சொன்னது போலவே மத்திய அரசின் எரிசக்தி நிறுவனத்திற்கு 250 டிகோர் மின்சார கார்களை வழங்கிய டாடா..!!

சொன்னது போலவே மத்திய அரசின் எரிசக்தி நிறுவனத்திற்கு 250 டிகோர் மின்சார கார்களை வழங்கிய டாடா..!!

By Azhagar

டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தனது குஜராத் தொழிற்சாலையில் இருந்து மின்சார திறன் பெற்ற 250 டிகோர் கார்களை தயாரித்து முடித்துள்ளது.

டிகோர் மின்சார கார்... சொன்னதை செய்தது டாடா மோட்டார்ஸ்...!!

எரிசக்தி திறனை நிர்வகித்து வரும் மத்திய அரசின் எரிசக்தி திறன் சேவை [இஇஎஸ்எல்] நிறுவனத்திற்கு இக்கார்களை டாடா தற்போது வழங்கியுள்ளது.

டிகோர் மின்சார கார்... சொன்னதை செய்தது டாடா மோட்டார்ஸ்...!!

இந்தியாவில் மின்சார கார்களை பிரபலப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் இஇஎஸ்எல் 10,000 மின்சார கார்களுக்கான டெண்டரை வெளியிட்டு இருந்தது.

டிகோர் மின்சார கார்... சொன்னதை செய்தது டாடா மோட்டார்ஸ்...!!

அதை கைப்பற்றிய டாடா, மின்சார கார் பயன்பாட்டிற்கான முதற்கட்ட பணிகளில் 250 டிகோர் மின்சார கார்களை தயாரித்து அதை இஇஎஸ்எல்-க்கு வழங்கியுள்ளது.

டிகோர் மின்சார கார்... சொன்னதை செய்தது டாடா மோட்டார்ஸ்...!!

டாடாவின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் குவென்டோ புட்செக், 250 டிகோர் மின்சார கார்களுக்கான சாவிகளை இஇஎஸ்எல் நிர்வாக இயக்குநர் சௌரப் குமாரிடம் வழங்கினார்.

Recommended Video

The Emflux Motors Model 1 – India’s First Electric Motorcycle
டிகோர் மின்சார கார்... சொன்னதை செய்தது டாடா மோட்டார்ஸ்...!!

கம்பஷன் எஞ்சின் மாடலில் முற்றிலும் மின்சார ஆற்றலில் இயங்கக்கூடிய வடிவில் டிகோர் மின்சார கார் தயாராகியுள்ளது.

சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்ற ஸ்டைல்பேக் காரான இதை டாடா மோட்டார்ஸ் மொத்தம் 3 வேரியண்டுகளில் வெளியிடுகிறது.

டிகோர் மின்சார கார்... சொன்னதை செய்தது டாடா மோட்டார்ஸ்...!!

பேஸ், ப்ரீமியம் மர்றும் ஹை என்ற பெயர்களில் டாடா டிகோர் மின்சார காரின் வேரியண்டுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன.

டிகோர் மின்சார கார்... சொன்னதை செய்தது டாடா மோட்டார்ஸ்...!!

தற்போதைய எரிவாயுவில் இயங்கும் டிகோர் காரை பின்பற்றி தான் மின்சார திறன் பெற்ற டிகோர் தயாராகியுள்ளது. மேலும் இந்த கார் ப்ளூ டிகேலுடன் கூடிய பியர்ஸென்ட் வைட் நிறத்தில் மட்டுமே கிடைக்கும்.

டிகோர் மின்சார கார்... சொன்னதை செய்தது டாடா மோட்டார்ஸ்...!!

சிங்கிள்-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றை டிகோர் மின்சார மாடல் கொண்டுள்ளது.

மேலும் காருக்கான மின்சார ஆற்றலை வழங்கும் டிரைவிங் சிஸ்டத்தை எலெக்ட்ரா என்ற நிறுவனம் உருவாக்கி டாடாவிற்கு அளித்துள்ளது.

டிகோர் மின்சார கார்... சொன்னதை செய்தது டாடா மோட்டார்ஸ்...!!

டிகோர் மின்சார கார்களை இஇஎஸ்எல் நிறுவனத்திற்கு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய டாடாவின் நிர்வாக இயக்குநர் குவென்டோ புட்செக்,

"டாடாவின் மின்சார கார் உற்பத்தி பயணத்தை டிகோர் இ.வி மாடல் உருவாக்கி வைத்துள்ளது. அரசுடன் இணைந்து மேலும் பல கார்களை டாடா தயாரித்து வழங்கும்" என்றார்.

டிகோர் மின்சார கார்... சொன்னதை செய்தது டாடா மோட்டார்ஸ்...!!

இந்திய அரசாங்கம் 2030ம் ஆண்டிற்குள் நாட்டின் வாகன பயன்பாட்டை அனைத்தும் மின்சார தேவைக்கு உருவாக்க முடிவு செய்துள்ளது.

அரசின் திட்டங்களுக்கு ஏற்றவாறு முற்றிலும் மின்சார ஆற்றல் கொண்ட வாகனங்களை மட்டுமே எதிர்காலத்தில் டாடா தயாரிக்கவுள்ளது.

டிகோர் மின்சார கார்... சொன்னதை செய்தது டாடா மோட்டார்ஸ்...!!

மின்சார வகானங்களை மட்டுமே உருவாக்க நிதி தேவை அதிகரிக்கும் பட்சத்தில், பல நிறுவனங்களுடன் இணைந்து மின்சார ஆற்றல் கொண்ட வாகனங்களை டாடா தயாரிக்கும்.

டிகோர் மின்சார கார்... சொன்னதை செய்தது டாடா மோட்டார்ஸ்...!!

எதிர்கால ஆட்டோதுறை மின்சார ஆற்றலுக்கு மாறி வருகிறது. இந்தியாவும் இதில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

ஆனால் அதற்கான கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. நம் நாட்டில் மின்சார கட்டமைப்பு வலிமை பெற்றால் மட்டுமே இந்த திட்டம் சாத்தியமாகும்.

டிகோர் மின்சார கார்... சொன்னதை செய்தது டாடா மோட்டார்ஸ்...!!

மின்சார ஆற்றலை நோக்கி நகர்ந்து வரும் இந்திய ஆட்டோ துறையில் வேகமாக பேட்டரி சார்ஜிங் நிலையங்களை நிறுவதற்கான கட்டமைப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

Most Read Articles
English summary
Read in Tamil: Tata Motors Delivers First Batch Of Tigor EV To EESL. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X