கிவிட் முதல் டஸ்ட்டர் வரை ரெனால்ட் கார்களின் விலை உயர்ந்தது... கேப்டூர் காருக்கு மட்டும் விதிவிலக்கு
கிவிட் முதல் டஸ்ட்டர் வரை ரெனால்ட் கார்களின் விலை உயர்ந்தது... கேப்டூர் மாடலுக்கு மட்டும் விதிவிலக்கு..!!
மாருதி சுஸுகி, மஹிந்திரா, இன்னோவாவை தொடர்ந்து வரும் ஜனவரி முதல் ரெனால்ட் கார்களின் விலையும் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் தயாரிக்கும் மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்காரணமாக தயாரிப்பு நிறுவனங்கள் கார் விலையை வரும் புத்தாண்டு ஆண்டு முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

இந்த வரிசையில் ரெனால்ட் நிறுவனமும் புதியதாக இணைந்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கிவிட், லாட்ஜி, டஸ்டர் ஆகிய கார்களின் விலை 2018 ஜனவரி 1 முதல் 3% வரை உயருகின்றன.

ஆனால் ரெனால்ட் சமீபத்தில் வெளியிட்ட கேப்டூர் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் விற்பனை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விலையிலேயெ தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video


கார்களின் விலை ஏற்றத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள ரெனால்ட் நிறுவனம், அதற்கு மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சரக்கு போக்குவரத்து செலவீனங்கள் அதிகரிப்பு ஆகியவற்றை காரணமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்திற்கு கிவிட் ஹேட்ச்பேக் கார் தான் அதிக விற்பனை திறனை பெற்ற மாடலாக உள்ளது.

மேலும் இதனுடைய ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான தயாரிப்பு பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த புதிய கிவிட் கார் 2018ல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் காரும் அடுத்தாண்டில் புதிய அவதாரம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான படங்களையும் அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

இந்தியாவில் பெரிய வியாபார வட்டத்தை பெற்றுள்ள ரெனால்ட் கிவிட் காருக்கு, இந்த விலை அதிகரிப்பு நடவடிக்கை பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என்று தெரிகிறது.

எனினும், ரெனால்ட் நிறுவன கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், டிசம்பர் 31ம் தேதிக்குள் கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

ரெனால்ட் நிறுவனத்தை போலவே இந்தியாவில் மஹிந்திரா, ஸ்கோடா, ஃபோர்டு, ஃபோக்ஸ்வேகன், டாடா மோட்டார்ஸ், இசுஸு மற்றும் டொயோட்டா என பல்வேறு நிறுவனங்கள் தங்களது விலை உயர்வு நடவடிக்கைகளை ஏற்கனவே அறிவித்துவிட்டன.

ஜனவரி 1, 2018 முதல் காருக்கான விலை உயர்த்தப்படும் என்று புதியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிறுவனம் ரெனால்ட் தான்.

இருப்பினும் அது சமீபத்தில் வெளியிட்ட கேப்டூர் காருக்கு விலை மாற்றம் ஏதுமில்லை என்று அறிவித்திருப்பது, பல வாடிக்கையாளர்களை நிம்மதி அடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








