ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஜீப் காம்ப்ஸ் எஸ்.யூ.வி கார்களுக்கு டாடா வைக்கும் ’செக்’..!!

Written By:

புதிய நெக்ஸான் காருக்கான வரவேற்பு இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில், அதை உணர்ந்து எதிர்கால சந்தையை தக்கவைத்துக்கொள்ள டாடா நிறுவனம் புதிய ரக எஸ்.யூ.வி கார் தயாரிப்பில் தீவிரமாக களமிறங்குகிறது.

இந்தியாவில் புதிய ரக எஸ்யூவி கார்களை களமிறக்கும் டாடா..!!

இதுகுறித்து செய்தியை வெளியிட்டுள்ள ஆட்டோ கார் இணையதளம், டாடாவின் இந்த புதிய ரக எஸ்.யூ.வி கார் சப்காம்பேக்ட் வகையில் தயராகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிய ரக எஸ்யூவி கார்களை களமிறக்கும் டாடா..!!

இதன் காரணமாக டாடாவின் இந்த தயாரிப்பு சமீபத்தில் இந்தியாவில் டிரென்டித்து வரும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஜீப் காம்பஸ் கார்களுக்கு செக் வைப்பதாக உள்ளது.

இந்தியாவில் புதிய ரக எஸ்யூவி கார்களை களமிறக்கும் டாடா..!!

டாடா தயாரிக்கும் 2 எஸ்.யூ.வி கார்களும், 5 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் கொண்டு தயாராகலாம் என்று தெரிகிறது.

இந்த இரண்டு கார்களையும் 2018 - 2019 ஆண்டின் நிதியாண்டில் வெளிவரலாம் என டாடா நிறுவனத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் புதிய ரக எஸ்யூவி கார்களை களமிறக்கும் டாடா..!!

குறிப்பாக 5 இருக்கைகள் கொண்ட எஸ்.யூ.வி கார் மாடல் இந்திய சந்தைக்கு ரூ.13 லட்சம் விலையில் வெளியாகலாம் என்று தெரிகிறது.

அந்த ரீதியில் டாடாவின் இந்த புதிய கார் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ரெனால்ட் கப்டூர் கார்களுக்கு போட்டியாக அமையும்.

இந்தியாவில் புதிய ரக எஸ்யூவி கார்களை களமிறக்கும் டாடா..!!

மற்றொரு மாடலான 7 இருக்கைகள் கொண்ட புதிய எஸ்.யூ.வி காரை, ஜீப் காம்பஸிற்கு போட்டியாக டாடா களமிறக்குகிறது.

இந்தியாவில் புதிய ரக எஸ்யூவி கார்களை களமிறக்கும் டாடா..!!

ஜீப் காம்பஸின் அதிகப்பட்ச விலையான ரூ.15 லட்சம் மதிப்பில் இந்த கார் உருவாகலாம். மேலும் காம்பஸ் மற்றும் லேண்ட்ரோவர் டிஸ்கர்வரி ஸ்போர்ட் கார்கள் தயாரிக்கப்பட்ட எல்550 பிளாட்ஃபார்மிலேயே டாடாவின் இந்த ரக எஸ்.யூ. வி கார் தயாராகவுள்ளது.

இந்தியாவில் புதிய ரக எஸ்யூவி கார்களை களமிறக்கும் டாடா..!!

ஒரே பிளாட்ஃபார்மில் தயாரனாலும் வடிவமைப்பு, ஸ்டைல் சொகுசுகான அம்சங்கள் மற்றும் எஞ்சின் தேவைகள் ஆகியவற்றில் டாடாவின் இந்த கார்கள் பல மாறுதல்களை கொண்டு இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய ரக எஸ்யூவி கார்களை களமிறக்கும் டாடா..!!

5 இருக்கைகள் கொண்ட புதிய எஸ்.யூ.வி காரில் டாடா நிறுவனம் எஃப்.சி.ஏ 2.0 லிட்டர் மல்டிஜெட் 2 எஞ்சினை டாடா பொருத்தக்கூடிய முனைப்பில் உள்ளது.

இதே எஞ்சின் 7 இருக்கைகள் கொண்டு தயாராகும் டாடாவின் மற்றொரு மாடலிலும் இருக்கலாம் என்று நிலை உள்ளது.

இந்தியாவில் புதிய ரக எஸ்யூவி கார்களை களமிறக்கும் டாடா..!!

புதிய எஸ்.யூ.வி ரக கார்களின் டாடா பொருத்தவுள்ள எஃப்.சி.ஏ 2.0 லிட்டர் மல்டிஜெட் 2 எஞ்சின், மாடல்களுக்கு ஏற்றவாறு 138 பிஎச்பி பவர் மற்றும் 168 பிஎசபி பவர் வழங்கும்.

இந்தியாவில் புதிய ரக எஸ்யூவி கார்களை களமிறக்கும் டாடா..!!

மேலும் இந்த இரண்டு எஸ்.யூ.வி கார்களிலும் டூ வீல் டிரைவ் மற்றும் 4 ட்வீல் டிரைவ் முறைப்படி கியர்பாக்ஸ் பொருத்தப்படும்.

இந்தியாவில் புதிய ரக எஸ்யூவி கார்களை களமிறக்கும் டாடா..!!

டாடா தயாரிக்கவுள்ள இந்த கார் ஸ்டைலிங்க், தோற்றம் மற்றும் எஞ்சின் செயல்திறன் ஆகியவை ஜீப் காம்பஸ், கிரெட்டா என்றில்லாமல், ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் மாடல்களுக்கு கூட போட்டியை வழங்கும் நிலையில் இருக்கும் என்பது ஆட்டோமொபைல் துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

மேலும்... #டாடா #tata
English summary
Read in Tamil: Tata Motors Confirms Rivals For Hyundai Creta And Jeep Compass. Click for Details...
Story first published: Tuesday, August 22, 2017, 12:59 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark