இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?

ரோல்ஸ்-ராய்ஸ், பெண்ட்லி போன்ற ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் கார்களின் விலை இந்திய சந்தையில் ரூ. 20 லட்சத்திலிருந்து, ரூ. 1கோடி வரை குறைந்துள்ளது. இதற்கான காரணத்தை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

By Azhagar

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகவுள்ளது, அங்குள்ள கார் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை மிகுவும் பாதித்துள்ளது. குறிப்பாக ரோல்ஸ்-ராய்ஸ், பெண்ட்லி, ஆஸ்டன் மார்டின், ரேன்ஞ் ரோவர் மற்றும் ஃபெராரி கார்களின் விலை இந்தியாவில் ரூ. 20லட்சத்திலிருந்து ரூ. 1கோடி வரை குறைந்துள்ளன.

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?

பிரிட்டனின் வெளியேற்றத்தால் அந்த நாட்டுடைய பவுண்டு மதிப்பு குறைந்துள்ளது. இந்த தாக்கம் வெறும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமில்லாமல், இந்தியாவை வரையிலும் உணரப்படுகிறது.

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?

கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் பவுண்டுடைய விலை 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் இந்தியர்களும் இங்கிலாந்து தயாரிப்புகளை வாங்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலால் ஹையரெண்டு கார்களை வாங்க இந்தியர்களும் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?

பவுண்டுடைய மதிப்பு குறைந்து காணப்படுவதால், இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் மலிவாகியுள்ளது. இதனாலேயே அங்கு உற்பத்தியாகும் கார்களின் விலையும் சந்தையில் குறைந்து காணப்படுகிறது.

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?

பொதுவாக இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கார்களுக்கு பெரியளவிலான சந்தை இந்தியாவில் உள்ளன. கடந்தாண்டில் 2 கோடி மதிப்பாலன 200 உயர் ரக கார்களை இந்தியர்கள் வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?

இங்கிலாந்து நாட்டு தயாரிப்புகளுக்கு இந்தியாவில் பெரியளவிலான சந்தை இருப்பதை உணர்ந்த கார் நிறுவனங்கள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதை பயன்படுத்தி இந்திய சந்தைக்காக 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தங்களது தயாரிப்புகளுக்கு விலையை குறைத்துள்ளன.

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?

உயர் ரக கார்களை தயாரிக்கும் நிறுவனங்களும் இந்த விலை குறைப்பு நடவடிக்கையால் இந்தியாவில், பெரியளவில் கார்கள் வியாபாரமாகும் எனவும் எதிர்பார்க்கின்றன.

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?

பிரிட்டன் வெளியேற்றதால், ஃபெராரி, பெண்ட்லி போன்ற மற்ற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த கார் வியாபாரமும் ஏன் பாதிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தை பொருத்தவரை, பிரிட்டன் தான் ராஜா. மற்ற நாடுகள் எல்லாம் அதனுடன் ஒப்பிடும்போது உலகளவில் செல்வாக்கை தக்கவைத்திருப்பதில் சிறிய சரிவில் தான் உள்ளன.

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுயிருக்கும் இந்த மாற்றத்தால், பொருளாதாரமும் பெரியளவில் சரிந்துள்ளன. அதனாலேயே ஐரோப்பாவின் மற்ற நாடுகளின் பண மதிப்பிலும் சிறிய சரிவு காணப்படுகிறது.

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?

ஆனால் பிரிட்டனுடைய பவுண்டுக்கான மதிப்புடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இத்தாலி, ஜெர்மன் நாடுகளுடைய பண மதிப்பு சிறியளவில் மட்டுமே குறைந்துள்ளன. இதை பயன்படுத்தியே அந்த நாடுகளை சேர்ந்த கார் நிறுவனங்களும், இந்தியா சந்தையை உற்று நோக்கி வருகின்றன.

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?

பிரிட்டன் நாடு வெளியேறுவதன் பாதிப்பு தற்போது உணரப்பட்டு இருந்தாலும், இதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தை பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே உணர்ந்துவிட்டன. கடந்த மார்ச் மாதமே ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி ஆகிய நிறுவனங்கள் கார்களின் விலையை குறைத்துவிட்டன. மேலும், ரேன்ஞ் ரோவர் நிறுவனம் இந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தனது கார்களுக்கான புதிய விலை பட்டியலை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?

இந்தியாவில் ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி வரி விதிப்பு (பொருட்கள் மற்றும் சேவை வரி) அமலாக்கப்படுகிறது. இதனால் அனைத்து பொருட்களுக்கான வரி நிலைகள் சமநிலையை அடையும். இதன்மூலம் கார் தயாரிப்பின் வளர்ச்சிக்கும், உற்பதிக்கும் இந்தியாவில் உகந்த சூழல் ஏற்படும் என்பது உயர் ரக கார்களின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும்உயர் ரக கார்களின் புதிய விலை பட்டியல்.

கார்கள் முந்தைய விலை புதிய விலை
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ரூ. 1.35 கோடி ரூ. 1.04 கோடி
ரேஞ்ச் ரோவர் வோக் ரூ. 1.97 கோடி ரூ. 1.56 கோடி
ஃபெராரி 488 ரூ.3.9 கோடி ரூ. 3.6 கோடி
ரோல்ஸ்-ராய்ஸ் ஃபான்த்தம் ரூ. 9 கோடி ரூ. 7.8- 8.0 கோடி
ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் ரூ. 5.25 கோடி ரூ.4.75 கோடி
ஆஸ்டன் மார்டின் டிபி11 ரூ.4.27 கோடி ரூ. 4.06 கோடி

via ET Auto

Most Read Articles
English summary
Brexit affects Super Cars sales in india. Rolls-Royce, Bentley, Aston Martin, Range Rover and Ferrari have cut prices in India by Rs 20 lakh to more than Rs 1 crore. check for details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X