதிக நேரமாகும். மேலும் வேலையும் வீணாகும். அதை தவிர்க்கவே, பணிகளை துரிதமாக முடிக்க விவசாயி மான்டிரோ எஸ்.யூ.வி காரை பயன்படுத்தியதாக நண்பர் தெரிவித்துள்ளார்.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

ரூ.60 லட்சம் விலைக்கொண்ட மிட்சுபிஷி மான்டிரோ எஸ்.யூ.வி காரில் 3.2 லிட்டர் டர்போ சார்ஜிடு எஞ்சின் உள்ளது. இது 441 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த எஸ்.யூ.வி காரில் 4 சக்கரங்களையும் நான் கட்டுப்படுத்தலாம்.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

மேலும் இந்த மாடல் கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 12 கி.மீ வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது.

சில சூழ்நிலைகளில் மிட்சுபிஷி மான்டிரோ எஸ்.யூ.வி கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 10 கி.மீ மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

மின்னணு பிரேக் விநியோகம் (EBD), தானியங்கி பிரேக் அமைப்பு (ABS), செயல்திறன் நிலைத்தன்மை, ஹைட்ராலிக் பிரேக் உதவி மற்றும் முன், பின் பகுதிகளுக்கு உட்பட மொத்த 6 ஏர் பேகுகள் என பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் கவனமீர்க்கிறது.

டிராக்டராக மாறி நிலத்தை உழுத மிட்சுபிஷி மான்டிரோ!!

சொகுசு, செயல் திறன், ஆடம்பரம், பாதுகாப்பு, நிலைத்தனமை என பல்வேறு விதங்களில் சிறந்த மாடலாக உள்ளது மிட்சுபிஷி மான்டிரோ எஸ்.யூ.வி கார்.

இருந்தாலும் தனிநபர் தேவையை பொருத்தவரை இந்தியாவில் தற்போது மான்டிரோ எஸ்.யூ.வி காருக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை.

இந்தியாவில் முன்னணி மாடலாக இருக்கும் இந்த கார் விவசாய நிலங்களில் செயல்படுவது குறித்து ஆட்ட்டோமொபைல் ஆர்வலர்கள் பெரியளவில் கருத்துக்கூறவில்லை.

மிட்சுபிஷி மான்டிரோ எஸ்.யூ.வி கார் நிலத்தில் உழும் காட்சிகள் வலைதளங்களை கலக்கி வருகிறது. அதை நீங்களும் பாருங்கள்...

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mitsubushi Montero SUV Car has been used as a Tractor by a Punjab Farmer. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark