Subscribe to DriveSpark

டாடா டாமோ ரேஸ்மோ காரை சொந்தமாக அசெம்பிள் செய்யும் வாய்ப்பு!

Written By:

சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் நடந்து வரும் சர்வதேச வாகன கண்காட்சியில், டாடா டாமோ ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த கார் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இந்தியாவின் முதல் 'Kit Car' மாடலாக டாடா டாமோ ரேஸ்மோ கார் விற்பனைக்கு வர இருக்கிறதாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
டாடா டாமோ ரேஸ்மோ காரை சொந்தமாக அசெம்பிள் செய்ய வாய்ப்பு

'கிட் கார்' என்றவுடன் குழம்பிக் கொள்ள வேண்டாம். பாகங்களாக தருவித்து உங்கள் ஊரில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் டீலர்களில் சுடச்சுட கோர்த்து முழுமையாக காராக வாங்கிக் கொள்ள முடியுமாம். இப்போது ஆன்லைனில் எப்படி சைக்கிள்களை ஆர்டர் செய்து வாங்கி நாமே அசெம்பிள் செய்து கொள்கிறோம் அல்லவா, அதேபோன்ற முறைதான் இது.

டாடா டாமோ ரேஸ்மோ காரை சொந்தமாக அசெம்பிள் செய்ய வாய்ப்பு

டீலர்களில் மட்டுமல்லாது, சொந்தமாகவும் இந்த காரை அசெம்பிள் செய்யும் வாய்ப்பும் இருக்கிறதாம். சொந்தமாக இந்த காரை அசெம்பிள் செய்பவர்களுக்கு, அதற்கான விரிவான கையேடு, செயல்விளக்க முறைகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா டாமோ ரேஸ்மோ காரை சொந்தமாக அசெம்பிள் செய்ய வாய்ப்பு

பொதுவாக கார் தயாரிப்புக்காக ஆயிரக்கணக்கான உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கென அமைக்கப்படும் பிரம்மாண்ட தொழிற்சாலைகளில் பல்வேறு பிரிவுகளை கடந்து முழுமை அடைந்து கார்கள் உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவருகின்றன.

டாடா டாமோ ரேஸ்மோ காரை சொந்தமாக அசெம்பிள் செய்ய வாய்ப்பு

ஆனால், டாடா டாமோ ரேஸ்மோ காரை எளிதாக அசெம்பிள் செய்யும் விதமாக உதிரிபாகங்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருக்குமாறு உருவாக்கப்பட்டு இருக்கிறதாம். இத்தாலி நாட்டின் டூரின் நகரிலுள்ள டாடா மோட்டார்ஸ் டிசைன் ஸ்டூடியோவில்தான் இந்த கார் டிசைன் செய்யப்பட்டது.

டாடா டாமோ ரேஸ்மோ காரை சொந்தமாக அசெம்பிள் செய்ய வாய்ப்பு

மேலும், MOFlex Multi Material Sandwich[MMS] என்ற விசேஷமான கட்டமைப்பு முறையில் இந்த காரை உருவாக்கி உள்ளனர். இது மிகவும் புதுமையான கார் வடிவமைப்பு முறையாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, உதிரிபாகங்கள் சிறிய அளவில் இல்லாமல் எளிதாக கோர்க்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட உள்ளது.

டாடா டாமோ ரேஸ்மோ காரை சொந்தமாக அசெம்பிள் செய்ய வாய்ப்பு

"டாடா டாமோ ரேஸ்மோ காரை தொழிற்சாலையிலேயே முழுமையாக தயாரிக்கப்பட மாட்டாது," என்று டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் குன்ட்டெர் பட்செக் தெரிவித்துள்ளார். மேலும், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பின் நாடு முழுவதும் அமைக்கப்பட இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட அசெம்பிளிங் மையங்களில் இந்த கார் கட்டமைத்து தரப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

டாடா டாமோ ரேஸ்மோ காரை சொந்தமாக அசெம்பிள் செய்ய வாய்ப்பு

இது வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும். டாடா டாமோ ரேஸ்மோ கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் கூபே ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடல். இந்த கார் 3,835மிமீ நீளமும், 1,810மிமீ அகலமும், 1,208மிமீ உயரமும் கொண்டது. 2,430மிமீ வீல் பேஸையும், 165மிமீ கிரவுண்ட் க்ளியரன்ஸும் உடையது.

டாடா டாமோ ரேஸ்மோ காரை சொந்தமாக அசெம்பிள் செய்ய வாய்ப்பு

இரண்டு பேர் செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கிறது. இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 210 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டாடா டாமோ ரேஸ்மோ காரை சொந்தமாக அசெம்பிள் செய்ய வாய்ப்பு

இந்த காரில் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 0-100 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் எட்டிவிடும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஸ்போர்ட்ஸ் கார் ஆர்வலர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

புதிய டாடா டாமோ ரேஸ்மோ காரின் படங்கள்!

புதிய டாடா டாமோ ரேஸ்மோ காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.

English summary
Read in Tamil: Tata Motors' new MOFlex platform system uses fewer modules which will allow the RaceMo to be assembled at workshops anywhere in the country.
Story first published: Monday, March 13, 2017, 8:55 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark