ரூ. 5.39 லட்சத்தில் புதிய டாடா டியாகோ ஆட்டோமேடிக் கார் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

இந்தியாவில் இன்று முதல் டியாகோ ஆட்டோமேடிக் ஹேட்ச்பேக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

இவை பெட்ரோல் வேரியண்ட்டாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. வாங்கக்கூடிய விலையிலான ஆட்டோமேடிக் கார் என்ற அடிப்படையில் இதன் விலையை நிர்ணயித்துள்ளது டாடா நிறுவனம்.

டாடா டியாகோ ஆட்டோமேடிக் கார் விற்பனைக்கு அறிமுகம்

டாடா டியாகோ கார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகின. இவை டாடா கைட் பிராண்டின் மாதிரி மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த டியாகோ ஆட்டோமேடிக் (ஏஎம்டி) கார் இன்று விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

டாடா டியாகோ ஆட்டோமேடிக் கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஆட்டோமேடிக் டியாகோவில் ‘ஆட்டோமேடிக்', ‘ரிவர்ஸ்', ‘நியூட்ரல்' மற்றும் ‘மேனுவல்' என 4 கியர் பொசிஷன்கள் உள்ளன. மேலும் சிறந்த டிரைவிங் அனுபவத்தை வழங்க ‘சிட்டி' மற்றும் ‘ஸ்போர்ட்' என இரண்டு டிரைவிங் மோட்களும் தரப்பட்டுள்ளன.

டாடா டியாகோ ஆட்டோமேடிக் கார் விற்பனைக்கு அறிமுகம்

டாடா டியாகோ ஆட்டோமேடிக் (ஏஎம்டி) காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 84 பிஹச்பி ஆற்றலையும், 114 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாகும்.

டாடா டியாகோ ஆட்டோமேடிக் கார் விற்பனைக்கு அறிமுகம்

டியாகோ ஏஎம்டி கியர்பாக்ஸில் ‘க்ரீப்' என்ற புதிய சிறப்பம்சம் உள்ளது. இந்த க்ரீப்பை பயன்படுத்தும் போது ஆக்ஸிலேட்டரை உபயோகிக்காமல், பிரேக் விசையை ரிலீஸ் செய்யும் போது கார் மெதுவான வேகத்தில் நகரும். இது மலைச் சாலை போன்ற சாய்வு நிலையிலான சாலைகளில் செல்லும் போது காரை பின்னோக்கி நகரச் செய்யாமல் தடுக்கும்.

டாடா டியாகோ ஆட்டோமேடிக் கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய டியாகோவின் அறிமுகம் குறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன தொழிற்பிரிவுத் தலைவர் மயன்க் பட்டேல் கூறுகையில், "2016ல் டியாகோ அறிமுகமானதில் இருந்து அவை கவர்ச்சி, புதுமை மற்றும் சிறப்பம்சங்கள் பொருந்திய காராக தினித்து நிற்கின்றன, இவை எங்கள் வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும்" என்றார்

டாடா டியாகோ ஆட்டோமேடிக் கார் விற்பனைக்கு அறிமுகம்

அறிமுகமானதிலிருந்தே விற்பனையில் டியாகோ கார்கள் சிறந்து விளங்குகின்றன. மாதம் ஒன்றிற்கு சராசரியாக 4000 கார்கள் விற்பனையாகி வருவதுடன், இக்கார்கள் மூலமாக டாடா நிறுவனம் கார் நிறுவனங்கள் தரவரிசையில் இந்திய அளவில் 4வது இடத்தையும் பிடித்துள்ளது.

டாடா டியாகோ ஆட்டோமேடிக் கார் விற்பனைக்கு அறிமுகம்

குறைந்த விலை கொண்ட ஏஎம்டி கார்கள் செக்மெண்டில் டியாகோ கார்கள், மாருதி சுசுகியின் செலிரியோ, இக்னிஸ், ஹுண்டாய் ஐ10 மற்றும் ரெனால்ட் க்விட் கார்களுடன் போட்டியில் உள்ளது.

டாடா டியாகோ ஆட்டோமேடிக் கார் விற்பனைக்கு அறிமுகம்

ரூ. 5.39 லட்சம் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் டியாகோ கார்கள் விற்பனைக்கு வந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக கோவையை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

டாடா டியாகோ காரின் படங்கள்: 

English summary
The Tata Tiago AMT has been launched in India, making the Tiago AMT one of most affordable automatic hatchbacks in India.
Story first published: Monday, March 6, 2017, 18:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark