புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

Written By:

மிக மிக சவாலான விலையில், புதிய டாடா நெக்ஸான் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மிக சவாலான விலையில் வந்திருக்கும் புதிய டாடா நெக்ஸான் காரின் விலை உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

டாடா நெக்ஸான் எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல்களில் தலா 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். புதிய டாடா நெக்ஸான் கார் XE என்பது ஆரம்ப விலை வேரியண்ட்டாகவும், XM, XT ஆகியவை நடுத்தர வசதிகள் கொண்ட மாடலாகவும், XZ+ மற்றும் XZ+ டியூவல் டோன் வண்ணக் கலவையிலான வேரியண்ட்டுகள் அதிக வசதிகள் நிரம்பிய டாப் வேரியண்ட் மாடலாகவும் கிடைக்கும்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

புதிய டாடா நெக்ஸான் காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

இந்த காரில் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே சாப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் மியூசிக் சிஸ்டம் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியானது, 108.5 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 108.5 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும் டீசல் எஞ்சின் ஆகிய மாடல்ல்களில் கிடைக்கும்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

பெட்ரோல், டீசல் மாடல்கள் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் பின்னர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இந்த காரில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான டிரைவிங் மோடுகள் கொண்டதாக வந்துள்ளது. சாலை நிலை மற்றும் ஓட்டுனரின் விருப்பத்திற்கு ஏற்ப எஞ்சின் இயக்கத்தை மாற்றும் வசதி இது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

புதிய டாடா நெக்ஸான் கார் மொராக்கன் புளூ, வெர்மான்ட் ரெட், சியாட்டில் சில்வர், க்ளாஸ்கோ க்ரே மற்றும் கல்காரி ஒயிட் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகளும், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம் பெற்று இருக்கிறது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

புதிய டாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் மாடலின் வேரியண்ட் வாரியான விலை விபரங்களை இந்த அட்டவணையில் காணலாம்.

புதிய டாடா நெக்ஸான் காரின் விலைப்பட்டியல்

வேரியண்ட் எக்ஸ்ஷோரூம் விலை [டெல்லி]
எக்ஸ்இ பெட்ரோல் ரூ.5.85 லட்சம்
எக்ஸ்எம் பெட்ரோல் ரூ.6.49 லட்சம்
எக்ஸ்டி பெட்ரோல் ரூ.7.29 லட்சம்
எக்ஸ்இசட் ப்ளஸ் பெட்ரோல் ரூ.8.44 லட்சம்
எக்ஸ்இசட் ப்ளஸ் (டியூவல் டோன்) பெட்ரோல் ரூ.8.59 லட்சம்

*இரட்டை வண்ணக் கலவை வேரியண்ட்டுகள் வெர்மான்ட் ரெட் மற்றும் மொராக்கன் புளூ வண்ணங்களில் மட்டும் கிடைக்கும்.

நெக்ஸான் டீசல் விலை விபரம்

நெக்ஸான் டீசல் விலை விபரம்

புதிய டாடா நெக்ஸான் காரின் டீசல் மாடலின் வேரியண்ட் வாரியான விலை விபரங்களை இந்த அட்டவணையில் காணலாம்.

புதிய டாடா நெக்ஸான் காரின் விலைப் பட்டியல்

வேரியண்ட் எக்ஸ்ஷோரூம் விலை [டெல்லி]
எக்ஸ்இ டீசல் ரூ.6.85 லட்சம்
எக்ஸ்எம் டீசல் ரூ.7.39 லட்சம்
எக்ஸ்டி டீசல் ரூ.8.14 லட்சம்
எக்ஸ்இசட் ப்ளஸ் டீசல் ரூ.9.29 லட்சம்
எக்ஸ்இசட் ப்ளஸ் (டியூவல் டோன்) டீசல் ரூ.9.45 லட்சம்

*இரட்டை வண்ணக் கலவை வேரியண்ட்டுகள் வெர்மான்ட் ரெட் மற்றும் மொராக்கன் புளூ வண்ணங்களில் மட்டும் கிடைக்கும்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

புதிய டாடா நெக்ஸான் கார் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா டியூவி300 போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும்.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி ரூ.5.85 லட்சம் முதல் ரூ.9.45 லட்சம் வரையிலான விலையில் வந்துள்ள நிலையில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி ரூ.7.16 லட்சம் விலையிலிருந்து ரூ.10.82 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மாருதி பிரெஸ்ஸா கார் டீசல் மாடலில் மட்டுமே ரூ.7.38 லட்சம் முதல் ரூ.10.01 லட்சம் வரையிலான கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் 200 புதிய விற்பனையகங்களை திறந்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் கூறி இருக்கிறது. தற்போது நாடுமுழுவதும் 1,200 விற்பனை மையங்கள் தன் வசம் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையளிப்பதில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருவது தெரிய வருகிறது.

புதிய டாடா நெக்ஸான் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மேலும்... #டாடா #tata
English summary
Tata Nexon launched in India. Prices for the Tata Nexon start at Rs. 5.85 lakh for the petrol and Rs 6.85 lakh for the diesel (base variants) ex-showroom (Delhi). The Tata Nexon is the first sub-compact SUV from Tata Motors.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark