டாடா நானோ கார் உயிர் பிழைக்க கடைசி வாய்ப்பு!

Written By:

டாடா நானோ கார் விற்பனையில் மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் கனவு கார் என்பதால், நானோவை காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகளும், போராட்டங்களுக்கும் போதிய பலன் கிட்டவில்லை.

டாடா நானோ கார் உயிர் பிழைக்க கடைசி வாய்ப்பு!

இந்த நிலையில், டாடா நானோ கார் உயிர் பிழைக்க கடைசி வாய்ப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆம், டாடா நானோ காரின் மின்சார மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

டாடா நானோ கார் உயிர் பிழைக்க கடைசி வாய்ப்பு!

தற்போது மின்சார டாடா நானோ கார் சாலை சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சோதனைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா நானோ கார் உயிர் பிழைக்க கடைசி வாய்ப்பு!

வரும் பிப்ரவரி மாதம் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் மின்சார டாடா நானோ கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
டாடா நானோ கார் உயிர் பிழைக்க கடைசி வாய்ப்பு!

புதிய டாடா நானோ மின்சார கார் மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் காருக்கு போட்டியான விலையில் நிலைநிறுத்தப்பட உள்ளதாகவும் தெரிகிறது. மேலும், இந்த காரை டாக்சி ஆபரேட்டர்களை குறிவைத்து அறிமுகம் செய்யவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. பின்னர் தனி நபர் மார்க்கெட்டையும் பிடிக்க திட்டம் உள்ளது.

டாடா நானோ கார் உயிர் பிழைக்க கடைசி வாய்ப்பு!

ஓலா மற்றும் லித்தியம் கேப் ஆகிய நிறுவனங்கள் மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் கார்களை வாடகைக்கு பயன்படுத்தி வருகின்றன. வரும் ஆண்டுகளில் டாக்சி மார்க்கெட்டில் மின்சார கார்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

டாடா நானோ கார் உயிர் பிழைக்க கடைசி வாய்ப்பு!

எனவே, மிக குறைவான விலையிலான மின்சார கார் மாடல்களுக்கு வர்த்தகம் இருக்கிறது. இந்த மார்க்கெட்டை நானோ காரை வைத்து பிடிக்க டாடா மோட்டார்ஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

டாடா நானோ கார் உயிர் பிழைக்க கடைசி வாய்ப்பு!

நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு மிக ஏற்றதாக டாடா நானோ கார் இருக்கும் என்பதுடன், வாடகை கார் நிறுவனங்களின் வளாகத்தில் எளிதாக சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைத்துக் கொடுத்துவிட முடியும். எனவே, விரைவில் டாடா நானோ காரின் மின்சார மாடல் நகர்ப்புறங்களில் வாடகை கார் அவதாரம் எடுக்கும் என்று தெரிகிறது.

டாடா நானோ கார் உயிர் பிழைக்க கடைசி வாய்ப்பு!

இதன்மூலமாக, மூழ்கும் கப்பலாக இருக்கும் டாடா நானோ காருக்கு மறுபிறவி கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், இது நானோ காருக்கு டாடா மோட்டார்ஸ் எடுக்கும் இறுதி முயற்சியாகவும் இருக்கும்.

மேலும்... #டாடா #tata
English summary
This Is The Last Chance For Tata Nano To Survive The Competition.
Story first published: Monday, October 9, 2017, 16:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark