முதல் லாட்டில் வந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்கள் விற்று தீர்ந்தன!
இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்களும் விற்று தீர்ந்துள்ளது.
இந்தியாவிற்கு முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்களும் விற்று தீர்ந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மாதம் ஸ்கோடா ஆக்டேவியா காரின் சக்திவாய்ந்த புதிய ஆர்எஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.24.62 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் வந்தது.இந்தியாவில் முதல் லாட்டில் 250 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த நிலையில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்றரை மாதத்தில் அனைத்து ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக எக்கானாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் உயர் அதிகாரி ஜன் ரேபா கூறி இருக்கிறார்.

அடுத்த லாட் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கு இந்தளவு வரவேற்பு கிடைத்திருப்பது, சக்திவாய்ந்த கார்கள் மீது இந்தியர்களுக்கு இருக்கும்
ஆர்வத்தை காட்டுவதாகவே இருக்கிறது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதற்கு இதன் சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகள் முக்கிய காரணம்.
Recommended Video


இந்த காரில் 227 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்ல 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த சக்திவாய்ந்த செடான் கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 6.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

இந்த காருக்கு 95 ஆர்ஓஎன் என்ற தரத்திலான பெட்ரோல் தேவைப்படும். இந்த கார் லிட்டருக்கு 14.45 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்றளித்துள்ளது.

இந்தியாவில் விற்பனையில் தடுமாறி வரும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துக்கு புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் விற்பனை புது தெம்பையும், உற்சாகத்தையும் அளிக்கும் செய்தியாகவே இருக்கிறது. இந்தியர்களுக்கு உகந்த புதிய மாடல்களை களமிறக்கவும் அந்த நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
Trending On DriveSpark Tamil:


Click it and Unblock the Notifications








