வாகன விற்பனையில் உலகின் முதல் நிறுவனமாக ரெனால்ட்-நிஸான் கூட்டணி தேர்வு...!!
வாகன விற்பனையில் உலகின் முதல் நிறுவனமாக ரெனால்ட்-நிஸான் கூட்டணி தேர்வு...!!
உலகளவில் அதிகமாக வாகன விற்பனையை செய்த நிறுவனங்களுக்கான பட்டியலில் நிசான் மற்றும் ரெனால்ட் கூட்டணி முதலிடத்தை பிடித்துள்ளது.

2017 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலவரையில் அதிக வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஜப்பானின் நிஸான் மற்றும் ஃபிரான்ஸின் ரெனால்ட் கூட்டணி இணைந்து கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை மொத்தம் 5,268,079 வாகனங்களை விற்பனை செய்துள்ளன.

இதற்கு அடுத்த இடத்தில் வோக்ஸ்வேகன் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் அதே காலவரையில் 5,155,600 வாகனங்களை விற்பன்னை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Recommended Video


பட்டியலில் மூன்றாவது இடத்தில் டொயோட்டா கிர்லோஸ்கார் நிறுவனம் உள்ளது. இது கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையில்சுமார் 5,129,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் முன்னணி இருந்த அமெரிக்காவின் ஜெனரல்மோட்டார்ஸ், இதே காலவரையில் வெறும் 47 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இதனால் முதல் மூன்று இடங்களில் இடம்பெற முடியாமல், நான்காவது இடத்திற்கு ஜெனரல் மோட்டார்ஸ் தள்ளப்பட்டுள்ளது.

மாசு உமிழ்வு மோசடியில் சிக்கியதன் காரணமாக வோக்ஸ்வேகன், ஆடி போன்ற கார்களின் விற்பனை மேலைநாடுகளில் வெகுவாக குறைந்தன.

இதற்கான வழக்குகளும் புகார்களும் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருவதால், பல வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு நிறுவனங்களில் கார்களை வாங்க தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

ரெனால்ட்-நிஸான் கூட்டணி தலைமை செயல்பாட்டாளரான கர்லோஸ் கோஷ்ன் கூறும்போது, இந்த சாதனையை அடுத்த ஆண்டுகளிலும் இந்த கூட்டணி படைக்கும் என்றும். தொடர்ந்து முன்னணி இடத்தில் இடம்பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

இந்தாண்டு ஆட்டோமொபைல் துறைக்கான வளர்ச்சி ஆண்டாக தொடங்கியுள்ளது. உலகளவில் இந்த 6 மாத காலம் வரை பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 10 சதவீதம் வரை வளர்ச்சியை சந்தித்துள்ளன.


Click it and Unblock the Notifications








