போர்ஷே நிறுவனத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு... கேயென்ஸ் மாடல் காரை வாங்க, பதிவு செய்ய தடை..!!
போர்ஷே நிறுவனத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு... கேயென்ஸ் மாடல் காரை வாங்க, பதிவு செய்ய தடை..!!
சுவிட்சர்லேந்து நாட்டின் சாலை கழகம் போர்ஷேவின் கேயென்ஸ் கார்களை அந்நாட்டில் பதிவு செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

போர்ஷேவின் இந்த மாடல் கார்கள் அதிகளவில் மாசு உமிழ்வு செய்வதால் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக சுவிட்சர்லேந்து சாலை கழகம் தெரிவித்துள்ளது.

3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள இந்த போர்ஷே கேயென்ஸ் காருக்கு ஆரம்ப கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டில் சாலை கழகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட கார்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டில் வோக்ஸ்வேகன் நிறுவனம் மாசு உமிழ்வு மோசடி செய்ததாக கூறி அதற்கு அமெரிக்க உட்பட சில ஐரோப்பிய நாடுகள் தடை மற்றும் அபராதங்களை விதித்தன.

அதற்கு இணையாக போர்ஷேவின் கேயென்ஸ் மாடல் காரின் தடை உத்தரவு ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.
Recommended Video


மேலும் வோக்ஸ்வேகனின் வழக்கில் பின்பற்றப்பட்ட விதிகளே போர்ஷேவின் மாசு உமிழ்வு மோசடிக்கும் பின்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

வோக்ஸ்வேகன் மாசு உமிழ்வு செய்த கார் மாடல்களில் அது தெரியாமல் இருப்பதற்காக ஒரு மென்பொருளை பொருத்தி இருந்ததாக கூறப்பட்டது.

இதை கண்டுபிடித்த ஐரோப்பா உட்பட அமெரிக்கா நாடுகள் முறையாக விதிகளை பின்பற்றாமல் தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெற வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அதன் காரணமாக வோக்ஸ்வேகன் நிறுவனம், மென்பொருள் பொருத்தி தயாரித்த கார்களை இந்தியா உட்பட பல நாடுகள் திரும்ப பெற அழுத்தம் கொடுத்தன.

சுவிட்சலேர்ந்து உட்பட பல நாடுகள் சுற்றுச்சூழலின் பாதுகாப்பை கருதி வாகன புகை வெளியேற்றத்தில் கட்டுபாடுகளுடன் செயல்படுவது பாராட்டத்தக்கது.

டீசல் எஞ்சின் கொண்டு இயங்கும் வாகனங்களை தடை செய்ய இங்கிலாந்து உட்பட பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இதற்கு இந்தியாவும் தனது பங்களிப்பை தருகிறது. அதனால் இனி வரும் காலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உடன் தான் வாகனங்கள் தயாராகும் என நாமும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








