மின்சார ஆற்றலில் தயாராகும் ரெனால்ட் கிவிட் கார்... தலைமை அதிகாரி தகவல்..!!

மின்சார ஆற்றலில் தயாராகும் ரெனால்ட் கிவிட் கார்... தலைமை அதிகாரி தகவல்..!!

By Azhagar

மின்சார வாகன தயாரிப்பில் பல முன்னணி நிறுவனங்கள் கால்பதித்து வரும் வேளையில் தற்போது ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும் இதில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

புதிய அவதாரம் எடுக்கும் கிவிட் ஹேட்ச்பேக் கார்.. ரெனால்ட் தகவல்..!!

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ள நிலையில், ரெனால்ட் சீனாவில் மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனை செய்ய முடிவுவெடுக்கப்பட்டுள்ளது.

புதிய அவதாரம் எடுக்கும் கிவிட் ஹேட்ச்பேக் கார்.. ரெனால்ட் தகவல்..!!

கிவிட் ஹேட்ச்பேக் மாடல் வடிவில் தயாராகவுள்ள இந்த மின்சார கார், சீனா ஆட்டோ துறைக்கு ஏற்றவாறான விலையில் கிடைக்கும் என்று ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய அவதாரம் எடுக்கும் கிவிட் ஹேட்ச்பேக் கார்.. ரெனால்ட் தகவல்..!!

ரெனால்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் தலைவருமான கார்லோஸ் கோஷன் சீனாவிற்கு ஏற்றவாறான காரை அந்நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறியுள்ளார்.

புதிய அவதாரம் எடுக்கும் கிவிட் ஹேட்ச்பேக் கார்.. ரெனால்ட் தகவல்..!!

மேலும் இதற்காக நிஸான் மற்றும் மிட்சுபிஷி நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் ரெனால்ட் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்ற உள்ளார்கள்.

புதிய அவதாரம் எடுக்கும் கிவிட் ஹேட்ச்பேக் கார்.. ரெனால்ட் தகவல்..!!

ரெனால்ட்டின் மின்சார கார், சீனாவில் வெளியிடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் முடிவுகளை வைத்து, அடுத்தக்கட்டமாக இந்தியா, பிரேசில் உட்பட பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வரும்.

புதிய அவதாரம் எடுக்கும் கிவிட் ஹேட்ச்பேக் கார்.. ரெனால்ட் தகவல்..!!

2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகனங்களை மின்சார ஆற்றலுக்கு மாற்றி மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

புதிய அவதாரம் எடுக்கும் கிவிட் ஹேட்ச்பேக் கார்.. ரெனால்ட் தகவல்..!!

இதற்காக அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் சுமார் 10,000 மின்சார கார்களை இந்தியாவில் களமிறக்க மத்திய அரசு டாடா மற்றும் மஹிந்திரா உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

புதிய அவதாரம் எடுக்கும் கிவிட் ஹேட்ச்பேக் கார்.. ரெனால்ட் தகவல்..!!

இது தவிர சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் மின்சார வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான திட்டங்களில் இறங்கியுள்ளன.

புதிய அவதாரம் எடுக்கும் கிவிட் ஹேட்ச்பேக் கார்.. ரெனால்ட் தகவல்..!!

சுஸுகி இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்யவும், அதற்கு தொழில்நுட்ப தேவைகளை டொயோட்டா ஏற்படுத்தி தரவும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

புதிய அவதாரம் எடுக்கும் கிவிட் ஹேட்ச்பேக் கார்.. ரெனால்ட் தகவல்..!!

சுஸுகி மற்றும் டொயோட்டோவால் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் அனைத்தும் இந்தியாவில் 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

புதிய அவதாரம் எடுக்கும் கிவிட் ஹேட்ச்பேக் கார்.. ரெனால்ட் தகவல்..!!

2030-ம் ஆண்டில் அனைத்து வாகனங்களுக்கும் மின்சார அற்றல் என்ற திட்டங்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் இசைவு தெரிவித்துள்ளன.

புதிய அவதாரம் எடுக்கும் கிவிட் ஹேட்ச்பேக் கார்.. ரெனால்ட் தகவல்..!!

தற்போது இந்த பட்டியலில் ரெனால்ட் காரும் இணைந்திருப்பது மேலும் மின்சார வாகன கட்டுமானத்திற்கு வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.

Most Read Articles
English summary
Read in Tamil: Renault Kwid Electric Vehicle To Be A Well-Engineered Car — Here's What The CEO Has To Say. Click for Details...
Story first published: Thursday, November 23, 2017, 13:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X