போலி ஸ்பெஷல் எடிசன் ரேபிட் காரை தயாரித்து விற்ற பெங்களூர் ஸ்கோடா டீலர்!

பெங்களூரை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் டீலர் போலி ஸ்பெஷல் எடிசன் காரை வாடிக்கையாளருக்கு விற்றதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

By Saravana Rajan

பெங்களூரில் செயல்பட்டு வரும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற கார் வினியோகதஸ்தரான வினாயக் ஸ்கோடா என்ற நிறுவனம் ஸ்கோடா ரேபிட் காரின் பிளாக் எடிசன் மாடலை போலியாக தயாரித்து டெலிவிரி கொடுத்ததாக வாடிக்கையாளர் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

போலி ஸ்பெஷல் எடிசன் ரேபிட் காரை தயாரித்து விற்ற பெங்களூர் ஸ்கோடா டீலர்!

டீம் பிஎச்பி தளத்தில் அவரது புகார் குறித்து விரிவான தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரை சேர்ந்த சுஹாஸ் மஞ்சுநாத் என்பவர் வினாயக் ஸ்கோடா டீலரில் ஸ்கோடா ரேபிட் பிளாக் எடிசன் காரை புக்கிங் செய்து வாங்கி இருக்கிறார்.

போலி ஸ்பெஷல் எடிசன் ரேபிட் காரை தயாரித்து விற்ற பெங்களூர் ஸ்கோடா டீலர்!

வாங்கிய சில நாட்களிலேயே காரின் ஹெட்லைட்டின் ஹை பீம் ஒளிராமல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வினாயக் ஸ்கோடா நிறுவனத்திடம் காரை எடுத்து சென்றுள்ளார். அங்கு ஹெட்லைட் பிரச்னைக்குரிய காரணம் தெரியாமல் மெக்கானிக்குகள் திணறி உள்ளனர். மேலும், 10 நாட்கள் கால அவகாசமும் கேட்டுள்ளனர்.

Recommended Video

Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
போலி ஸ்பெஷல் எடிசன் ரேபிட் காரை தயாரித்து விற்ற பெங்களூர் ஸ்கோடா டீலர்!

மீண்டும் அங்கு சென்று வினவியபோது, காரின் ஒயரிங்கை முழுமையாக சோதித்த டெக்னிஷியன்கள், இது வழக்கமான ஸ்கோடா ரேபிட் கார் என்றும், பிளாக் எடிசன் மாடல் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு சுஹாஸுக்கு தூக்கி வாரி போட்டுள்ளது.

போலி ஸ்பெஷல் எடிசன் ரேபிட் காரை தயாரித்து விற்ற பெங்களூர் ஸ்கோடா டீலர்!

சாதாரண ரேபிட் மற்றும் பிளாக் எடிசன் ரேபிட் கார்களின் இசியூ கம்ப்யூட்டர் புரோகிராம் மற்றும் ஒயரிங் வெவ்வேறு என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஸ்கோடா ரேபிட் அப்ளிகேஷன் மூலமாக, தனது கார் சாதாரண ரேபிட் என்பதையும் உறுதி செய்து கொண்டார்.

போலி ஸ்பெஷல் எடிசன் ரேபிட் காரை தயாரித்து விற்ற பெங்களூர் ஸ்கோடா டீலர்!

உடனடியாக, டீலரில் உள்ள விற்பனை பிரிவை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் ஒருவழியாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், ரேபிட் காரின் பிளாக் எடிசன் மாடல் கையிருப்பு இல்லாததால், டீலரிலேயே சாதாரண ரேபிட் காரை பிளாக் எடிசன் மாடலாக மாறுதல் செய்து டெலிவிரி கொடுத்ததையும் ஒப்புக்கொண்டனர்.

போலி ஸ்பெஷல் எடிசன் ரேபிட் காரை தயாரித்து விற்ற பெங்களூர் ஸ்கோடா டீலர்!

இது கேட்டு அதிர்ச்சி அடைந்த சுஹாஸ் மஞ்சுநாத், இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வினாயக் ஸ்கோடா நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்துள்ளார். அதேபோன்று, டீலரை சரியாக கவனிக்க தவறியதுடன், இதுபோன்ற செயல்களை கண்டுகொள்ளாத ஸ்கோடா நிறுவனத்தின் மீதும் மற்றொரு புகாரையும் சுஹாஸ் மஞ்சுநாத் பதிவு செய்துள்ளார்.

போலி ஸ்பெஷல் எடிசன் ரேபிட் காரை தயாரித்து விற்ற பெங்களூர் ஸ்கோடா டீலர்!

சுஹாஸ் மஞ்சுநாத் போன்று ஸ்கோடா ரேபிட் பிளாக் எடிசன் முன்பதிவு செய்த மேலும் சில வாடிக்கையாளர்கள் இதுபோன்று ஏமாற்றப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போலி ஸ்பெஷல் எடிசன் ரேபிட் காரை தயாரித்து விற்ற பெங்களூர் ஸ்கோடா டீலர்!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ கார் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடலாக ரேபிட் கார் விளங்குகிறது. இந்த காரின் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட பிளாட் எடிசன் மாடல் வாடிக்கையாளர்களிடத்தில் பிரபலமானது.

போலி ஸ்பெஷல் எடிசன் ரேபிட் காரை தயாரித்து விற்ற பெங்களூர் ஸ்கோடா டீலர்!

ஹெட்லைட், க்ரில் அமைப்பு, ரியர் வியூ மிரர்கள், கூரை மற்றும் அலாய் வீல்கள் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன், பக்கவாட்டில் கருப்பு வண்ண பாடி டீக்கெல் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த மாடலுக்கு தனி மதிப்பு இருந்து வருகிறது.

போலி ஸ்பெஷல் எடிசன் ரேபிட் காரை தயாரித்து விற்ற பெங்களூர் ஸ்கோடா டீலர்!

இதனை பயன்படுத்தி ஸ்கோடா டீலர் செய்துள்ள இந்த காரியம், வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோமா என்ற அச்சமும், ஐயமும் வாடிக்கையாளர் முகத்தில் பரவி இருக்கிறது.

Most Read Articles
English summary
Skoda Dealer Cheats By Selling Fake Black Edition Of Rapid Car.
Story first published: Monday, October 9, 2017, 12:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X