ராணுவ பீரங்கி தோற்றத்தில் மிரட்டும் புதிய எஸ்யூவி மாடல்... விலை ஜஸ்ட் ரூ.1.15 கோடிதான்... !!

ராணுவ வாகனம் போன்ற முரட்டுத்தனமான தோற்றத்தில் புதிய எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ராணுவ பீரங்கி தோற்றமுடைய புதிய எஸ்யூவி மாடல் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ராணுவ பீரங்கி தோற்றத்தில் மிரட்டும் புதிய எஸ்யூவி மாடல்

கரடுமுரடான சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ப ராணுவ வாகனங்கள் வடிவமைக்கப்படுகின்றன. அதில், ராணுவ பீரங்கிகள் எந்தவொரு சாலை நிலைகளிலும் செல்வதற்கு ஏற்ற பல கூடுதல் சிறப்பம்சங்களையும், முரட்டுத்தனமான தோற்றத்தையும் பெற்றிருக்கின்றன.

ராணுவ பீரங்கி தோற்றத்தில் மிரட்டும் புதிய எஸ்யூவி மாடல்

அதேபாணியிலான வாகனங்கள் சாதாரண பயன்பாட்டிற்கும், தனிநபர் பயன்பாட்டிற்கும் நடைமுறையில் ஒத்துப் போவதில்லை. அத்தி பூத்தாற்போல் எப்போதாவது ஒரு வாகனம் ராணுவ வாகனங்கள் போன்ற முரட்டுத்தனமான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டு, தனிநபர் வாடிக்கையாளர் மார்க்கெட்டை குறி வைத்து அறிமுகம் செய்யப்படுகிறது.

ராணுவ பீரங்கி தோற்றத்தில் மிரட்டும் புதிய எஸ்யூவி மாடல்

அந்த வகையில், தற்போது ரேஸ்வானி என்ற அமெரிக்க நிறுவனம் ராணுவ வாகனங்கள் போன்ற வடிவமைப்பில், புதிய எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ராணுவ பீரங்கி மற்றும் வாகனங்களுக்குரிய முரட்டுத்தனமான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

[Tamil] 2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India - DriveSpark
ராணுவ பீரங்கி தோற்றத்தில் மிரட்டும் புதிய எஸ்யூவி மாடல்

ஆஃப்ரோடுகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற டயர்கள், அதிக தரை இடைவெளி, வித்தியாசமான வடிவமைப்புடன் பார்ப்போரை சிலிர்க்க வைக்கிறது ரேஸ்வானி எஸ்யூவி.

ராணுவ பீரங்கி தோற்றத்தில் மிரட்டும் புதிய எஸ்யூவி மாடல்

எந்த புறத்தில் பார்த்தாலும், ஒரு முரட்டுத்தனத்தை காண முடிகிறது. பின்புறமும் மிக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் சூசைடு டோர்ஸ் என்ற ரக கதவுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

ராணுவ பீரங்கி தோற்றத்தில் மிரட்டும் புதிய எஸ்யூவி மாடல்

இந்த கதவுகள் பின் இருக்கைகளுக்கு செல்வதற்கு ஏதுவாக இருப்பதுடன், திறக்கும் முறையும் எதிர்பதமாக கொடுக்கப்பட்டு இருப்பது பார்ப்போரை கவரும் வகையில் இருக்கிறது.

ராணுவ பீரங்கி தோற்றத்தில் மிரட்டும் புதிய எஸ்யூவி மாடல்

இந்த எஸ்யூவி பார்ப்பதற்கு மட்டுமல்ல, உண்மையிலேயே பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கவச வாகனம் போன்ற கட்டமைப்பை பெற்றிருக்கிறது. ஆம், இந்த எஸ்யூவி கண்ணி வெடித் தாக்குதல் மற்றும் இதர தாக்குதல்களிலிருந்து சேதமடையாத வகையில் கட்டமைக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.

ராணுவ பீரங்கி தோற்றத்தில் மிரட்டும் புதிய எஸ்யூவி மாடல்

இரவு நேரத்திலும் காரை சுற்றிலும் கண்காணித்து செல்வதற்கு நைட் விஷன் அசிஸ்ட் வசதியும் உண்டு. எனவே, இதனை ஒரு உண்மையான ராணுவ வாகனத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தனிநபர் வாகனமாக கூற முடியும்.

ராணுவ பீரங்கி தோற்றத்தில் மிரட்டும் புதிய எஸ்யூவி மாடல்

இந்த எஸ்யூவியில் 5 பேர் வரை பயணிக்க முடியும். லெதர் இருக்கைகள், இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி ஆகியவை முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

ராணுவ பீரங்கி தோற்றத்தில் மிரட்டும் புதிய எஸ்யூவி மாடல்

இந்த எஸ்யூவியில் 493 பிஎச்பி பவரை வாரி வழங்க வல்ல 6.4 லிட்டர் ஹெமி வி8 ரக எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. எனவே, தோற்றத்தில் மட்டுமல்லாது, செயல்திறனிலும் மிரட்டலாக இருக்கிறது.

ராணுவ பீரங்கி தோற்றத்தில் மிரட்டும் புதிய எஸ்யூவி மாடல்

மிக மோசமான ஆஃப்ரோடு சாலைகளிலும், நிலப்பகுதிகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற சிறப்பம்சங்களும், தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. இந்திய மதிப்பில் ரூ.1.15 கோடி விலை மதிப்பு கொண்டது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 17, 2017, 9:37 [IST]
English summary
California-based automaker Rezvani Motors has unveiled its latest creation, the military-inspired Tank SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+