புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

By Saravana Rajan

ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனம் இந்திய வர்த்தகத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, தனது புதிய வெலர் எஸ்யூவியை இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் 4வது எஸ்யூவி மாடலாக இந்தியாவில் களமிறக்கப்பட்டு இருக்கும் ரேஞ்ச்ரோவர் வெலர் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

ரேஞ்ச்ரோவர் குடும்ப வரிசையில் மிக அட்டகாசமான அம்சங்களுடன் வந்துள்ளது வெலர். ரேஞ்ச்ரோவர் எவோக் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு இடையிலான விலை ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

மேட்ரிக்ஸ் லேசர் ஹெட்லைட்டுகள், வசீகரிக்கும் க்ரில் அமைப்பு உள்ளிட்டவை சிறப்பு சேர்க்கின்றன. எவோக் எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்களையும் காண முடிகிறது.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

பின்னோக்கி சரியும் கூரை அமைப்பு, 22 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், இரட்டை குழல் புகைப்போக்கி குழல்கள் போன்றவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

புதிய ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள் உருவாக்கப்படும் அலுமினிய கட்டமைப்பில்தான் இந்த புதிய வெலர் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சென்ட்ரல் கன்சோலில் இரண்டு திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கானது. மற்றொன்று கட்டுப்பாட்டு அமைப்பாக இருக்கிறது.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

இந்த கார் 247 பிஎச்பி பவரை வழங்க வல்ல 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும், 177 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 297 எச்பி பவரை அளிக்க வல்ல 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

இந்த காரில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் 2 நநுட்பம், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், கார் கிளம்பும்போது சக்கரங்கள் வழுக்காமல் செல்வதற்கான லோ டிராக்ஷன் லான்ச், ஆட்டோநாமஸ் எமெர்ஜென்சி பிரேக், டிரைவர் கண்டிஷன் மானிட்டரிங் சிஸ்டம் என பல வசதிகள் உள்ளன.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

ரூ.78.83 லட்சம் முதல் ரூ.1.38 கோடி வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் ஜனவரி மாதம் இறுதியிலிருந்து இந்த காரின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும்.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

இந்தியாவில் ஆடி க்யூ7, பிஎம்டபிள்யூ எக்ஸ்5, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ மற்றும் வால்வோ எக்ஸ்சி90 ஆகிய சொகுசு ரக எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். போர்ஷே கேயென் மற்றும் எஃப் -பேஸ் மாடல்களுக்கும் போட்டியை தரும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 7, 2017, 15:19 [IST]
English summary
Range Rover Velar launched in India. Prices for the new Range Rover Velar start at Rs 78.83 lakh ex-showroom (India). Bookings for the Velar have begun, while deliveries will commence from the end of January 2018.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+