10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்யும் பல்க் ஆர்டரை கைப்பற்றியது டாடா மோட்டார்ஸ்!

Written By:

அரசுத் துறைக்கு 10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்யும் பல்க் ஆர்டரை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்யும் பல்க் ஆர்டரை கைப்பற்றியது டாடா மோட்டார்ஸ்!

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு, பேட்டரியில் இயங்கும் மின்சார கார் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி இருக்கிறது. வரும் 2030ம் ஆண்டிற்குள் முழுவதுமாக மின்சார வாகனங்கள் பயன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது.

10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்யும் பல்க் ஆர்டரை கைப்பற்றியது டாடா மோட்டார்ஸ்!

தனது இந்த முன்னோடி திட்டத்திற்கு முன்மாதிரியாக இருக்கும் விதத்தில், அரசுத் துறைகளில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் கார்கள் பயன்பாட்டை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 5 லட்சம் பெட்ரோல், டீசல் கார்கள் அரசுத் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

Recommended Video - Watch Now!
Tata Tiago XTA AMT Variant Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்யும் பல்க் ஆர்டரை கைப்பற்றியது டாடா மோட்டார்ஸ்!

இதனை படிப்படியாக குறைத்து மின்சார கார்களை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி, மத்திய அரசின் கீழ் செயல்படும் எனர்ஜி எஃபிசியன்சி சர்வீஸஸ் லிமிடேட் (EESL)மூலமாக மின்சார கார்களை கையகப்படுத்த முடிவு செய்தது.

10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்யும் பல்க் ஆர்டரை கைப்பற்றியது டாடா மோட்டார்ஸ்!

முதல்கட்டமாக 10,000 கார்களை சப்ளை செய்வதற்காக அண்மையில் டென்டர் கோரப்பட்டது. இதில், நிஸான், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை பெற விண்ணப்பம் கொடுத்தன.

10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்யும் பல்க் ஆர்டரை கைப்பற்றியது டாடா மோட்டார்ஸ்!

இதில், நிஸான் நிறுவனம் எலக்ட்ரிக் கார் மாடல் குறித்த விபரங்களை அளிக்காததால், அதன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.

10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்யும் பல்க் ஆர்டரை கைப்பற்றியது டாடா மோட்டார்ஸ்!

இந்த நிலையில், 10,000 மின்சார கார்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றி இருக்கிறது. இந்த ஆர்டரின் மதிப்பு ரூ.1,120 கோடி என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே அரசுத் துறையின் சார்பில் கார்களை சப்ளை பெறுவதற்கு அளிக்கப்படும் மிகப்பெரிய ஆர்டர் மதிப்பாக தெரிவிக்கப்படுகிறது.

10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்யும் பல்க் ஆர்டரை கைப்பற்றியது டாடா மோட்டார்ஸ்!

மஹிந்திரா நிறுவனத்தைவிட டாடா மோட்டார்ஸ் காருக்கு குறைவான விலையை நிர்ணயம் செய்திருந்தால், இந்த ஆர்டரை கைப்பற்றி இருக்கிறது. ஒரு காருக்கு ரூ.10.16 லட்சம் என்ற விலையை டாடா மோட்டார்ஸ் நிர்ணயம் செய்துள்ளது. ஜிஎஸ்டி வரி மற்றும் 5 ஆண்டுகளுக்கான வாரண்டியுடன் சேர்த்து ஒரு மின்சார காரை ரூ.11.2 லட்சம் விலையில் சப்ளை செய்ய இருக்கிறது.

10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்யும் பல்க் ஆர்டரை கைப்பற்றியது டாடா மோட்டார்ஸ்!

முதல்கட்டமாக வரும் நவம்பர் மாதத்தில் 500 மின்சார கார்களை டாடா மோட்டார்ஸ் சப்ளை செய்ய இருக்கிறது. இரண்டாவது கட்டமாக 9,500 கார்கள் சப்ளை கொடுக்கப்படும். இதற்கான கால வரம்பு குறித்த தகவல் இல்லை.

10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்யும் பல்க் ஆர்டரை கைப்பற்றியது டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் டாடா டீகோர் காம்பேக்ட் செடான் காரை EESL நிறுவனத்துக்கு சப்ளை அளிக்க இருக்கிறது. அண்மையில் டாடா டியாகோ காரின் மின்சார மாடல் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் 200 என்எம் டார்க் திறனை வழங்கும் 85kW திறன் வாய்ந்த மின்மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது.

10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்யும் பல்க் ஆர்டரை கைப்பற்றியது டாடா மோட்டார்ஸ்!

இந்த நிலையில், அதன் செடான் வெர்ஷனான டீகோர் காரிலும் இதே மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. மின்சார வாகன பயன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள மிக திடமான முடிவாகவே இந்த ஆர்டரை பார்க்க முடிகிறது.

மேலும்... #டாடா #tata
English summary
Tata Motors has bagged a government contract for supplying 10,000 electric cars by outbidding Mahindra & Mahindra (M&M). The order is worth Rs 1,120 crore, a largest such procurement in the world.
Story first published: Saturday, September 30, 2017, 12:45 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark