இந்தியாவின் முதல் மீத்தேன் வாயுவில் இயங்கும் பேருந்தை தயாரிக்கிறது டாடா மோட்டார்ஸ்..!!

Written By:

வர்த்தக வாகன துறையில் இந்தியாவில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ், பையோ-மீத்தேன் வாயுவில் இயங்கும் முதல் பேருந்தை தயாரிக்கிறது.

மாற்று எரிவாயு தொழில்நுட்பத்தில் வாகனம் தயாரிக்கும் டாடா..!!

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணைந்து நடத்திய ஒரு நிகழ்வில் பங்கெற்ற டாடா, மீத்தேன் கொண்டு இயங்கும் பேருந்தை அறிமுகம் செய்து வைத்தது.

மாற்று எரிவாயு தொழில்நுட்பத்தில் வாகனம் தயாரிக்கும் டாடா..!!

மீத்தேன் வாயுவை கொண்டு இலகு ரக (LCV), கனரக (MCV) மற்றும் தனிநபர் கட்டுபாடு (ICV) ஆகிய பிரிவுகளில் எல்லாம் டாடா மோட்டார்ஸ் வாகனங்களை தயாரிக்க உள்ளது.

மாற்று எரிவாயு தொழில்நுட்பத்தில் வாகனம் தயாரிக்கும் டாடா..!!

LPO 1613 என்ற மாடலில் குறிப்படப்படும் இந்த பேருந்திற்கான மூன்று வித எஞ்சின்களும் இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.

பிஎஸ்-4 திறன் பெற்ற அந்த எஞ்சின்களுடன் பூனேவில் பேருந்திற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மாற்று எரிவாயு தொழில்நுட்பத்தில் வாகனம் தயாரிக்கும் டாடா..!!

இயற்கை எரிவாயு கொண்டு டாடா மோட்டார்ஸ் பலவித வாகனங்களை ஏற்கனவே இந்தியாவில் தயாரித்துள்ளது.

சிஎன்ஜி எஞ்சின்கள் கொண்டு தயாராகும் இதன் வாகனங்கள் செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் தனித்துவம் பெறுகிறது.

மாற்று எரிவாயு தொழில்நுட்பத்தில் வாகனம் தயாரிக்கும் டாடா..!!

டாடாவின் வர்த்தக வாகன பிரிவிற்கான தலைமை அதிகாரி கிரிஷ் வாக் இதைப்பற்றி கூறும்போது,

"மாற்று எரிசக்தி கொண்டு இயங்கும் வாகனத்தை அறிமுகம்படுத்தியதில் மகிழ்ச்சி. சிறிய நகரங்களுக்கு இயற்கை எரிவாயு கொண்டு இயங்கும் வாகனங்கள் அனைத்தும் நன்மை பயக்கும்" என்று தெரிவித்தார்.

மாற்று எரிவாயு தொழில்நுட்பத்தில் வாகனம் தயாரிக்கும் டாடா..!!

எஞ்சின் தயாரிப்பு பிரிவின் அதிகாரி ராஜேந்திரா படேகர் கூறும்போது,

"சுற்றுச்சூழலை பாதுகாப்பத்தில் முதற்படி தான் இந்த மீத்தேன் வாகன தயாரிப்பு. தினமும் நாம் தூக்கி எரியும் குப்பையில் இருந்து தான் மீத்தேன் போன்ற வாயு பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது" என்று தெரிவித்தார்,

மாற்று எரிவாயு தொழில்நுட்பத்தில் வாகனம் தயாரிக்கும் டாடா..!!

சுற்றுச்சூழலுக்கு ஏதுவான வாகன தொழில்நுட்பங்கள் உருவாகி வருவது வரவேற்க தக்கது. அதில் மீத்தேன் வாயுவால் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் டாடாவின் முயற்சி பாராட்டத்தக்கது.

English summary
Read in Tamil: India's largest commercial vehicle manufacturer Tata Motors has showcased the country's first Bio-CNG Bus. Click for Details...
Story first published: Tuesday, July 18, 2017, 11:00 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos