ஜிஎஸ்டி வரி வதிப்பில் புதிய மாற்றம்: எஸ்.யூ.வி & ஆடம்பர கார்களின் விலை உயருகிறது..!!

Written By:

இந்தியாவில் வாகன துறைக்கான வரி விதிப்பில் சிறிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் எஸ்.யூ.வி மற்றும் ஆடம்பர கார்களுக்கான வரி விதிப்பு உயருகிறது.

ஜிஎஸ்டி- யின் கீழ் விலை உயரும் எஸ்.யூ.வி & ஆடம்பர கார்கள்..!

ஜிஎஸ்டி கவுன்சிலும் இதற்கான ஒப்புதலை உறுதிப்படுத்தி உள்ளதால், விரைவில் எஸ்.யூ.வி மற்றும் ஆடம்பர கார்களுக்கான வரி 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் கூடுதலாக உயர்த்தப்படுகிறது.

ஜிஎஸ்டி- யின் கீழ் விலை உயரும் எஸ்.யூ.வி & ஆடம்பர கார்கள்..!

இந்த புதிய வரி மாற்றத்தால், ஜிஎஸ்டி இழப்பீட்டு சட்டத்தின் கீழ் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால் செஸ் மறுசீரமைப்பு உடனடியாக எதிர்பார்க்கப்படுவதில்லை.

ஜிஎஸ்டி- யின் கீழ் விலை உயரும் எஸ்.யூ.வி & ஆடம்பர கார்கள்..!

எனினும் எஸ்.யூ.வி உட்பட ஆடம்பர மாடல் கார்களை வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இதுவே சரியான தருணம் என ஆட்டோமொபைல் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video - Watch Now!
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஜிஎஸ்டி- யின் கீழ் விலை உயரும் எஸ்.யூ.வி & ஆடம்பர கார்கள்..!

ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவுகளை குறித்து பேசிய அதிகாரி ஒருவர், செஸ்ஸில் இழப்பீட்டு வட்டி விகிததத்தை அதிகரிப்பதற்கு ஜி.எஸ்.டி. சட்டத்தில் ஒரு திருத்ததம் செய்யப்படவுள்ளதாக கூறினார்.

மேலும் அவர், தேவைகள் மற்றும் உற்பத்திக்கு ஏற்றவாறு ஆடம்பர கார்களுக்கான வரி விதிப்பும் ஜிஎஸ்டி-க்கு கீழ் உயர்த்தப்படுவதாக கூறினார்.

ஜிஎஸ்டி- யின் கீழ் விலை உயரும் எஸ்.யூ.வி & ஆடம்பர கார்கள்..!

தற்போது நடைமுறையில் உள்ள விதிப்படி 28 சதவீத காரின் விலை மற்றும் 15 சதவீதம் இழப்பீடு வரி விதிக்கப்படுகிறது. மொத்தமாக ஒரு ஆடம்பர கார் ஜிஎஸ்டியில் 43% பெறுகிறது.

ஜிஎஸ்டி- யின் கீழ் விலை உயரும் எஸ்.யூ.வி & ஆடம்பர கார்கள்..!

புதியதாக நடைமுறையாகவும் இந்த வரி விதிப்பால், எஸ்.யூ.வி மற்றும் அனைத்து ஆடம்பர கார்களும் 28 சதவீதம் வரி மற்றும் 25 சதவீதம் செஸ் வரியை பெறும்.

இதன் காரணமாக வருங்காலத்தில் எஸ்.யூ.வி கார் அல்லது ஆடம்பர கார்களை வாங்க நினைத்தால், மொத்தமாக நீங்கள் 53 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி- யின் கீழ் விலை உயரும் எஸ்.யூ.வி & ஆடம்பர கார்கள்..!

ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு பெரிய எஸ்.யூவி கார்கள் மற்றும் ஆடம்பர கார்கள் 55.30 வரி மதிப்பை பெற்றன.

மேலும் 4 மீட்டருக்கு நீளமும் மற்றும் 1500சிசி திறன் பெற்ற எஸ்.யூ.விகளுக்கு 51.80 வரி விதிப்பு போடப்பட்டன.

ஜிஎஸ்டி- யின் கீழ் விலை உயரும் எஸ்.யூ.வி & ஆடம்பர கார்கள்..!

ஆனால் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட பிறகு எஸ்.யூ.வி மற்றும் ஆடம்பர கார்களின் விலை கனிசமாக குறைந்தன

இதனால் உற்பத்தியாளர்கள், இந்தியாவில் இந்த ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் விற்பனை திறன் பெறும் என்று எண்ணினர்.

ஜிஎஸ்டி- யின் கீழ் விலை உயரும் எஸ்.யூ.வி & ஆடம்பர கார்கள்..!

இதனுடன் ஹைஃபிரிட் கார்களுக்கான செஸ் வரி பலமுறை குறைக்கச்சொல்லி கோரிக்கை வைக்கப்பட்டு விட்டது. அரசின் இந்த நடவடிக்கைகள் கோரிக்கையை ஏற்க மறுப்பதாக தெரிகின்றன.

ஜிஎஸ்டி- யின் கீழ் விலை உயரும் எஸ்.யூ.வி & ஆடம்பர கார்கள்..!

ஆனால் தற்போதிருக்ககூடிய இந்த நிலையால ஹைஃபிரிட் கார்களுக்கு ஜிஎஸ்டி-க்கு கீழ் வரி அமைப்பிற்கு இணையாக எஸ்.யூ,வி மற்றும் ஆடம்பர கார்களுக்கு புதிய வரி மாற்றம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil: The Goods and Service Tax (GST) Council has approved to increase the prices of SUVs and luxury cars in India. Click for Details...
Story first published: Monday, August 7, 2017, 16:26 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark