டாடா நெக்ஸான் கார் பற்றி வாடிக்கையாளர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய டாப் விவரங்கள்..!!

Written By:

டாடா மோட்டார்ஸின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி நெக்ஸான் மாடல் ஜோராக விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!

இந்திய சந்தையில் இந்த கார் மாருதி விட்டாரா பிரிஸ்ஸா, ஃபோர்டு ஈகோஸ்போர்ட், ஹோண்டா டபுள்யூ.ஆர்-வி மற்றும் மஹிந்திரா டியூவி 300 மாடல்களுக்கு போட்டியாக களம்கண்டுள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!

ரூ.11,000 தொடக்க விலையில் டாடா நெக்ஸான் காருக்கான முன்பதிவு தொடங்குகிறது. எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ.5.85 லட்சம் விலையில் தொடங்கும் இந்த கார், முன்பதிவு செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு டெலிவரி செய்யப்படும்.

டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!

நகரங்கள் முன்பதிவு விலை
பெங்களூர் ரூ.11,000
பூனே ரூ.11,000
மும்பை ரூ.11,000
டெல்லி ரூ.11,000
ஹைதராபாத் ரூ.11,000
சென்னை ரூ.11,000
டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!

டாட்டா நெக்ஸான் காரின் முன்பதிவு விலையை அதனுடைய போட்டி மாடல்களோடு ஒப்பிடும்போது பெரிய வேறுபாட்டை உணர முடிகிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!
மாடல்கள் முன்பதிவு விலை
டாடா நெக்ஸான் ரூ.11,000
ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ரூ.10,000
மாருதி சுசுகி விட்டார பிரிஸ்ஸா ரூ.21,000
மஹிந்திரா டியூவி 300 ரூ.25,000
டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!

டாடா நெக்ஸானின் டெலிவெரி (போட்டி நிறுவனங்கள் ஒப்பீடாக)

மாடல்கள் டெலிவெரி காலம்
டாடா நெக்ஸான் 12 வாரங்கள்
மாருதி சுசுகி விட்டார பிரிஸ்ஸா 18 வாரங்கள்
ஃபோர்டு ஈகோஸ்போர்ட் 1 வாரம்
மஹிந்திரா டியூவி 300 1 வாரம்
டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!

பெட்ரோல் மற்றும் டீசல் என இருவேறு தேர்வுகளிலும் டாடா நெக்ஸான் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் திறன் 1.2 லிட்ட அளவிலும், டீசல் எஞ்சின் திறன் 1.5 லிட்டர் அளவிலும் உள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!

டாடா நெக்ஸான் காரின் வேரியண்டுகளின் விவரங்கள் மற்றும் அதற்கான சிறப்பம்சங்களுடன் பார்க்கலாம்.

பெட்ரோல் வேரியண்ட்(அறிமுக விலை டெல்லி) ஜிஎஸ்டி (எக்ஸ்-ஷோரூம் விலை)
எக்ஸ்.இ ரூ.5,85,000 லட்சம்
எக்ஸ்.எம் ரூ.6.49,900 லட்சம்
எக்ஸ்.டி ரூ.7.29,900 லட்சம்
எக்ஸ்.இசட்+ ரூ.8,44,900 லட்சம்
எக்ஸ்.இசட்+ (டூயல்-டோன் ரூஃப்)* ரூ.8.59,900 லட்சம்
டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!
டீசல் வேரியண்ட் (அறிமுக விலை டெல்லி) ஜிஎஸ்டி (எக்ஸ்-ஷோரூம் விலை)
எக்ஸ்.இ ரூ.6,85,000
எக்ஸ்.எம் ரூ.7,39,900
எக்ஸ்.இசட்+ ரூ.9,29,900
எக்ஸ்.இசட்+ (டூயல்-டோன் ரூஃப்)* ரூ.9,44,900
டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!

டாடா நெக்ஸானின் சிறப்பம்சங்கள்

எஞ்சின் (பெட்ரோல்) 1,198சிசி 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல்
எஞ்சின் (டீசல்) 1,497சிசி 4-சிலிண்டர் டர்போ டீசல்
கியர்பாக்ஸ் 6-ஸ்பீடு மேனுவல்
பவர்/டார்க் (பெட்ரோல்) 108.5 பிஎச்பி பவர் , 170 என்.எம் திறன்
பவர்/டார்க் (டீசல்) 108.5 பிஎச்பி பவர், 260 என்.எம் திறன்
எரிவாயு கொள்ளவு 44 லிட்டர்
கிரவுண்ட் கிளயரன்ஸ்(அன்லேடன்) 209மிமீ
எடை 1237 கிலோ (பெட்ரோல்) / 1350 கிலோ (டீசல்)
டயர் குட் இயர் 215/ 60 ஆர்16
டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!

டாடா நெக்ஸான் கார் மோரோகான் ப்ளூ, வெர்மான்ட் ரெட், சியாட்டில் சில்வர், கிளாஸ்கோவ் கிரே மற்றும் கேல்கரி வைட் போன்ற நிறங்களில் விற்பனை ஆகவுள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!

டாடா நெக்ஸான் காரில் உள்ள தொழில்நுட்ப கட்டமைப்புகள்

  • டூயர் ஏர்பேக்ஸ்
  • ஏபிஎஸ்
  • மல்டி-டிரைவ் மோட்ஸ் (ஸ்போர்ட், சிட்டி மற்றும் ஈகோ)
  • குடை வைக்கும் இடம்
இந்த அனைத்து வசதிகளும் டாடா நெக்ஸான் காரின் அனைத்து வேரியண்டுகளிலும் உள்ளது.
  • ஹர்மான் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
  • ரியர் பார்க்கிங் சென்சார்ஸ்
  • ரிமோட் கண்ட்ரோல் கொண்டு காரை பூட்டுவது
இவை அனைத்தும் டாடா நெக்ஸானின் எக்ஸ்.எம், எக்ஸ்.டி மற்றும் எக்ஸ்.இசட்+ வேரியண்டுகளில் மட்டும் உள்ளது.
டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!
  • இலுமினேடட் மற்றும் கூல்டு குளோவ்பாக்ஸ் (எக்ஸ்.டி மற்றும் எக்ஸ்.இசட்+ வேரியண்டுகளில் மட்டும்)
  • புஷ் பட்டன் ஸ்டார்ட் (எக்ஸ்.இசட்+ வேரியண்டில் மட்டும்)
  • கேமரா உடன் கூடிய பார்க் அசிஸ்ட் (எக்ஸ்.இசட்+ வேரியண்டில் மட்டும்)
டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் பற்றி 'அ' முதல் 'ஃ' வரை..!!

இந்திய சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் தயாராகும் கார்களுக்கு ஏற்ற சந்தையாக உள்ளது. மாருதி விட்டாரா பிரிஸ்ஸா, ஃபோர்டு ஈகோஸ்போர்ட், மஹிந்திரா டியூவி300 போன்று டாடா நெக்ஸான் காரும் அதிக வரவேற்பை பெறும் என்பது உற்பத்தியாளர்களின் கணிப்பு.

மேலும்... #டாடா #tata
English summary
Read in Tamil: Planning To Book A Tata Nexon, Things You Should Know Before Booking The Nexon. Click for Details...
Story first published: Thursday, September 21, 2017, 16:52 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark