இந்தியாவில் பி.எஸ்.4 கனரக வாகனங்களின் தயாரிப்பு பணிகளில் பின்னிடைவு..!!

Written By:

பி.எஸ். 4 மாசு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் கனரக வாகனங்களுக்கு உதிரிபாகங்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

கனரக வாகனங்களில் எஞ்சின்களில் எரிவாயு உந்துதலை ஏற்படுத்தும் அமைப்பை பாஷ் நிறுவனம் தயாரித்து தருகிறது. ஜெர்மனில் இருந்து இந்த பாகங்கள் இந்தியாவிற்கு இறக்குமதி ஆகிறது.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

பி.எஸ். 4 மாசு கட்டுப்பாடுகளுக்கு ஏற்றவாறு எரிவாயு உமிழ்வு விதிகளை பூர்த்தி செய்ய அதற்கேற்ற அமைப்போடு எஞ்சினுக்கான உதிரிபாகங்களௌ உருவாக்கி தருவதில் பாஷ் சில பற்றாக்குறைகளை எதிர்கொண்டுள்ளது.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

இந்த பற்றாக்குறை பிரச்சனைகளால் இந்தியாவில் கனரக வாகன தயாரிப்பு பெறும் பின்னிடைவை சந்தித்துள்ளது. டாடாவின் கனரக வாகன தயாரிப்பில் 50 சதவீத இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

பி.எஸ். 4 எஞ்சின்களுக்கு உரிய பாகங்கள் பற்றாக்குரையால் மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் 20 சதவீதம் முதல் 40 சதவீத உற்பத்தி பாதிப்பை சந்தித்துள்ளதாக மேலும் சில தகவல்கள் கிடைக்கின்றன.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

கனரக வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இந்த உற்பத்தி பின்னிடைவை குறித்து சமீபத்தில் பாஷ் கருத்து வெளியிட்டுள்ளது.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

உதிரி பாகங்கள் பற்றாக்குறை விரைவில் சீர்ப்படுத்தப்படும் எனவும், இம்மாத முடிவில் அனைத்தும் கட்டுக்குள் வரும் என கூறியுள்ளது.

பி.எஸ். 4 எஞ்சின்கள் கொண்ட கனரக வாகனங்களுக்கு உதிரிபாகங்களை விநியோகிக்கும் ஒரே நிறுவனமாக உள்ளது பாஷ்.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

மேலும் கடந்த ஏப்ரல் ஒன்றோடு பி.எஸ்.3 வாகனங்களுக்கு இந்தியாவில் தடை உத்தரவு எழும் எனவும் பாஷ் எதிர்பார்க்கவில்லை.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

முன்னரே இதற்கான திட்டம் இல்லை என்பதால், பி.எஸ். 4 எஞ்சினுக்கான உதிர்பாகங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது சவாலாக அமைந்துள்ளதாக கூறுகிறார் பாஷ் நிறுவன கூடுதல் இயக்குநரான ஜேன்-ஆலிவர் ரோயிரல்.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

ஜெர்மனை தவிர மற்ற நாடுகளில் உள்ள வாகன உற்பத்தியை நம்பித்தான் பாஷ் நிறுவனத்தின் வியாபாரமே உள்ளது.

இவற்றில் திடீரென இந்தியாவிற்கான தேவை மட்டும் அதிகரித்துள்ளது உற்பத்தியில் சற்று கடுமையை ஏற்படுத்தி இருப்பதாக ஜேன் - ஆலிவர் கூறுகிறார்.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

இந்த பற்றாக்குறை இன்று நடப்பது போல் இருக்கலாம், ஆனால் டிரக்குகள் மூலம் இந்தியா ஏற்றுமதியில் ஈட்டும் வருவாய் கணக்குகள் அடுத்த நிதியாண்டில் நிச்சியம் பாதிக்கப்படும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

ஆனால் இந்த தகவலை டாடாவின் கனரக வாகனங்களின் உற்பத்தி பிரிவு தலைவர் ரவிந்திரா பிஷாராடி முற்றிலுமாக மறுக்கிறார்.

அவரது கணக்குப்படி, நிதியாண்டின் முதல் பாதியில் நிலவும் இந்த தேக்கம், இராண்டாம் பாதியின் போது வளர்ச்சியை தரும் என்பதாக உள்ளது.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

பெங்களூருவின் பிடாடி பகுதியில் இருக்கும் பாஷ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்தியாவில் தயாராகும் வாகனங்களின் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

இதை மேலும் மேம்படுத்த 2016 முதல் 2017 வரையிலான ஆண்டில் சுமார் 630 கோடி வரை பாஷ் இதற்காக முதலீடு செய்துள்ளது.

கடந்த மே 22ம் தேதி 2ம் கட்ட தயாரிப்பு பணிகளை பாஷ் நிறுவனம் தனது பிடாடி பெங்களூரு தொழிற்சாலையில் தொடங்கியது.

தேக்கம் அடைந்த பி.எஸ்.4 கனரக வாகன தயாரிப்பு பணிகள்..!

இதன்மூலம் புதிய தலைமுறைக்கான எரிவாயு உட்செலுத்தும் பொருட்களை பாஷ் இந்தியா தயாரித்து வருகிறது.

2019ம் ஆண்டில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு, பி.எஸ்.6 ரக எஞ்சின்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வரும்போது இதுவும் அறிமுகமாகும்.

English summary
Shortage of BS-IV Parts Hits Heavy Vehicle Production In India. Click for details...
Story first published: Monday, June 5, 2017, 16:28 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark