ஸ்கோடா கரோக் எஸ்யூவியும் இந்தியா வருகிறது?

Written By:

எஸ்யூவி ரக கார்களை அறிமுகப்படுத்துவதில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் கோடியாக் என்ற பிரிமியம் ரக எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி மாடலானது, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியும் இந்தியா வருகிறது?

இந்த எஸ்யூவியை தொடர்ந்து, அண்மையில் சர்வதேச அளவவில் அறிமுகம் செய்யப்பட்ட கரோக் எஸ்யூவியையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் பரிசீலித்து வருவதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியும் இந்தியா வருகிறது?

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி பிரிமியம் எஸ்யூவி ரகத்தில் நிலைநிறுத்தப்பட இருக்கும் நிலையில், அதனை விட விலை குறைவான ஸ்கோடா எஸ்யூவி மாடலாக கரோக் எஸ்யூவி நிலைநிறுத்தப்படும். இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு அதிகாரி அசுதோஷ் தீக்ஷித்தும் தகவல் தெரிவித்துள்ளார். எனவே, கரோக் எஸ்யூவியும் இந்தியா வருவது குறித்து விரைவில் உறுதியான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியும் இந்தியா வருகிறது?

கடந்த மே மாதம்தான் புத்தம் புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் உதிரிபாகங்களை இந்த எஸ்யூவி பங்கிட்டுக் கொண்டுள்ளது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியும் இந்தியா வருகிறது?

சர்வதேச அளவில் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களிலும், 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் இந்த எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எஸ்யூவி 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. விலை உயர்ந்த வேரியண்ட்டில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும்.

Recommended Video - Watch Now!
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஸ்கோடா கரோக் எஸ்யூவியும் இந்தியா வருகிறது?

இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட ஸ்கோடா யெட்டி எஸ்யூவிக்கு பதிலாக இந்த புதிய கரோக் எஸ்யூவி நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. வழக்கம்போல் ஸ்கோடா நிறுவனத்தின் நேர்த்தியான வடிவமைப்பு, வலுவான கட்டமைப்பு உள்ளிட்டவை இந்த மாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் அம்சங்களாக இருக்கும்.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியும் இந்தியா வருகிறது?

அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஸ்கோடா யெட்டி எஸ்யூவியைவிட சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட மாடல்களுக்கு இது போட்டியாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

English summary
Czech automaker Skoda is all set to launch the Kodiaq SUV in the Indian market. Autocar India reports that the company is also exploring the possibilities of introducing the Karoq SUV in the country.
Story first published: Saturday, August 12, 2017, 18:38 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark