”என்ன சொன்னாலும் தடை தடை தான்... ” ரோல்ஸ்-ராய்ஸ் காரை ஓட்ட முடியாமல் பாடாய்படும் உரிமையாளர்..!!

பசுமை தீர்பாயத்தின் தீர்ப்பால் சாலையில் ஓட்டமுடியாமல் போன ரோல்ஸ்-ராய்ஸ் கார்.

By Azhagar

1996ம் ஆண்டை சேர்ந்த பெட்ரோலில் இயங்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஒன்றுக்கு டெல்லி மற்றும் தேசிய தலைநகர சாலைகளில் இயக்க தேசிய பசுமை தீர்பாயம் அனுமதி மறுத்துள்ளது.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

காற்று மாசு ஆபத்தால் 15 வருட பெட்ரோல் கார்களை டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயன்படுத்த தேசிய பசுமை தீர்பாயம் தடை வித்துள்ளது.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

இந்நிலையில், அசோக் குமார் ஜெயின் என்பவர் 1995ம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் பெட்ரோல் மாடல் காரை வாங்கினார்.

சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பு பெற்ற அந்த காரை சுங்க வரி உள்ளிட்டவற்றை செலுத்தி 1996ல் இந்தியாவிற்கு கொண்டு வந்தார்.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

சுமார் 20 வருடங்கள் பழைமையான இந்த ஆடம்பர காரை, பசுமை தீர்பாயத்தின் உத்தரவு படி டெல்லி உள்ளிட்ட சுற்றுப்புற சாலைகளில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

இதனால் அசோக் குமார், இங்கிலாந்தில் உள்ள ரோல்ஸ்-ராய்ஸ் கார் தயாரிப்பு நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு தற்போதுள்ள சுற்றுப்புற விதிகளுக்கு ஏற்றவாறு தனது காரை மாற்ற முடியுமா என்று கேட்டுள்ளார்.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனமும் தற்போதைய யூரோ 4 மாசு விதிகளுக்கு ஏற்றவாறு அசோக் குமார் ஜெயினின் காரை மாற்றக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அவருக்கு பதில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

யூரோ 4 மாசு விதிகளுக்கு ஏற்றவாறு காரை புணரமைக்க வேண்டுமானால், அசோக் குமார் தனது ரோல்ஸ்-ராய்ஸ் காரை இங்கிலாந்திற்கு அனுப்ப வேண்டும். அதற்கு காரின் பதிவு புதுப்பிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

ஆனால் 15 வருட பழமையான பெட்ரோல் கார்களை பதிவு செய்ய தேசிய தீர்பாயம் பிறப்பத்திருக்கும் தடை உத்தரவால், காரின் பதிவு புதுபிக்கப்படமால் உள்ளது.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

மாசு கட்டுபாடு யூரோ 4 விதிகளுக்கு ஏற்றவாறு தனது ரோல்ஸ்-ராய்ஸ் காரை மாற்றியமைக்க இங்கிலாந்திற்கு அனுப்பவேண்டும் என அசோக் குமார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

மேலும், பாரமரிப்பு பணிகள் முடிந்து இந்தியாவிற்கு வந்த பின், காருக்கான தரம் மற்றும் மாசு கட்டுபாடு சோதனைகள் நடத்தப்படவேண்டும் எனவும் மனுவில் அவர் கோரியிருந்தார்.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜவாத் ரஹிம் கொண்ட அமர்வு, இது தேசிய பசுமை தீர்பாயத்தின் உத்தரவிற்கு உட்பட்ட வழக்கு என்று கூறி அசோக் குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

மேலும், கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சகம் ஏப்ரல் 7, 2015, மற்றும் ஜூலை 20, 2016 தேதியிட்ட தங்களின் உத்தரவுகளை மாற்றுவதற்கு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளன.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

அது குறித்து கருத்து கூறிய நீதிமன்றம் தேசிய பசுமை தீர்பாயத்தின் தலைவர் தலைமையிலான ஒரு அமர்வின் தீர்ப்பிற்கு உட்பட்டதாக இது உள்ளது என தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

இதுபோன்று விதிக்கப்பட்டும் உத்தரவுகள் காரணமாக டெல்லி வாசிகள் பாதிக்கப்பட்டால், அதற்கு தகுந்த இழப்பீடு பெறவும் சட்ட விதிகளில் இடம் உள்ளது.

டெல்லியில் தடைசெய்யப்பட்ட ரோல்ஸ் -ராய்ஸ் கார்..!!

இருந்தாலும், இந்த காலகட்டத்தில் கூட தன்னுடைய ரோல்ஸ்-ராய்ஸ் போன்று ஆடம்பர கார்களுக்கான மதிப்பு உயர்ந்துகொண்டு தான் உள்ளது.

அவ்வாறான கார்களை மாசு விதிகளின் கீழ் கொண்டு வந்து அதற்கான மதிப்பை இழக்க செய்வது தான் அதிக வருத்தமளிப்பதாக உரிமையாளர் அசோக் குமார் ஜெயின் ஆதங்கப்படுகிறார்.

More from DriveSpark

Article Published On: Friday, June 9, 2017, 15:31 [IST]
English summary
National Green Tribunal (NGT) has denied permission to run a petrol powered 1996 Rolls-Royce on Delhi and NCR roads. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+