டாடாவின் பரம ரகசியம்: கோவையில் உளவு பார்க்கப்பட்ட மின்சார ஆற்றல் கொண்ட நேனோ கார்..!!

Written By:

நேனோ காருக்கு இருந்த வரவேற்பை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இயங்கி வருகிறது டாடா மோட்டார்ஸ்.

அதில் முதற்கட்டமாக விரைவில் மின்சார ஆற்றல் கொண்டு இயங்கும் புதிய நேனோ கார் மாடலை வெளியிடுகிறது அந்நிறுவனம்.

கோவையில் சோதனை செய்யப்பட்டு வரும் டாடா நேனோ கார்..!!

நேனோ மின்சார கார் தயாரிப்பு பணிகள் குறித்து ரகசியம் காத்து வரும் டாடா, அதற்கான சோதனை பணிகளை தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறது.

கோவையில் சோதனை செய்யப்பட்டு வரும் டாடா நேனோ கார்..!!

இதை உறுதி செய்து செய்தியை வெளியிட்டுள்ள டீம்பிஎச்பி, அதற்கான ஸ்பை புகைப்படங்களையும் செய்திக்கான தளத்தில் பதிவிட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
கோவையில் சோதனை செய்யப்பட்டு வரும் டாடா நேனோ கார்..!!

இவற்றின் மூலம் நாம் தெரிந்துக்கொள்ளும் வகையில், தற்போதைய இருக்கும் அதே மாடலில் தான் டாடாவின் புதிய மின்சார நேனோ கார் தோற்றமளிக்கிறது.

கோவையில் சோதனை செய்யப்பட்டு வரும் டாடா நேனோ கார்..!!

காரின் கண்ணாடி ஜன்னலில் '4BNEV-A08' என்ற எண் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இது நேனோ காரின் மின்சார பதிப்பிற்கான குறியீடாக உள்ளது.

கோவையில் சோதனை செய்யப்பட்டு வரும் டாடா நேனோ கார்..!!

புதியதாக தயாராகிக்கப்பட்டுள்ள இந்த நேனோ காரில் லித்தியம் - அயன் பேட்டரிகள், காரின் மின்சார மோட்டாரில் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையில் சோதனை செய்யப்பட்டு வரும் டாடா நேனோ கார்..!!

ஆனால் இருந்தாலும் இந்த காருக்கான சிறப்பம்சங்களை பற்றி டாடா இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

கோவையில் சோதனை செய்யப்பட்டு வரும் டாடா நேனோ கார்..!!

மின்சார வாகனங்களை தயாரிக்க டாடா இங்கிலாந்தில் 'டாடா ஐரோப்பிய தொழில்நுட்ப மையம்' என்ற அமைப்பை தொடங்கியுள்ளது.

கோவையில் சோதனை செய்யப்பட்டு வரும் டாடா நேனோ கார்..!!

தயாரிப்பு நிலையை எட்டியுள்ள டியாகோ மற்றும் போல்ட் கார்களை மின்சார ஆற்றலுக்கு மாற்றி டாடா காட்சிப்படுத்தி இருந்தது.

கோவையில் சோதனை செய்யப்பட்டு வரும் டாடா நேனோ கார்..!!

இந்தியாவில் நேனோ கார் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாடலாகும். இதை மீட்டெடுக்கும் முயற்சியில் தான் டாடா இறங்கியுள்ளது.

கோவையில் சோதனை செய்யப்பட்டு வரும் டாடா நேனோ கார்..!!

மின்சார ஆற்றல் பெற்ற நேனோ காரை டாடா உருவாக்கி வருவது தொடர்பான அறிவிப்பு வெளியான போது, இந்திய சந்தையில் நிச்சயம் இந்த கார் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Read in Tamil: Tata Nano Electric Car Spied Testing in Coimbatore. Click for Details...
Story first published: Tuesday, September 12, 2017, 11:17 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark