சைரஸ் மிஸ்திரியை நீக்க காரணமான நானோ காரை கைவிட டாடா மோட்டார்ஸ் முடிவு!

நானோ, சுமோ கிரேண்டே உள்ளிட்ட 4 மாடல் கார்களை அடுத்த சில ஆண்டுகளில் கைவிட முடிவு செய்துள்ளது டாடா நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

இந்தியாவின் முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், அடுத்த ஒரு சில ஆண்டுகளில் அதன் பிரபலமான 4 மாடல் கார்களை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் விரிவாக காணலாம்.

இண்டிகா, நானோ, சுமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாடா!

கமர்ஷியல் வாகனங்கள் முதல் ராணுவ பயன்பாட்டு வாகனங்கள் வரை தயாரித்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 1991ஆம் ஆண்டு முதல் கார் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. உலகிலேயே மலிவான விலை கொண்ட கார் என அடையாளப்படுத்தப்படும் நானோ காரை தயாரித்து வாகனச் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது டாடா மோட்டார்ஸ்.

இண்டிகா, நானோ, சுமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாடா!

தற்போது 10 மாடல் கார்களை தயாரித்து வரும் இந்நிறுவனம், அதில் 4 மாடல்களை அடுத்த சில ஆண்டுகளில் கைவிடப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, டாடா நானோ, இண்டிகா, இண்டிகோ சிஎஸ் மற்றும் சுமோ கிரேண்டே உள்ளிட்ட மாடல்கள் கைவிடப்பட உள்ளன.

இண்டிகா, நானோ, சுமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாடா!

டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடாவின் விருப்பத்தில் உருவான நானோ கார் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியம் அளித்தாலும் உலகின் மலிவு விலை கொண்ட கார் என்ற அந்தஸ்தை இழந்ததால் நானோ காருக்கு ஏற்பட்டிருந்த வரவேற்பும் குறைந்துவிட்டது என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

இண்டிகா, நானோ, சுமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாடா!

இதுதொடர்பாக டாடா மோட்டார்ஸின் மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் விவேக் ஸ்ரீவத்ஸவா கூறுகையில். "டாடா நிறுவனம் அதன் பிளாட்ஃபார்ம் எண்ணிக்கையை 2021 ஆண்டிற்குள் 6ல் இருந்து 2 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த பிளாட்ஃபார்ம்களில் 10 மாடல் கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன"

இண்டிகா, நானோ, சுமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாடா!

"2019-20 காலகட்டத்தில் குறைந்தபட்சம் 4 புதிய மாடல்களை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம், இதனால் புதிய மாடல்களுக்கு வழிவிடும் வகையில் தற்போது இருக்கக்கூடிய மாடல்களில் நான்கை கைவிட முடிவு செய்துள்ளோம்" என்றார்.

இண்டிகா, நானோ, சுமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாடா!

கடந்த ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு முக்கிய காரணமாக இருந்ததே நானோ கார் தான் என்று கூறப்பட்டது.

இண்டிகா, நானோ, சுமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாடா!

மிஸ்திரியின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் ஆகியவை டாடா சன்ஸ் குழுமத்திற்கு அதிருப்தி ஏற்பட்ட காரணத்தினால் நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டாலும் நானோ கார் சரியாக விற்பனை ஆகாததால் அதனை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியதன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இண்டிகா, நானோ, சுமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாடா!

இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு பின்னாள் இருந்த நானோ கார் தற்போது கைவிடப்பட உள்ளது. மேலும் கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவின் பயணிகள் போக்குவரத்து கார்களில் முக்கிய இடம்பெற்றிருந்த சுமோ காரின் வழித்தோன்றலாக இருந்து வரும் சுமோ கிரேண்டே காரும் அடுத்த சில ஆண்டுகளில் கைவிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
tata announces to phase out sumo, nano, indica and indigo cs cars in next 3 years
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X