2017 நவம்பர் கார் விற்பனையில் மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்ற டாடா..!!

Written By:

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா உள்நாட்டில் எஸ்யூவி உட்பட பல மாடல் கார் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகின்றன.

2017 நவம்பர் கார் விற்பனையில் கலக்கிய டாடா மோட்டார்ஸ்..!!

டாடா மோட்டார்ஸ் நவம்பர் மாத முடிவில் 17,157 கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்தாண்டில் இதே காலவரையில் சுமார் 12,736 கார்களே டாடா விற்பனை செய்திருந்தது.

2017 நவம்பர் கார் விற்பனையில் கலக்கிய டாடா மோட்டார்ஸ்..!!

2016 மற்றும் 2017 நவம்பர மாத விற்பனையை ஒப்பிட்டு பார்க்கையில், இந்தாண்டில் சுமார் 35 விற்பனை வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது.

2017 நவம்பர் கார் விற்பனையில் கலக்கிய டாடா மோட்டார்ஸ்..!!

டாடாவின் இந்த விற்பனை திறன் அதிகரிக்க காரணமாக இருந்த கார்கள் டியாகோ, டிகோர், ஹெக்ஸா போன்ற மாடல்கள்.

இவற்றில் அதிமுக்கியமாக சமீபத்தில் டாடா அறிமுகப்படுத்திய நெக்ஸான் காம்பேக் எஸ்யூவி காரும் அடங்கும்.

2017 நவம்பர் கார் விற்பனையில் கலக்கிய டாடா மோட்டார்ஸ்..!!

மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் விற்பனைக்கு வந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி இந்திய சந்தையில் முன்னணியில் இருந்து வருகிறது.

2017 நவம்பர் கார் விற்பனையில் கலக்கிய டாடா மோட்டார்ஸ்..!!

குறிப்பாக நெக்ஸான் எஸ்யூவி-க்கு வேண்டி டாடா அறிமுகப்படுத்திய வேரியண்டுகளும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வருகின்றன.

2017 நவம்பர் கார் விற்பனையில் கலக்கிய டாடா மோட்டார்ஸ்..!!

பயணிகள் ரக வாகன சந்தையில் இந்தியாவின் மற்றொரு முன்னணி நிறுவனமாக இருப்பது மஹிந்திரா & மஹிந்திரா.

இந்நிறுவனம் 2017 நவம்பர் மாத முடிவில் எஸ்யூவி உட்பட சுமார் 16,030 கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 நவம்பர் கார் விற்பனையில் கலக்கிய டாடா மோட்டார்ஸ்..!!

கடந்த 2016ம் ஆண்டுடன் இந்தாண்டு நவம்பர் விற்பனை ஒப்பிடும் போது, மஹிந்திரா 2017ல் சுமார் 21 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

2017 நவம்பர் கார் விற்பனையில் கலக்கிய டாடா மோட்டார்ஸ்..!!

2016 நவம்பர் மாத கார் விற்பனையில் மஹிந்திரா முன்னிலை பெற்று டாடா பின்னிடவை சந்தித்தது.

ஆனால் இந்தாண்டில் நிலைமை அப்படியே தலைகீழாக திரும்பி டாடா கார் விற்பனையில் முன்னிலையில் உள்ளது.

2017 நவம்பர் கார் விற்பனையில் கலக்கிய டாடா மோட்டார்ஸ்..!!

தொடர்ந்து அடுத்தாண்டிலும் மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டாடா மோடார்ஸ் பல்வேறு அதிரடியான கார்களை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்யவுள்ளன.

2017 நவம்பர் கார் விற்பனையில் கலக்கிய டாடா மோட்டார்ஸ்..!!

குறிப்பாக இந்த இரு நிறுவனங்களும் தற்போது பிரபலமாக உள்ள கார் மாடலில் இருந்து, மின்சார ஆற்றல் கொண்ட மாடலை 2018ல் வெளியிடவுள்ளது.

English summary
Read in Tamil: Tata Motors Beats Mahindra & Mahindra In 2017 November Car Sales. Click for Details...
Story first published: Monday, December 4, 2017, 12:45 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark