ஷாங்காய் கண்காட்சியில் அறிமுகமாகும் ஸ்கோடா விஷன் ஈ மின்சார கார்

Written By:

உலக வர்த்தக நகரமாக உள்ள சீனாவின் ஷாங்காயில் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய விஷன் ஈ மாடல் கார் அறிமுகப்படுத்தப்படுகிறது. நான்கு பேர் அமரும் அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார் மின்சார பயன்பாட்டில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின்சார கார்கள் உற்பத்தியில் இறங்கும் ஸ்கோடா

விஷன் ஈ எலக்ட்ரிக் கார், ஸ்கோடா எதிர்காலத்தில் தயாரிக்கவுள்ள மாடல்களுக்கு முன்னோடியாகவும் ஷாங்காய் மோட்டார் கண்காட்சியில் அடையாளப்படுத்தப்பட்டது.

உருவாக்கத்தில் மட்டுமில்லாமல், இந்த காருக்கான தொழில்நுட்பமும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் 6 நொடிகளில் ஸ்கோடா விஷன் ஈ காரால் 100 கிலோ மீட்டரை அடைய முடியும்.

மின்சார கார்கள் உற்பத்தியில் இறங்கும் ஸ்கோடா

இதன்மூலம் ஸ்கோடாவின் பெருமைமிகு தயாரிப்பாக உள்ள ஆக்டோவியா வி.ஆர்.எஸ் மாடலை விட 0.5 விநாடிகள் விஷன் ஈ எலக்ட்ரிக் கார் அதிக வேகத்திறனை பெற்றுள்ளது.

மின்சார கார்கள் உற்பத்தியில் இறங்கும் ஸ்கோடா

விஷன் ஈ காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு மோட்டார் காரின் முன்சக்கர பகுதியிலும், மற்றொன்று பின் சக்கரப்பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பால் நான்கு சக்கரங்களின் பயன்பாடுகள் ஒரே கட்டுப்பாட்டில் இருக்கும்.

மின்சார கார்கள் உற்பத்தியில் இறங்கும் ஸ்கோடா

300 பி.எச். பி பவர் வழங்கும் ஆற்றலை கொண்ட இந்த கார், ஒரு மணி நேரத்தில் 180 கிலோ மீட்டரை அடையும். மேலும் இதனுடைய அதிகப்பட்ச வேகத்திறன் 500 கிலோ மீட்டராகும்.

மின்சார கார்கள் உற்பத்தியில் இறங்கும் ஸ்கோடா

ஹைபிரிட் மற்றும் மின்சார பயன்பாட்டில் இயங்கும் சூப்பர்ப் மாடல் காரை 2019ம் ஆண்டில் ஸ்கோடா அறிமுகப்படுத்துகிறது. மேலும் 2025ம் ஆண்டிற்குள் தனது அனைத்து மாடல் கார்களும் ஒன்று ஹைபிரிட் தொழில்நுட்பத்திலோ அல்லது மின்சாரத்தால் இயங்கும் வகையிலோ ஸ்கோடா மாற்றியமைக்கும் திட்டத்தை வைத்துள்ளது.

கிராஸ் ஓவர் கான்செப்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடல், கோடாய்க் மற்றும் சூப்பர்ப் கார்களை விட 1591மிமீ அதிகமாக உயரம் கொண்டுள்ளது. செக் குடியரசில் தயாராகியுள்ள இந்த கார் ஸ்டைலான மேற்கூரை வடிவமைப்பு, வலிமையான அம்சங்கள் என பார்த்தவுடன் ஈர்கக்கூடிய சரியான கோணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

மின்சார கார்கள் உற்பத்தியில் இறங்கும் ஸ்கோடா

உள்ளகட்டமைப்பு பொறுத்தவரை, முன் மற்றும் பின் பகுதிகளில் விஷன் ஈ கார் அதிக இடவசதியை பெற்றுளது. மேலும் காருக்குள் பயணிகளின் பொழுதுபோக்கிறாக மூன்று திரைகள் உள்ளன, இந்த திரைகள் வரும் நாட்களில் உற்பத்தியை பொறுத்து தானாக இயங்கும் தொழில்நுட்பத்திற்கான வழிகாட்டியாகக்கூட மாற்றியமைக்கலாம்.

மின்சார கார்கள் உற்பத்தியில் இறங்கும் ஸ்கோடா

புதிய ட்ரெண்டுகளுக்கு ஏற்றவாறு தனது தயாரிப்பு நிலைகளை ஸ்கோடா மாற்ற முயல்வது ஆட்டோமொபைல் உலகில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 21ம் தேதி தொடங்கும் ஷாங்காய் கார் கண்காட்சியில் அறிமுகமாகும் விஷன் ஈ மாடல் கார்

உலகளவில் தானியங்கி மற்றும் மின்சார பயன்பாட்டில் உருவாகும் கார்களுக்கு வழிவகுக்கும் என நம்பலாம்.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
The 300bhp four-seat crossover coupe is based on VW Group’s MEB platform; its design reveals the look of future Skoda models.
Story first published: Wednesday, April 19, 2017, 11:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark