புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

Written By:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கும் படம் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

மஹாராஷ்டிர மாநிலம் ரஞ்சன்கவுனில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையில், இந்த புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட்டு இருக்கிறது. உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்த முதல் டாடா நெக்ஸான் காரின் படமும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Kawasaki Ninja Z1000 Launched InTamil - DriveSpark தமிழ்
 புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

உற்பத்தி பிரிவிலிருந்து முதல் டாடா நெக்ஸான் கார் வெளிவந்த நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கன்டெர் பட்செக் மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு தலைவர் மாயங்க் பரீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

புதிய டாடா நெக்ஸான் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் அதிகபட்சமாக 108.5பிஎச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும்.

 புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

இந்த காரில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கும். பெட்ரோல், டீசல் மாடல்கள் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருவதையும் டாடா மோட்டார்ஸ் உறுதி செய்துள்ளது.

 புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

இந்த புதிய காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட நவீன சாதனங்கள் இடம்பெற்றிருக்கும். அதேபோன்று, வசதிகளிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் மிகச் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது!

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், மிக விரைவில் டீலர்களுக்கு டெஸ்ட் டிரைவ் கார்கள் அனுப்பப்பட உள்ளன. வாடிக்கையாளர்கள் இந்த காரை விரைவிலேயே டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பண்டிகை காலத்தில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

English summary
Tata Nexon rolls out of Ranjangaon.
Story first published: Thursday, July 20, 2017, 15:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark