புதிய டாடா ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது

Written By:

புதிய கார் பிராண்டை டாடா மோட்டார்ஸ் இன்று வெளியிட்டு இருக்கிறது. இந்த புதிய பிராண்டில் முதலாவதாக, விலை குறைவான ஸ்போர்ட்ஸ் கார் மாடலையும் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆட்டோமொபைல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த செய்தியை விரிவாக காணலாம்.

புதிய டாடா ஸ்போர்ட்ஸ் கார் விரைவில் வெளியீடு

TAMO என்ற புதிய ஃபெர்ஃபார்மென்ஸ் கார் பிராண்டை டாடா மோட்டார்ஸ் இன்று அறிமுகம் செய்துள்ளது. Tata Motors என்ற வார்த்தைகளில் முதல் இரண்டு எழுத்துக்களை எடுத்து இணைத்து டாமோ என்ற பெயரை அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

புதிய டாடா ஸ்போர்ட்ஸ் கார் விரைவில் வெளியீடு

அடுத்த மாதம் 7ந் தேதி ஜெனிவா மோட்டார் ஷோவில் டாமோ பிராண்டில் முதலாவதாக புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் மாடல் குறித்த ஆர்வம் அதிகமாகி உள்ளது.

புதிய டாடா ஸ்போர்ட்ஸ் கார் விரைவில் வெளியீடு

மேலும், நவீன தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்தவும், புதிய மாடல்களை விரைவாக தயாரிக்கவும் இந்த புதிய டாமோ பிராண்டை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்த உள்ளது. மேலும், உலகளாவிய அளவில் ஆட்டோமொபைல் துறையில் சம்பந்தப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் இந்த டாமோ பிராண்டு துணை நிற்கும்.

புதிய டாடா ஸ்போர்ட்ஸ் கார் விரைவில் வெளியீடு

புதுமையான தொழில்நுட்பங்கள், கார் வடிவமைப்பு துறையில் உள்ள சவால்களுக்கு தீர்வு காண்பதற்கும், புதிய கார் வடிவமைப்பு தாத்பரியங்களை உருவாக்குவதற்கும் இந்த டாமோ பிராண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உறுதுணையாக இருக்கப் போகிறது.

புதிய டாடா ஸ்போர்ட்ஸ் கார் விரைவில் வெளியீடு

இந்த நிலையில், டாமோ பிராண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் Futuro என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த காரில் 2 பேர் செல்லத்தக்க மிட் எஞ்சின் ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இருக்கும்.

புதிய டாடா ஸ்போர்ட்ஸ் கார் விரைவில் வெளியீடு

சேஸியை தவிர்த்து முழுக்க முழுக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொந்த முயற்சியில் இந்த காரை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காருக்கான சேஸீயை மார்செல்லோ காந்தினி என்ற பிரபல வடிவமைப்பாளர் உருவாக்கி தந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

புதிய டாடா ஸ்போர்ட்ஸ் கார் விரைவில் வெளியீடு

புதிய டாமோ ஃப்யூச்சரோ காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 180 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய கலவையிலான பேனல்கள் மற்றும் கட்டமைப்பு பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய டாடா ஸ்போர்ட்ஸ் கார் விரைவில் வெளியீடு

டாமோ ஃப்யூச்சரோ கார் ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் வாய்ப்புகள் தென்படுகின்றன.

Source: Autocarindia

டொயோட்டா சிஎச்-ஆர் எஸ்யூவியின் படங்கள்!

டொயோட்டா சிஎச்-ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது என்ற தகவலை கேட்டவுடன், அதனை முழுமையாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறதல்லவா? அதனை தீர்ப்பதற்காக 35 படங்கள் அடங்கிய கேலரியை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

English summary
The TAMO brand will be an agile, ring-fenced vertical operating in an incubating environment towards new technologies, business models and partnerships.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark