பலே, பலே... ராட்சத மரம் விழுந்தும் அசங்காத டாடா ஹெக்ஸா கார்!!

Written By:

புதிய டாடா கார்களின் கட்டுமானத் தரம் வெகுவாக மேம்பட்டு இருப்பதை அண்மை காலங்களில் நடந்த விபத்துக்களின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. டாடா டியாகோ மற்றும் டாடா ஹெக்ஸா கார்கள் விபத்துக்களின்போது சிறப்பான கட்டுமானத்துடன் பயணிகளை காத்தருளிய செய்திகளை ஏற்கனவே பகிர்ந்து இருக்கிறோம்.

ராட்சத மரம் விழுந்தும் அசங்காத டாடா ஹெக்ஸா கார்!!

இந்த நிலையில், டாடா ஹெக்ஸா காரின் கட்டுமானத் தரத்தின் உன்னதத்தை பரைசாற்றும் விதத்தில் அண்மையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அண்மையில் பெய்த கனமழை மற்றும் காற்று வீச்சு காரணமாக ராட்சத மரம் ஒன்று டாடா ஹெக்ஸா காரின் மீது விழுந்துவிட்டது.

ராட்சத மரம் விழுந்தும் அசங்காத டாடா ஹெக்ஸா கார்!!

வெளியில் நிறுத்தப்பட்டிருந்த அந்த காரின் மீது அந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்து விட்டது. இந்த சம்பவத்தில் டாடா ஹெக்ஸா காரின் கூரை பகுதி பலத்த சேதமடைந்தது.

ராட்சத மரம் விழுந்தும் அசங்காத டாடா ஹெக்ஸா கார்!!

ஆனால், டாடா ஹெக்ஸா காரின் ஏ பில்லர், பி பில்லர் மற்றும் சி பில்லர் ஆகியவை மிக வலுவாக இருந்ததன் காரணமாகவே ராட்சத மரம் விழுந்தும் அதனை தாங்கி நின்றுள்ளது.

Recommended Video - Watch Now!
Tata Tiago XTA AMT Variant Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ராட்சத மரம் விழுந்தும் அசங்காத டாடா ஹெக்ஸா கார்!!

நல்லவேளையாக காரில் பயணிகள் யாரும் இல்லை என்பதால், யாருக்கும் பாதிப்பு இல்லை. இதுவே வேறு கார்களாக இருந்தால் நிச்சயம் கார் மரத்தின் எடையை தாங்க முடியாமல் அப்பளமாகி போயிருக்கும்.

ராட்சத மரம் விழுந்தும் அசங்காத டாடா ஹெக்ஸா கார்!!

புதிய டாடா ஹெக்ஸா கார் ஹைட்ரோஃபார்ம்டு லேடர் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்படுகிறது. இந்த சேஸீ மிக உறுதியானது என்பதுடன், சிறந்த கட்டமைப்பை கொடுக்க வல்லது என்பதுடன், அருமையான ஓட்டுதல் தரத்தையும் வழங்கும். மேலும், எஸ்யூவி தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஆலோசனைகள் பேரில் உருவாக்கப்பட்டுள்ளது.

ராட்சத மரம் விழுந்தும் அசங்காத டாடா ஹெக்ஸா கார்!!

7 சீட்டர் மாடல்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுடன் டாடா ஹெக்ஸா போட்டி போடுகிறது.

ராட்சத மரம் விழுந்தும் அசங்காத டாடா ஹெக்ஸா கார்!!

இதில், டாடா ஹெக்ஸாவும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரும் ஹைட்ரோஃபார்ம்டு லேடர் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 மோனோகாக் சேஸீயை கொண்டது.

ராட்சத மரம் விழுந்தும் அசங்காத டாடா ஹெக்ஸா கார்!!

வடிவமைப்பில் எம்பிவி ரக கார் போன்று இருந்தாலும், செயல்பாடுகளில் எஸ்யூவி ரக கார்களின் சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. குறிப்பாக, ஆஃப்ரோடு சாகசங்களிலும் பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது.

ராட்சத மரம் விழுந்தும் அசங்காத டாடா ஹெக்ஸா கார்!!

அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த கார் இரண்டு சக்கரங்களில் சாகசம் செய்ததும் நினைவிருக்கலாம். இதன்மூலமாக, மிக உறுதியான சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை இந்த கார் பெற்றிருப்பது தெரிய வந்தது.

ராட்சத மரம் விழுந்தும் அசங்காத டாடா ஹெக்ஸா கார்!!

இந்த காரில் 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. ரூ.11. 68 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Source: Facebook

மேலும்... #டாடா #tata
English summary
Tata Hexa SUV Survives Large Tree Fall.
Story first published: Saturday, September 30, 2017, 14:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark