Just In
- 2 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 49 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கோவையில் சாங்யாங் டிவோலி சோதனை: எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!
கோவையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வரும் புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் ஸ்பை படங்கள் கிடைத்துள்ளன. அதனை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.
மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனம் டிவோலி என்ற காம்பேக்ட் எஸ்யூவியை வெளிநாடுகளில் அறிமுகம் செய்தது. இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி வடிவமைப்பில் மிக அசத்தலாக இருந்ததால், இந்தியாவிலும் விற்பனைக்கு வருமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்த சூழலில், கோவையில் சாங்யாங் டிவோலி எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வரும் சாங்யாங் டிவோலி எஸ்யூவியை எமது டிரைவ்ஸ்பார்க் தள வாசகர் ஜித்தேஷ் ஜெகதீசன் எமக்கு அனுப்பி இருக்கிறார்.
சாங்யாங் டிவோலி எஸ்யூவியுடன் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியும் சேர்த்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டு சாங்யாங் டிவோலி எஸ்யூவிகள் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு இருப்பதும் ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது.
ஒன்று காம்பேக்ட் ரக மாடலாகவும் மற்றொன்று சற்றே கூடுதல் நீளம் கொண்ட மாடலாகவும் தெரிகிறது. அதாவது, ஒன்று மூன்று வரிசை இருக்கை கொண்ட மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.
Recommended Video
அடையாளங்கள் மறைக்கப்பட்டிருந்த போதிலும், டிவோலி எஸ்யூவியில் சில முக்கிய அம்சங்களை காண முடிகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல் நேர விளக்குகள், பனி விளக்குகள், பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
கருப்பு வண்ண பில்லர்கள், அலாய் வீல்கள் ஆகியவையும் முக்கியமானதாக இருக்கின்றன. பின்புறத்தில் உயர்த்தப்பட்ட அமைப்பிலான விண்ட் ஷீல்டு, எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
Trending On DriveSpark Tamil:
நீளம் குறைவான மாடலில் தற்காலிக டெயில் லைட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதுடன், ஸ்டீல் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பிற முக்கிய அம்சங்கள் குறித்து தெரியவில்லை.
புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இரட்டை வண்ண டேஷ்போர்டு, டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை பிற முக்கிய அம்சங்களாக இருக்கும். பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவிருக்காது.
ஏற்கனவே, சாங்யாங் டிவோலி எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டமில்லாமல் இருந்தது மஹிந்திரா. ஆனால், தற்போது சோதனை ஓட்டங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, அடுத்த ஆண்டு மத்தியில் சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பிருக்காது.
Trending On DriveSpark Tamil:
டாடா டியாகோ காரின் ஏஎம்டி மாடல் அறிமுகம் குறித்த வீடியோ செய்தி!