மாருதி பலேனோவுக்கு போட்டியாக புதிய காரை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

Written By:

வரும் 2019ம் ஆண்டு புத்தம் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வருகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 போன்ற கார்களுக்கு போட்டியான அம்சங்களுடன் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Advanced Modular Platform[AMP]என்ற புதிய கட்டமைப்பில் இந்த புதிய கார் உருவாக்கப்படுகிறது.

புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

இந்த புதிய பிளாட்ஃபார்மிற்காக டாடா மோட்டார்ஸ் ரூ.2,500 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த பிளாட்ஃபார்மில் முதல் கார் மாடலாக தனது பிரிமியம் ஹேட்ச்பேக் காரை டாடா மோட்டார்ஸ் வெளியிட இருக்கிறது.

புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை எக்ஸ்451 என்ற குறியீட்டுப் பெயரில் டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருகிறது. புதிய ஹேட்ச்பேக் கார் மாடல் தற்போது விற்பனையில் இருக்கும் போல்ட் காருக்கும் மேலான ரகத்தில் நிலைநிறுத்தப்படும்.

Recommended Video
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் அம்சங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் இன்டீரியர் தாத்பரியங்கள் புதிய ஹேட்ச்பேக் காரில் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. தரத்திலும் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.

புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரில் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை பயன்படுத்தவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரும் என்பது கணிப்பு.

புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மட்டுமின்றி, இந்த காரின் செடான் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களுடன் இந்த புதிய டாடா செடான் கார் போட்டி போடும்.

புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

இந்த இரு தயாரிப்புகளும் வடிவமைப்பிலும், வசதிகளிலும், தரத்திலும் மிகச் சிறப்பாக இருப்பதுடன், போட்டியாளர்களுக்கு மிக சவாலான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: மாதிரிக்காக டாடா டாமோ சி க்யூப் காரின் படங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

English summary
All new Tata Premium Hatchback Car Launch Details.
Story first published: Wednesday, August 23, 2017, 15:11 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos