கனரக வாகன தயாரிப்புகளில் புதிய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி டாடா புதிய சாதனை..!!

Written By:

மின்னணு உறுதிப்பாடு கட்டுபாடு (இபிஎஸ்) கொண்ட பாதுகாப்பு வசதிகள்களுடன்  டிரக்குகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

கனரக வாகன பிரிவில் புதிய சாதனையை படைத்த டாடா..!!

இபிஎஸ் பாதுகாப்பு கட்டமைப்புகள் ஆடம்பர மற்றும் ப்ரீமியம் ரக கார்களில் மட்டுமே இதுவரை இருந்து வந்தது.

அதை முதன்முறையாக பிரைமா மற்றும் சிக்னா மாடல் டிரக்குகளில் பொருத்தி புதிய சாதனையை செய்துள்ளது டாடா நிறுவனம்.

கனரக வாகன பிரிவில் புதிய சாதனையை படைத்த டாடா..!!

மேலும் இவற்றில் இபிஎஸ் கருவியோடு தானாக இயங்கும் திறன் கொண்ட உராய்வு தடுப்பு கருவியான ஏடிசி மற்றும்

மலை வழி பயணங்களின் போது உதவும் ஹெச்எஸ்ஏ போன்ற இதர பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

Recommended Video - Watch Now!
2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
கனரக வாகன பிரிவில் புதிய சாதனையை படைத்த டாடா..!!

டாடாவின் டிரக்குகள் மற்றும் பேருந்து தயாரிப்புகள் அனைத்திலும் இந்த பாதுகாப்பு கட்டமைபுகள் இடம்பெற்றிருக்கும் என டாடா தெரிவித்துள்ளது.

கனரக வாகன பிரிவில் புதிய சாதனையை படைத்த டாடா..!!

வாகன பாதுகாப்புகளை கட்டமைப்பதில் முன்னிலை பெற்ற வேப்கோ இந்தியா என்ற நிறுவனத்துடன் கைக்கோர்த்து டாடா இந்த தொழில்நுட்பங்களை தனது தயாரிப்புகளில் பொருத்தியுள்ளது.

கனரக வாகன பிரிவில் புதிய சாதனையை படைத்த டாடா..!!

இத்தகைய தொழில்நுட்பங்களால் வாகனங்களுக்கான ஸ்திரத்தன்மை, விபத்திற்கான அபாயத்தை குறைத்தல், வாகனங்களுக்கான மேம்பாட்டு பணிகள் சீராக இருக்கும்.

கனரக வாகன பிரிவில் புதிய சாதனையை படைத்த டாடா..!!

இதன்மூலம் கனரக வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் செயல்திறனும் இவற்றுடன் சேர்ந்த அதிகரிக்கும்.

மத்திய அரசின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஏபிஎஸ் வசதியுடன் டாடா தயாரிக்கும் கனரக வாகனங்களில் இடம்பெற்றுள்ளது.

கனரக வாகன பிரிவில் புதிய சாதனையை படைத்த டாடா..!!

மின்னணு உறுதிப்பாடு கட்டமைப்பால், வாகனங்களில் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு பாதுகாப்புகள் நிலைபெறும். இதனால் விபத்துக்களின் அதிகரிப்பபை தடுக்கும் அல்லது குறைக்கும்.

கனரக வாகன பிரிவில் புதிய சாதனையை படைத்த டாடா..!!

வாகனம் சாலையில் செல்லும் போது, வரவிருக்கும் உறுதியற்ற தன்மையை முன்னரே கணிப்பது தான் இஎஸ்சி-யின் செயல்பாடு.

அது போன்ற ஆபத்துகளுடன், வாகனம் உருள்வது, ஸ்கிட் அடிப்பது அல்லது குதித்து எழும்புவது போன்ற செயல்களையும் அது தடுக்கிறது.

கனரக வாகன பிரிவில் புதிய சாதனையை படைத்த டாடா..!!

இதுப்பற்றி பேசிய டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகன பிரிவின் தலைவர் கிரிஷ் வாஹ்,

"மின்னணு உறுதிப்பாடு கட்டுப்பாட்டை பொருத்திய இந்தியாவில் அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) டாடா தான். வாகனங்களுக்கான பாதுகாப்பை தற்போது கனரக வாகன பிரிவிற்கும் டாடா வழங்குகிறது."என்று கூறினார்.

கனரக வாகன பிரிவில் புதிய சாதனையை படைத்த டாடா..!!

இஎஸ்சி தொழில்நுட்பத்தை கனரக மற்றும் நடுத்தர வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் கட்டமைத்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது.

கனரக வாகன பிரிவில் புதிய சாதனையை படைத்த டாடா..!!

மேலும் டிரக் மற்றும் பேருந்துகளில் டாடா ஏற்படுத்தியுள்ள இந்த பாதுகாப்பிற்கான நகர்வு பல்வேறு வாகன கட்டமைப்புகளிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும்... #டாடா #tata
English summary
Read in Tamil: Tata Motors Becomes First OEM To Introduce ESC In Medium And Heavy CVs. Click for Details...
Story first published: Monday, October 9, 2017, 15:32 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark