பிஎம்டபிள்யூ ஐ3 மின்சார காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகமாகிறது!

Written By:

பிஎம்டபிள்யூ நிறுவனம் ஐ என்ற பிராண்டில் ஐ3 என்ற மின்சார காரையும், ஐ8 என்ற ஹைப்ரிட் ரக ஸ்போர்ட்ஸ் காரையும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், ஐ3 காரின் பெர்ஃபார்மென்ஸ் வகை கார் மாடலை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ ஐ3 மின்சார காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகமாகிறது!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐ3 காரின் ஸ்போர்ட் மாடல் ஐ3எஸ் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சாதாரண பிஎம்டபிள்யூ ஐ3 காரைவிட கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சக்திவாய்ந்த மின்மோட்டாருடன் ஐ3எஸ் கார் வர இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஐ3 மின்சார காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகமாகிறது!

புதிய பிஎம்டபிள்யூ ஐ3எஸ் காரில் 20 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்பதுடன், சஸ்பென்ஷனும் 0.4 அங்குலம் உயரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஐ3 மின்சார காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகமாகிறது!

சாதாரண ஐ3 காரில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் வாய்ந்தது. ஆனால், புதிய ஐ3எஸ் காரில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 184 பிஎச்பி பவரையும், 270 என்எம் டார்க் திறனையும் வழங்குவதாக இருக்கும்.

பிஎம்டபிள்யூ ஐ3 மின்சார காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகமாகிறது!

புதிய பிஎம்டபிள்யூ ஐ3 காரில் கூடுதல் தூரம் பயணிப்பதற்காக ஹைப்ரிட் மாடலும் கிடைக்கும். மொத்தத்தில் சாதாரண ஐ3 மாடலைவிட தோற்றத்திலும், செயல்திறனிலும் கூடுதல் வலிமையையும் பெற்றதாக இருக்கும் ஐ3எஸ்.

பிஎம்டபிள்யூ ஐ3 மின்சார காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகமாகிறது!

புதிய ஐ3எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, சாதாரண ஐ3 காரின் ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 185 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

பிஎம்டபிள்யூ ஐ3 மின்சார காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகமாகிறது!

இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய மாடல்கள் வெளிநாடுகளில் விற்பனைக்கு வர இருக்கின்றன. விலை விபரங்களும் இந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎம்டபிள்யூ ஐ3 மின்சார காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகமாகிறது!

2030ம் ஆண்டிற்குள் மின்சார கார்களை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த கார் மாடல்கள் சில ஆண்டுகளில் இந்திய மண்ணிலும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

English summary
German carmaker BMW is adding a Sport model to its electric i3 range, called the i3s. The sportier BMW i3s will go on sale in the US by this year end, along with the facelifted BMW i3.
Story first published: Tuesday, August 29, 2017, 19:48 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark