பீரங்கி டேங்க் வடிவ வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

போர்க்களத்தில் எதிரி நிலைகளை நேரடியாக சென்று தாக்க கவச வாகனங்கள் எனப்படும் பீரங்கி வாகனங்களை ராணுவத்தில் பயன்படுத்துகின்றனர். பாலைவனங்கள், மலை முகடுகள், காடுகள் போன்ற மிகக் கடினமான நிலப்பரப்பு கொண்ட நாட்டின் எல்லைப் பகுதிகள் சாலை வசதிகள் அற்றதாகவே இருக்கும். இப்படிப்பட்ட நிலப்பரப்புகளில் பயணிக்கவும் எதிரிகளை தாக்கவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் தான் டேங்குகள்.

ராணுவ கவச வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம்

மற்ற வாகனங்களில் உள்ளது போன்ற வீல்கள் இந்த டேங்குகளில் இருக்காது. மாறாக இரும்பு பட்டையில் சுழலும் சக்கரங்கள் இதில் இருக்கும். எப்பேர்ப்பட்ட நிலப்பரப்பிலும் மிக எளிதாகவும், வேகமாகவும் இதனை இயக்கலாம். இதில் பொருத்தப்பட்டுள்ள குண்டு வீசும் கருவிகள் மூலம் எதிரிகளை தாக்கவும் செய்யலாம்.

ராணுவ கவச வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம்

ராணுவத்தில் பயன்படுத்தப்படும் இந்த விஷேச வாகனங்களை நாம் பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் தான் பார்த்திருப்போம். இனி நாமும் இதனை வாங்கி ஓட்டலாம். ராணுவத்திடமிருந்து அல்ல, ‘ரிப்ஸா' எனும் நிறுவனம் டேங்க் வடிவில் எஸ்யுவி வாகனத்தை உருவாக்கி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ராணுவ கவச வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம்

‘ரிப்ஸா ஈவி-2' என இதற்கு பெயரிட்டுள்ளனர். ஈவி என்பது இக்ஸ்ட்ரீம் வெஹிகிள் என்பதன் சுருக்கமாகும். தற்போதுள்ள எந்தவொரு ஆஃப் டோடிங் வாகனங்களையும் விட இது மிக வேகமாக பயணிக்கும். சாலையிலோ, கடற்கரையிலோ, அல்லது சகதியிலோ கூட இதனை எளிதாக இயக்கலாம். மிகவும் சொகுசான உட்புற வடிவமைப்பு பெற்றுள்ள இந்த டேங்கில் விலையுயர்ந்த காரில் உள்ளதைப்போன்று பல்வேறு விஷேச தொழில்நுட்பங்களும் அடங்கியுள்ளது.

ராணுவ கவச வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம்

மேல்புறத்தில் தூக்கும் வகையில் கதவுகள், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், சவுண்ட் சிஸ்டம், லெதர் சீட்கள், பார்க்கிங் கேமராவுடன் கூடிய எல்சிடி ஸ்கிரீன் டிஸ்பிளே என பல்வேறு சிறப்புகள் கொண்டது இந்த வாகனம். ஜெட் விமானத்திற்குள் நுழைந்ததைப் போன்ற உணர்வு இந்த டேங்கிற்குள் நுழையும் போது உங்களுக்கு ஏற்படும்.

ராணுவ கவச வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம்

இரண்டு இருக்கைகள் கொண்ட ரிப்ஸா ஈவி-2 வாகனத்தில் அதிகபட்சமாக 600 ஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட டீசல் இஞ்சின் உள்ளது. ஆட்டோமேடிக் கியர் சிஸ்டம் கொண்ட இந்த வாகனத்தில் அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கலாம்.

ராணுவ கவச வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம்

150 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் எரிபொருள் டேங்கை ஒரு முறை நிரப்பினால் 500 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம்.

ராணுவ கவச வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம்

ராணுவ பயன்பாட்டிற்கு மட்டுமே இதுவரை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களை தயாரித்து வந்த ரிப்ஸா நிறுவனம், முதல்முறையாக பொதுமக்களும் வாங்கும் வகையில் டேங்க் வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ராணுவ கவச வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம்

அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்ஸா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஈவி-2 டேங்க் வாகனத்தின் விலை 2,95,000 அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் இந்த வாகனத்தின் விலை கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாயாகும்.

ஸ்போர்ட்ஸ் மாடாலான மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரின் படங்கள்: 

English summary
The Ripsaw tank can go faster than anything on tracks - but does not have armor protection.
Story first published: Saturday, March 11, 2017, 14:53 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark