இந்தியாவின் முதல் லித்தியம்-ஐயன் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி!

Written By:

மாருதி சுசுகி கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் இந்தியாவின் முதல் லித்தியம்-ஐயன் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கிறது.

மின்சார கார் பயன்பாட்டிற்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி..!!

குஜராத்தின் ஹன்சல்பூர் பகுதியில் சமீபத்தில் கட்டமைக்கப்பட்ட சுசுகியின் தொழிற்சாலையில் விரிவாக்கம் செய்யப்பட்டு லித்தியம்-ஐயன் பேட்டரிக்கான தனி ஆலை உருவாக்கப்படவுள்ளது.

மின்சார கார் பயன்பாட்டிற்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி..!!

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உடன் இணைந்து ஹன்சல்பூர் சுசுகி மோட்டார்ஸின் ஆலைக்கான திறப்பு விழா நடைபெற்றது.

மின்சார கார் பயன்பாட்டிற்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி..!!

பிறகு இருவரும் இணைந்து அதே ஆலையில் அமையவிருக்கும் லித்தியம்-ஐயன் பேட்டரிக்கான தொழிற்சாலையை கட்டமைக்க அடிக்கல் நாட்டினர்.

மின்சார கார் பயன்பாட்டிற்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி..!!

இந்தியாவின் முதல் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையை சுசுகி மோட்டார், தொஷிபா மற்றும் டென்சோ நிறுவனங்கள் இணைந்து நிர்வகிக்க உள்ளன.

மின்சார கார் பயன்பாட்டிற்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி..!!

பிரம்மாண்டமாக தயாராகும் இந்த ஆலையை கட்டமைக்க சுமார் ரூ.1137 கோடியை இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து முதலீடு செய்துள்ளன.

மின்சார கார் பயன்பாட்டிற்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி..!!

தொழிற்சாலைக்கான அனைத்து கட்டமைப்பு பணிகளும் அடுத்த 3 ஆண்டுகளில் முடிவுற்று, பேட்டரிகளுக்கான உற்பத்தி 2020ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார கார் பயன்பாட்டிற்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி..!!

பேட்டரி தயாரிக்க தேவைப்படும் மாடியூல் கலங்களை தொஷிபா வழங்கவுள்ளது. டென்சோ நிறுவனம் தொழிற்சாலைக்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பகிர்ந்துக்கொள்ளும்.

மின்சார கார் பயன்பாட்டிற்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி..!!

இந்த மூன்று நிறுவனங்களின் கூட்டமைப்பில் சுசுகி 50 சதவீதமும், தொஷிபா 40 சதவீதமும் மற்றும் டென்சோ 10 சதவீதமும் முறையே பங்கிட்டு கொள்கின்றன.

மின்சார கார் பயன்பாட்டிற்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி..!!

ஹன்சல்பூர் சுசுகி மோட்டார் தொழிற்சாலையில் மின்சார வாகனங்கள், ஹைஃபிரிட் கார்களுக்கான லித்தியம்-ஐயன் பேட்டரிகள் தயாரிக்கப்படுகின்றன.

மின்சார கார் பயன்பாட்டிற்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி..!!

ஏற்கனவே மத்திய அரசு இந்தியாவில் 2030ம் ஆண்டிற்குள் அனைத்து வாகன பயன்பாட்டினையும் மின்சார ஆற்றலுக்கு மாற்ற முயற்சித்து வருகிறது.

மின்சார கார் பயன்பாட்டிற்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி..!!

அந்த குறிக்கோளுக்கு ஏற்ற பங்களிப்புகளை விரைவில் கட்டமைக்கப்படவுள்ள சுசுகியின் இந்த பேட்டரி தொழிற்சாலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார கார் பயன்பாட்டிற்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி..!!

இந்தியாவின் பயணிகள் ரக வாகன விற்பனையில் சுமார் 50 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது மாருதி சுசுகி.

தற்போது இதை மின்சார வாகன பிரிவிலும் தக்கவைத்துக்கொள்ள சுசுகி நிறுவ இருக்கும் முதல் முயற்சி தான் இந்த பேட்டரி தொழிற்சாலை.

English summary
Read in Tamil: India's First Lithium-Ion Battery Plant To Be Setup And Ready By 2020. Click for Details...
Story first published: Friday, September 15, 2017, 14:20 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark