நெக்ஸான் எஸ்யூவி 10000வது காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்...!!

Written By:

டாடா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி காரின் 10,000-வது யூனிட் பூனே ஆலையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட 10,000வது நெக்ஸான் எஸ்யூவி கார்..!!

இந்தியாவில் நெக்ஸான் எஸ்யூவி காருக்கான விற்பனையை டாடா மோட்டார்ஸ் கடந்து மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட 10,000வது நெக்ஸான் எஸ்யூவி கார்..!!

அறிமுகமான நாள் முதல் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை இந்த கார் பெற்று வருகிறது.

இந்த காரின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, தற்போது 10,000-வது நெக்ஸான் கார் பூனே ஆலையில் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட 10,000வது நெக்ஸான் எஸ்யூவி கார்..!!

அக்டோபர் மாத இறுதியில் இந்தியாவில் 43666 டீசல் மற்றும் 1505 பெட்ரோல் மாடல்களில் டாடா நெக்ஸான் கார் விற்பனை ஆகியிருந்தது.

ஜோரான விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கில், நெக்ஸான் காரின் 10,000 மாடலை டாடா பூனே ஆலையில் இருந்து வெளியிட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட 10,000வது நெக்ஸான் எஸ்யூவி கார்..!!

டாடா நெக்ஸான் காரில் வரவேற்பு பெற்ற எக்ஸ்.இசட்+ மாடலில் பகலில் எரியும் எல்.இ.டி விளக்குகள், டூயல்-டோன் ரூஃப் வசதி என பல்வேறு தேவைகள் உள்ளன.

Recommended Video - Watch Now!
[Tamil] Tata Nexon Review: Specs
டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட 10,000வது நெக்ஸான் எஸ்யூவி கார்..!!

தொடர்ந்து விற்பனையில் வரவேற்பு பெற்று வரும் டாடா நெக்ஸான் கார், புக்கிங் செய்து குறைந்தபட்சம் எட்டு வார காத்திருப்பிற்கு பிறகு வாடிக்கையாளர்களை சென்றடைகிறது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட 10,000வது நெக்ஸான் எஸ்யூவி கார்..!!

பெட்ரோல், டீசல் என இருவேறு தேர்வுகளில் டாடா நெக்ஸான் கார் தயாரிக்கப்படுகிறது. 3 சிலிண்டர் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோடிரான் எஞ்சின் நெக்ஸான் பெட்ரோல் மாடலில் உள்ளது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட 10,000வது நெக்ஸான் எஸ்யூவி கார்..!!

அதேபோல 1.5 லிட்டர் ரெவோடார்க் நான்கு சிலிண்டர் கொண்ட எஞ்சின் டீசல் தேர்வுக்கான நெக்ஸான் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ளது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட 10,000வது நெக்ஸான் எஸ்யூவி கார்..!!

டாடா நெக்ஸான் எஸ்யூவி பெட்ரோல் மாடலில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோடிரான் எஞ்சின் தான் டியாகோ மற்றும் டிகோர் கார்களை வழங்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட 10,000வது நெக்ஸான் எஸ்யூவி கார்..!!

6.5 இஞ்ச் தொடுதிரை கொண்ட நெக்ஸான் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட 10,000வது நெக்ஸான் எஸ்யூவி கார்..!!

இத்துடன் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் ரக ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டு டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட 10,000வது நெக்ஸான் எஸ்யூவி கார்..!!

இந்தியாவில் டாடா நெக்சன் விலை ரூ.5.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்குகிறது. மாருது சுசுகி விடாரா பிரெசா மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடல்களுக்கு புதிய நெக்சன் போட்டியாக அமைந்துள்ளது.

English summary
Read in Tamil: Tata Motors Rolls Out The 10,000th Nexon SUV — Are The Rivals Listening? Click for Details...
Story first published: Wednesday, December 6, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark