டாடா டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விரைவில்!

Written By:

டாடா டியோகா கார் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால், உற்சாகம் அடைந்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ காரில் கூடுதல் தேர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

டாடா டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விரைவில்!

அதன்படி, டாடா டியாகோ காரில் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களை விரைவில் களமிறக்க உள்ளது. அடுத்த மாதமே இந்த புதிய ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விரைவில்!

டாடா டியாகோ காரின் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் என இரண்டிலுமே ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதேநேரத்தில், தோற்றத்தில் எந்தவிதமான மாறுதல்களும் செய்யப்பட்டு இருக்காது.

டாடா டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விரைவில்!

டாடா டியோகா காரின் பெட்ரோல், டீசல் மாடல்களின் எக்ஸ்டி மற்றும் எக்ஸ்எம் வேரியண்ட்டுகள் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

டாடா டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விரைவில்!

மாருதி செலிரியோ ஏஎம்டி, ரெனோ க்விட் 1.0லிட்டர் ஏஎம்டி மாடல்களுக்கு இந்த கார் நேரடி போட்டியாக இருக்கும். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆட்டோமேட்டிக் காருக்கும் இது நிச்சயம் சவாலாக இருக்கும்.

டாடா டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விரைவில்!

ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட டாடா டியாகோ காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா டியாகோ காரின் பெட்ரோல் மாடலில் 84 பிஎச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சினும், டீசல் மாடலில் 69 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.05 லிட்டர் எஞ்சினும் உள்ளது.

டாடா டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விரைவில்!

இதனிடையே, டாடா டியாகோ காரின் அடிப்படையிலான செடான் மாடலாக வரும் கைட்-5 காரையும் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்மிட்டுள்ளது. இதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் டாடா கைட்-5 காம்பேக்ட் செடான் கார் வருகை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்கள்!

அண்மையில் விற்பனைக்கு வந்து இளைஞர்களை கவர்ந்திழுத்து வரும் புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Apart from the AMT gearbox, there will be no change to the styling and design in the new avatar.
Story first published: Monday, February 6, 2017, 16:21 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos