புதிய சுஸுகி வேகன் ஆர் கார் அறிமுகம்- படங்களுடன், தகவல்கள்!

புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பிலும், சிறப்பம்சங்களிலும் புதிய தலைமுறைக்கு மாறி இருக்கும் இந்த காரின் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

நம் நாட்டு பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மிகவும் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது மாருதி வேகன் ஆர் கார். கடும் சந்தைப் போட்டி நிலவும் இக்காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு வடிவமைப்பிலும், வசதிகளிலும் புதிய வேகன் ஆர் கார் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி நிறுவனம் இந்த புதிய மாடலை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலும் வர இருக்கும் இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மாருதி வேகன் ஆர் கார் அறிமுகம்- படங்களுடன், தகவல்கள்!

இப்போது விற்பனையில் உள்ளது போலவே, மாருதி வேகன் ஆர் கார் சாதாரண மாடலிலும், ஸ்டிங்ரே என்ற பிரிமியம் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள மாடலை போன்றே புதிய மாருதி வேகன் ஆர் காரும் டால் பாய் எனப்படும் உயர்ந்த கூரை அமைப்புடைய டிசைன் தாத்பரியத்திலேயே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் கார் அறிமுகம்- படங்களுடன், தகவல்கள்!

முன்புற வடிவமைப்பு அதிக மாற்றங்களை சந்தித்துள்ளது. ஹெட்லைட், க்ரில் அமைப்பு உள்ளிட்டவை முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய மாடலின் சாயல் தெரியாத வகையில், புதிய மாடலின் முகப்பு முற்றிலும் வேறாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் கார் அறிமுகம்- படங்களுடன், தகவல்கள்!

முன்புற பம்பரில் துவங்கும் கோடுகள் வீல் ஆர்ச்சுகளின் வழியாக பின்புறம் வரை செல்கிறது. புதிய மாருதி வேகன் ஆர் காரின் நீளம் 30மிமீ வரையிலும், வீல் பேஸ் 60 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், உட்புறத்தில் மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும்.

புதிய மாருதி வேகன் ஆர் கார் அறிமுகம்- படங்களுடன், தகவல்கள்!

பக்கவாட்டில் பி பில்லர் அமைப்பு சற்று வித்தியாசமானதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் மிக எளிமையாக இருக்கிறது. டெயில் லைட்டுகள் செங்குத்தாக இல்லாமல் படுக்கை வாட்டில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அவை பின்புற பம்பருடன் இயைந்து நிற்பது போல கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் கார் அறிமுகம்- படங்களுடன், தகவல்கள்!

இன்டீரியர் டிசைனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய டேஷ்போர்டு அமைப்பு கொடுக்கப்ப்டடுள்ளது. இக்னிஸ் காரில் இரு்பபது போலவே, டேப்லெட் போன்ற வடிவிலான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது. டொயோட்டா எட்டியோஸ், லிவா கார்களில் உள்ளது போல, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டேஷ்போர்டின் மையப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளது.

புதிய மாருதி வேகன் ஆர் கார் அறிமுகம்- படங்களுடன், தகவல்கள்!

இதுதவிர, கியர் லிவரும் டேஷ்போர்டின் இறக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் அருகிலேயே ஏசி கன்ட்ரோல் சுவிட்சுகள் இடம்பெற்றுள்ளன. உட்புறத்தில் கருப்பு வண்ண அப்ஹோல்ஸ்ட்ரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் கார் அறிமுகம்- படங்களுடன், தகவல்கள்!

ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய மாருதி வேகன் ஆர் கார் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் முழுவதுமான ஹைப்ரிட் சிஸ்டம் என இரண்டு மாடல்களில் வந்துள்ளது. இந்தியாவில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் நிச்சயம் சிறப்பானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

புதிய மாருதி வேகன் ஆர் கார் அறிமுகம்- படங்களுடன், தகவல்கள்!

புதிய மாருதி வேகன் ஆர் காருடன், கூடுதல் சிறப்புகள் கொண்ட ஸ்டிங்ரே மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண வேகன் ஆர் கார் சற்று எளிமையான டிசைன் தாத்பரியங்களுடனும், வேகன் ஆர் ஸ்டிங்ரே மாடல் சற்று பிரிமியம் அம்சங்களை கொண்டதாகவும் இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் கார் அறிமுகம்- படங்களுடன், தகவல்கள்!

அடுத்த ஆண்டு இந்த புதிய தலைமுறை வேகன் ஆர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் வசதியும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

டொயோட்டா சிஎச்-ஆர் எஸ்யூவியின் படங்கள்!

டொயோட்டா சிஎச்-ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது என்ற தகவலை கேட்டவுடன், அதனை முழுமையாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறதல்லவா? அதனை தீர்ப்பதற்காக 35 படங்கள் அடங்கிய கேலரியை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

Most Read Articles
English summary
The next-generation WagonR received a complete overhaul in terms of exterior and interior, with wheelbase growing by 60mm thereby providing bigger cabin space.
Story first published: Friday, February 3, 2017, 10:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X