இந்தியாவில் டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் முன்பதிவு கோலாகல தொடக்கம்..!!
இந்தியாவில் டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் முன்பதிவு கோலாகல தொடக்கம்..!!
இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள டாடாவின் புதிய நெக்ஸான் எஸ்யூவி காருக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது.

நாட்டில் உள்ள அனைத்து டாடா விற்பனை மையங்களிலும் நெக்ஸான் எஸ்யூவிக்கான முன்பதிவு செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுவரவு எஸ்.யூ.வி காருக்கு குறைந்தபட்சம் ரூ.11,000 செலுத்தி ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள்
முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

2016 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா புதிய நெக்ஸான் எஸ்யூவி ரக காரை உலகிற்கு காட்சிப்படுத்தியது. அப்போது முதலே இந்தியாவில் பெரிய ரசிகர்கள் வட்டத்தை இந்த கார் பெற்று வருகிறது.
Recommended Video


ஏவிஎல், பாஷ், மஹேல் மற்றும் ஹனிவெல் போன்ற உலகையே கலக்கி வரும் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து நெக்ஸான் எஸ்.யூ.வி காரை டாடா உருவாக்கி வருகிறது.

1.2 லிட்டர் டர்போசார்ஜிடு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் என இருவேறு தேவைகளில் நெக்ஸான் எஸ்.யூ.வி விற்பனைக்கு வருகிறது.

6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள இந்த மாடல் தீபாவளி பண்டிகையை ஒட்டி விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் பெட்ரோல் மாடல் காரில் மூன்று-சிலிண்டர் டர்போசார்ஜிடு ரெவட்ரான் மோட்டார் உள்ளது.
அதேபோல இதனுடைய நான்கு சிலிண்டர் எஞ்சின் கொண்ட டீசல் மாடல் காரில் ஆயில் பர்னர் கொண்டுள்ளது.

டாடா நெக்ஸான் பெட்ரோல் மாடல் கார் 110 பிஎச்பி பவர் மற்றும் 260 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

அதேபோல டீசல் மாடல் கார் 110 பிஎச்பி பவர் மற்றும் 260 என்.எம் டார்க் திறனை வழங்கும் என டாடா தெரிவித்துள்ளது.

'நெக்ஸ்ட்-ஆன்' என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமே 'நெக்ஸான்'. இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த கார் செயல்திறன், வடிவமைப்பு போன்ற தேவைகளில்,

ஃபோர்டு நிறுவனத்தின் ஈகோஸ்போர்ட், மாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற எஸ்.யூ.வி மாடல் கார்களுக்கு போட்டியாக சந்தையில் களமிறங்குகிறது.


Click it and Unblock the Notifications








