கோவையில் சோதனை செய்யப்பட்டு வரும் மின்சார நேனோ கார்... டாடாவின் அடுத்த கேம் பிளான்..!!

Written By:

இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா, நேனோ காரை மின்சார திறனுக்கு மாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

இதுகுறித்து பிரபல வணிக செய்தி நிறுவனம் ஒன்று, மின்சார நேனோ காருக்கான சோதனைகளை டாடா தற்போது தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

இந்த செய்தி வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதற்காக கோயம்புத்தூரின் ஊரக பகுதியில் மின்சார நேனோ காருக்கான சோதனை மேற்கொள்ளப்படுகின்றன.

Recommended Video - Watch Now!
Tata Tiago XTA AMT Variant Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

டாடாவிற்கு நேனோ ஒரு உணர்வுபூர்வமான தயாரிப்பு என்பதால் ரத்தன் டாடா முன்னிலையில் மின்சார நேனோ காருக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

சாலையில் கார் இயக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட அனைத்து சோதனைகளும் வெற்றியடைந்துள்ளன. ஆனால் அதனுடைய முடிவுகளை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

மின்சார திறனுக்கு நேனோ கார் மாற்றப்படுவதன் மூலம், டாடா மின்சார கார் உற்பத்தியில் தீவிரமாக இறங்குவது நிரூபனமாகியுள்ளது.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

லித்தியம்-இயான் பேட்டரிகளை கொண்டு நேனோ மின்சார காருக்கான திறனை டாடா பொருத்தியுள்ளது.

இந்தியாவில் ஒரே மின்சார காராக வலம் வரும் மஹிந்திராவின் இ2ஓ காருடன், டாடாவின் மின்சார நேனோ மாடல் போட்டியாக களமிறங்கும்.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

ரத்தன் டாடா உத்தரவின் பேரில் மிகவும் மலிவான விலையில் டாடா கார் தயாரிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

தற்போது டாடாவின் அந்த மலிவான கார், மின்சார நேனோ கார் தான் என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்திய வாடிக்கையாளர்களிடம் நேனோவிற்கு பெரிய மவுசு இருக்கிறது.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

டாடா உருவாக்கி வரும் மின்சார நேனோ கார் மாடல் நகரப்பகுதிகளுக்கு ஏற்றவாறான கட்டமைப்போடு தயாராகி வருவதாக தகவல் தெரிவிக்கிறது.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

மிகவும் மலிவான விலையில், அழகியல் சார்ந்த கட்டமைப்புகளுடன் மின்சார நேனோ கார் மாடலை உருவாக்க வேண்டும் என்பது தான் டாடாவின் நோக்கம்.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

மின்சார திறனுக்கு வாகனங்களை மாற்ற மத்திய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்திய மக்களும் மின்சார வாகன பயன்பாட்டின் அவசியத்தை உணர்ந்துள்ளனர்.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

இந்த நிலையில் மின்சார நேனோ கார் அறிமுகமானால், அதன் சந்தை மதிப்பு அதிரடியாக உயரும் என்பது ஆட்டோமொபைல் துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

மேலும் சிறிய ரக கார்களின் தேவையைக் கூட மின்சார நேனோ காரால் மாற்றியமைக்க முடியும். ஆனால் அவை அனைத்தும் டாடா நிர்ணயிக்கும் விலையில் அடிப்படையில் தான் உள்ளன.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

அறிவிப்பின் வாயிலாக பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மின்சாரா நேனோ காரின் முக்கிய தகவல்கள் மற்றும் செயல்திறனை டாடா விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

சர்வதேச அளவில் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.

இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது பங்கை உறுதிப்படுத்தவுள்ளது. இந்திய அரசும் மின்சார காரை ஊக்குவிப்பதில் ஊக்கம் காட்டுகிறது.

மின்சார நேனோ கார் தயாரிக்கும் முடிவில் டாடா..!!

ஆனால் இப்போது நமக்குள் எழும் கேள்வி என்னவென்றால், டாடா தயாரிக்கும் மின்சார நேனோ கார் நமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா..? காத்திருப்போம்.

மேலும்... #டாடா #tata
English summary
Read in Tamil: Tata Motors Tests Electric Nano In Coimbatore. Click for Details...
Story first published: Tuesday, August 29, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark